நீச்சல் மனிதனுக்கு எப்போது தெரிந்திருக்கும்? மனித நாகரிகம்
நதிக்கரையில்தான் உருவாகி, பிறந்து, வளர்ந்து வந்திருக்கிறது. ஆற்றில்
விலங்குகள் நீந்துவதைப் பார்த்து,
மனிதஇனம் நீந்த கற்றுக்கொண்டிருக்க வேண்டும். சுமார் 9,000 ஆண்டுகளுக்கு
முன்பிருந்த குகை ஓவியங்களில் நீச்சல் பற்றிய பதிவு காணப்படுகிறது. ஆனால்
எழுத்து மூலமான
பதிவு சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்புதான் கிடைத்திருக்கிறது.
பாபிலோனியர், ஆசியர்களின் சுவரோவியங்களில் மனிதனின் தொடக்ககால நீச்சல்
திறமையைத் தெரிவிக்கும்
படங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பழைமையானது ஒருகாலத்தில் நீர்வளம் நிறைந்த
கெபீர் பாலைவன நீச்சல் படம். உலகின் பழங்கால நாகரிக நாடுகளான எகிப்து,
போனிசியா,
பெர்சியா, ரோம், கிரேக்க நாட்டு மக்கள் நீச்சலில் சிறந்து இருந்தனர்.
நீச்சல் சரியாகத் தெரியாதவருக்கு, கல்வி கிடையாது என்று தத்துவமேதை
பிளாட்டோ அறிவித்திருக்கிறார். 1603 ல் ஜப்பானில் முதல் தேசிய நீச்சல் அமைப்பு உருவானது. அப்போதைய பேரரசர்
கோயோசெல், பள்ளிக் குழந்தைகள் கட்டாயம் நீச்சல் பழக வேண்டும் என்றார். பிரெஞ்சு எழுத்தாளர் மேல்சிசெடேக் தேவ்நாட் 1696-ல், நீச்சல் கலை பற்றி
எழுதினார். பின்னர் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்யப்பட்டது. இதுவே
நீண்ட காலம் வரைநீச்சல் சொல்லித் தரும் புத்தகமாக இருந்தது. பெஞ்சமின்
ஃப்ராங்க்ளின் பத்து வயதிலேயே நீந்துவதற்கு உதவியாக, காலில்
மாட்டிக்கொள்ளும் துடுப்பை உருவாக்கி,
பெரும் புகழ்பெற்றார். பின்னர் நீச்சலில் மூழ்குபவர்களைக் காக்கும் ஓர்
அமைப்பு சீனாவில் உருவானது. 1847, ஸ்டாக்ஹோமில் நான்சி எட்பெர்க் என்ற பெண் போதனையாளர், ஆண்களுக்கும்
பெண்களுக்கும் நீச்சல் கற்றுத்தந்தார். பின்னர் டென்மார்க், நார்வேயில்
பெண்களுக்குத்
தனியாக நீச்சல் கற்றுத்தரும் வழக்கம் ஏற்பட்டது. 1862-ல் உள்அரங்க நீச்சல்
குளம் இங்கிலாந்தில் கட்டப்பட்டது. பக்கவாட்டில் நீந்தும் முறை 1880க்குப்
பிறகுதான் ஏற்பட்டது. ஏதென்ஸில் 1896-ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல்
ஆண்களுக்கான போட்டியாகச் சேர்க்கப்பட்டது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த
ஆல்பிரெட் ஹாஜோஸ்
100 மீ. ஃப்ரீ ஸ்டைலில் தங்கப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக்கில்
1912க்குப் பின்னரே பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஒலிம்பிக்
விளையாட்டில், நீச்சல் போட்டி மிகவும்
பிரபலமானது. நீச்சல் இன்றைய அத்தியா வசிய உடற்பயிற்சிகளில்
ஒன்றாகிவிட்டது.
1908-ல் உலக நீச்சல் அமைப்பு, சர்வதேச நீச்சல் கழகத்தை உருவாக்கியது.
1922-ல் ஜானி வீஸ்முல்லர் முதன் முதலில் 100 மீ. தூரத்தை ஒரு
நிமிடத்துக்கும் குறைவான
நேரத்தில் நீந்தி சாதனை படைத்தார். 1924-ல் கோடை ஒலிம்பிக் போட்டிகள்
தொடங்கப்பட்டு, அதில் நீச்சலும் சேர்க்கப்பட்டது. குப்புறப்படுத்து, மார்பை
நகர்த்தி அடிக்கும் நீச்சல்
முறைதான் மிகவும் பழைமையானது நீச்சல் இன்று குளியல், மீன்பிடித் தல், பொழுதுபோக்கு, உடற்பயிற்சி
மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுகிறது. முத்துக் குளித்தல்,
மீன் பிடித்தல் போன்ற
தொழில்களுக்கு நீச்சல் கட்டாயம் தேவை. கடற்படையில் மனிதர்களைக் காப்பாற்ற
உயிர்காக்கும் நீச்சல் படை இருக்கிறது. கடல் வாழ் உயிரினங்கள் பற்றிப்
படிக்க, அவற்றின்
இயற்கை நிலையிலேயே அறிய, நீச்சல் தெரிய வேண்டும். ராணுவத்துக்கும் கட்டாயம்
நீச்சல் தெரியவேண்டும். சிலசமயம் சில இடங்களைக் கண்டறியவும், ஒற்றராக
இருக்கவும் நீச்சல்
கட்டாயம் தேவை. நீச்சலில் சில அறிவியல் அடிப்படைகளும் உள்ளன. முக்கியமாக மிதத்தல் விதி
போன்ற இயற்பியல் விதிகள் நீச்சலில் உள்ளன. மனித உடலில் 70%க்கு மேல் நீர்
உள்ளது.
நமது உடலின் அடர்த்தி கிட்டதட்ட நீரின் அடர்த்தியுடன் ஒட்டியது. நம்
நுரையீரலில் உள்ள காற்றாலும், அதன் அமைப்பாலும், நீரைவிட அடர்த்தி
குறைவாகத் தோன்றுகிறது.
எனவேதான் நாம் நீரில் மிதக்க முடிகிறது. வேகமாக நீந்த, இரண்டு வழி
முறைகளைப் கைகொள்ளவேண்டும்.1. தன் ஆற்றலை அதிகரித்தல் 2. நீரின் தடையைத்
தாக்குப்பிடித்து
மிதத்தல். கடல், ஏரி, குளம் போன்ற பொதுவான திறந்த இடத்தில் நீந்துவதும், அதற்கான
போட்டிகளும் இப்போது வந்து விட்டன. கடலில் 25 கி.மீ. தூரம் வரை கூட
பெண்களும்
ஆண்களும் நீந்துகின்றனர். ஆனால் ஒலிம்பிக்கில் 10 கி.மீ தொலைவு மட்டுமே
அனுமதி. நீச்சல் போட்டிகளில் நான்கு வகை நீச்சல் முறைகள் மட்டுமே
அனுமதிக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, நீருக்கடியில் நீந்தும் டால்பின் உதைத்தல் முறை
வந்துள்ளது. இது தொடக்கத்தில் நீந்தும் வேகம் அதிகரிக்க உதவுகிறது. நீச்சலுக்கு அடிப்படை வேகமும் உடற்திறனும்தான். நீச்சல் உடலுக்கு ஓர்
அற்புதமான பயிற்சி. இதற்கு இணையான பயிற்சி வேறு எதுவுமே இல்லை.
நீச்சலின்போது உடலின்
அனைத்து உறுப்புகளும் ஒன்றிணைந்து பணிபுரிகின்றன. வளர்சிதை மாற்றத்தை நன்கு
இயக்குகிறது. முக்கியமாக இதயத்துக்கும், நுரையீரலுக்கும், ரத்த
ஓட்டத்துக்கும் அதிகம்
உதவுகிறது. ஒருமணி நேர நீச்சல், நம் உடலில் 650 கலோரியை எரிக்கிறது.
நடத்தல், சைக்கிள் ஓட்டுதலை விட கலோரி அதிகம் செலவாகிறது. நீச்சல் ஒருவரின்
மன
அழுத்தத்தைக் குறைக்கிறது.
பென்னாயிட் லேகொம்ட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் 5,600 கி.மீ தூரம்,
ஒருநாளைக்கு 7 - 8 மணி நேரம் என , 72 நாள்கள் தொடர்ந்து நீந்தினார்.
முதல் கப்பல் நீச்சல் குளம் டைட்டானிக் கப்பலில்தான் கட்டப்பட்டது.
குழந்தைகள் 4 வயதுக்கு முன் தனியாக நீந்த முடியாது.
கனடாவிலும் மெக்சிகோவிலும் பொதுப்பள்ளிகளில் நீச்சல் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளில் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பிலிருந்து கட்டாயம் நீச்சல் கற்கவேண்டும்.
இங்கிலாந்துக்கும் பிரான்ஸ்க்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை 18 வயது இளம்பெண் நீந்தி, கடந்து சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment