வைஷ்ணவ
சம்பிரதாயத்தை
சேர்ந்த
ஒரு
அம்மா
பெரியவாளை
தரிசனம்
பண்ணி
அவர்கள்
மரபுப்படி
நமஸ்கரித்து
விட்டு
நின்றாள்.
அவள்
கண்களில்
ஏதோ
ஏக்கம்,
எதிர்பார்ப்பு,
நம்பிக்கை.
மெல்ல
பெரியவாளிடம்
விண்ணப்பித்தாள் ”
குடும்பத்துல
பலவித
கஷ்டங்கள்.
வியாதி
வெக்கை.
ஒரு
பொண்ணுக்கு
கல்யாணம்
ஆகி
ஏழெட்டு
வருஷம்
ஆகியும்,
குழந்தை
இல்லை.
இன்னொரு
பொண்ணுக்கு
வயசு
எகிறிண்டே
போறதே
ஒழிய
வரன்
அமைய
மாட்டேங்கறது.
பையனுக்கோ
படிப்பே
வரலை.
பண
கஷ்டம்………கேரளா
போய்
நம்பூதிரி
கிட்டே
பிரச்னம்
பாத்தோம்.
பித்ரு
தோஷமாம்.
பித்ரு
கர்மாக்களை
ஒழுங்கா
பண்ணாம
விட்டதுக்கு
ராமேஸ்வரம்
போய்
பரிகாரம்
பண்ணணும்…ங்கறார்.
வைஷ்ணவ
சம்பிரதாயப்படி,
ராமேஸ்வர
யாத்ரை,
பரிகார
சடங்கு
எதுவுமே
பண்ணக்
கூடாது.
என்ன
பண்ணறதுன்னே
தெரியலை.
பெரியவாதான்
வழி
காட்டணும்”
என்றாள்.
“நீங்க
தென்கலையா?”
“ஆமா”
“உப்புச்சாறு,
சாணிச்சாறு,
சடைச்சாறு….ங்கற
மூணும்
தென்கலைக்கு
கெடையாது…….”
”
ஆமாமா,
எங்க
அம்மா
கூட
உப்புச்சார்,
சாணிசார்,
சடைசார்…..ன்னு
சொல்லுவா”
“அதேதான்.
ராமேஸ்வர
சமுத்ர
ஸ்நானம்,
உப்புச்சாறு.
பஞ்சகவ்ய
பிராசனம்
சாணிச்சாறு.
கங்காஸ்நானம்
சடைச்சாறு.
ஏன்னா,
பரமேஸ்வரனோட
சடையில்
இருந்துதானே
கங்கை
வரது!
அதுனால,
சம்பிரதாய
விரோதமா
போகவேணாம்.
அதுக்கு
பதிலா,
நித்யம்
சாளக்ராமம் [பெருமாள்]
திருவாராதனம்
பண்ணி,
திருமஞ்சன
தீர்த்தம்
சாப்பிடணும்.
அப்புறம்,
எகாதசியன்னிக்கு
உபவாசம்
இருங்கோ.
பால்,
பழம்,
கிழங்கு
சாப்பிடலாம்.
அன்னிக்கு
ஓங்காத்துக்காரர்
பன்னெண்டு
திருமண்
இட்டுண்டு
திருவாராதனம்
பண்ணணும்.
சரியா?
மறுநா,
த்வாதசியன்னிக்கி
சீக்கிரமாவே
திருவாராதனம்
பண்ணிட்டு,
துளசி
தீர்த்தம் சாப்டுட்டு
பாரணை
பண்ணணும்.
தெனமும்
ஒரு
பசுமாட்டுக்காவது
ஒரு
கைப்பிடி
புல்
தரணும்.
இப்பிடி
பண்ணினா,
சர்வ
பிராயச்சித்தம்
பண்ணினாப்ல
ஆகும்.
பண்ணுவியா?”
பெரியவாளோட
உபதேசம்
ஆக
ஆக,
அந்த
அம்மா
அழுகையை
அடக்க
முடியாமல்
மாலை
மாலையாக
கண்ணீர்
விட்டாள்.
“பெருமாளே
வந்து
சொன்னா
மாதிரி
இருக்கு
பெரியவா.
என்னென்னமோ
நெனச்சு
குழம்பிண்டு
இருந்தேன்.
ராமேஸ்வரம்
போகத்தான்
வேணும்னு
சொல்லுவேள்னு
நெனச்சேன்.
பெரியவா
சுத்த
ஸ்படிகம்.
சம்பிரதாய
விரோதமில்லாம
வழி
காட்டிட்டேள்! “
காமத்தை
வென்ற
காமேஸ்வரனே
நம்மை
மாதிரி
அல்பங்களுக்காக
இறங்கி
வந்து
நாவினிக்க “நாராயண
நாராயண”
என்று
சொல்லி
ஆசிர்வதிக்கும்போது,
எல்லா
சம்பிரதாயங்களும்
அவனுள்ளே
அடக்கம்தானே!
"நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅருமை.
ReplyDelete