Search This Blog

Monday, February 20, 2012

ஃபேஸ்புக் ஐ.பி.ஓ.


மூக வலைதளமான ஃபேஸ்புக், ஐ.பி.ஓ. வர அனுமதி கேட்ட செய்தி வெளிவந்ததிலிருந்து அமெரிக்காவே திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.பி.ஓ. எப்போது வரும், எத்தனை டாலர் விலை இருக்கும் என பலப்பல கேள்வி. இதற்கிடையில், ஃபேஸ்புக் ஐ.பி.ஓ. வந்தால், ஒரே நாளில் குறைந்தது 1,000 பேர் புதிதாக கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என்கிறது இன்னொரு தகவல். எப்படி?

அமெரிக்காவில் ஒரு புது கம்பெனியில் வேலைக்குச் சேரும்போது, சம்பளம் போக அந்த கம்பெனியின் பங்குகளையும் கொஞ்சம் கொடுப்பது வழக்கம். கலிபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தில் பணிபுரியும் பலர் ஸ்டாக் ஆப்ஷன் மூலம் பங்குகளை பெற்றிருக்கிறார்கள்.ஃபேஸ்புக் இப்போது ஐ.பி.ஓ. வருவதன் மூலம் பொறியாளர்கள், சேல்ஸ்மேன் மற்றும் சமையல்காரர் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் ஆயிரம் பேர்  பெரும்பணக்காரர்களாக மாறப் போகிறார்கள்.  இந்த ஐ.பி.ஓ. மூலம் சக்ஸஸ்ஃபுல்லாக நிதி திரட்டினால், மார்க் ஜக்கர்பர்க் 27 வயதில் உலகில் மிகப் பெரிய பணக்காரராகிவிடுவார்.  2009-ல் ஃபேஸ்புக்கில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பொறியாளருக்கு (15 வருட முன் அனுபவம் உள்ளவர்) 65,000 ஷேர்கள் வாங்கும் உரிமை வழங்கப்பட, அது பின்னர் 3,25,000 ஷேர்களாக பெருக, ஐ.பி.ஓ.வுக்குப் பிறகு அவருக்கு கிடைக்கப் போவது 60 கோடி ரூபாய்.  ஏழு வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் கம்பெனியின் சுவர்களில் படம் வரையும் வேலை கிடைத்தது டேவிட்டுக்கு. இவரிடம் பேஸ்புக் நிறுவனம் செய்யும் வேலை பற்றி எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியில் பெயின்ட் அடிக்க கூலியாக என்ன வேண்டும், பணமா, ஸ்டாக்கா? என்று கேட்டார்கள். விளங்கியதோ இல்லையோ, அன்று அவன் சொன்ன பதிலால் இப்போது அவன் 1,000 கோடி ரூபாய்க்கு அதிபதி!



விகடன் 

1 comment:

  1. அருமைப் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete