Search This Blog

Monday, February 27, 2012

அருள் மழை ----------- 42


*நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்கள் வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான எண்ணம்.
*அதே நேரம், ஆசையை வளர்த்துக் கொண்டே போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல் போய்விடும். சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி.
*எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவு எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயம். வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளியவீடு இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும். இதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.
*நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்குச் செய்யும் மிகப் பெரிய பரோபகாரம். கிணற்றில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை நம்மால் உணரமுடிகிறது.
*எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை தண்ணீரில் போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல, நம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் என்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும். அப்போது துன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத் தொடுவதே இல்லை. நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரமலேசாகி விடும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment