மாங்கல்யம் தந்துநானே..." என்று மந்திரம் சொல்லி தாலிகட்டி, ஸப்தபதிகள்
எடுத்து வைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்னியில் பொரியிட்டு
முடியும் பாரம்பரியத்
திருமணங்கள் நமக்கு நன்கு அறிமுகமானவைதான். ஆனால் அதைத் தவிர வேறு வகையான
திருமண முறைகளும் இருக்கின்றன.
தமிழ்வழி திருமணம்:
ஈ.வெ.ரா. பெரியார், வைதீகர்கள் மற்றும் சடங்குகள் இல்லாமல் சுயமரியாதை
திருமணங்களை அறிமுகப்படுத்திய போது மறைமலை அடிகள் ‘பன்னிரு திருமுறை
மற்றும்
திவ்யப் பிரபந்தம் சொல்லி திருமணம் நடத்தும் முறையை அறிமுகப்படுத்தினார்"
என்கிறார் திராவிட இயக்க ஆராய்ச்சியாளர் க.திருநாவுக்கரசு. தமிழ்வழித் திருமணங்களைப் பிரபலப்படுத்தியதில் ஆட்சிமொழிக் காவலர்
கி.ராமலிங்கனாருக்குப் பெரிய பங்கு உண்டு. தர்மபுரம், திருவாவடுதுறை
ஆதினங்களில் தமிழ்வழித் திருமணத்தை
நடத்தி வைக்க தீட்சை கொடுக்கிறார்கள். நமது பாரம்பரிய திருமண முறைகளில்
உள்ள எல்லா சடங்குகளுக்கும் தேவாரம் மற்றும் பிரபந்தத்தில் பொருந்தி வரும்
பாடல்கள் உண்டு.
தாலி கட்டியவுடனேயே மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்ற சம்பந்தரின் தேவாரப் பாடல் பாடப்படும். சங்க இலக்கியமான அகநானூரில் புரோகிதர் வைத்தும், வைக்காமலும், இரண்டுவித
திருமணங்கள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்ததாகச் சொல்லியிருக்கிறது"
என்கிறார்
திருநாவுக்கரசு. இதுதவிர முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் நடத்தி
வைத்த தமிழ்வழித் திருமணங்கள் மிகவும் பிரபலமானவை.
காவல் நிலைய டும்...டும்...
‘இளம் ஜோடிகள் காவல் நிலையத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்’
என்று அடிக்கடி செய்தி தாள்களில் நாம் படிப்பதுண்டு. காவல் நிலையங்களில்
கல்யாணம்
செய்து வைக்கிறார்களா? என்ன நடக்கிறது என்றால், காதலித்து விட்டு
டிமிக்கி கொடுக்கும் காதலனோ அல்லது காதலியோ, இருவரில் ஒருவர் காவல்
நிலையத்துக்குப்
புகாருடன் வந்தால் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து அவர்கள்
குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விவகாரத்தை சுமுகமாக
முடிப்போம். அதேபோல் காதல் ஜோடிகளுக்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டவுடன், ஓடிப்போகும்
ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு எங்களிடம் வருவார்கள். நாங்கள் எல்லோரையும்
அழைத்துப் பேசித்
தீர்ப்போம். பிரச்னை தீர்ந்த சந்தோஷத்தில் ஜோடிகள் மாலை மாற்றி தாலி
கட்டிக் கொள்வார்கள். திருமணம் சட்டபூர்வமாக இது மட்டும் போதாது. எனவே உடனே
திருமணத்தை
பதிவு செய்ய வலியுறுத்துவோம். பதிவுச் சான்றிதழை காவல் நிலையத்தில்
கொடுத்தால் மட்டுமே, இது தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும்" .
ஆரிய சமாஜ் திருமணம்:
ஆர்ய சமாஜ் நடத்தி வைக்கும் திருமணங்கள் வித்தியாசமானவை. மதம் மாறி இந்து
சமயத்தில் இணைபவர்களுக்கும் ஆர்ய சமாஜ் திருமணங்கள் நடத்தி வைக்கிறது.
அக்னி
வளர்த்து வேதங்கள் சொல்லி நடத்தப்படுகிற இந்தத் திருமணங்கள் அதிகபட்சம் அரை
மணியில் முடிந்து விடும்.
தாலி கட்டிக் கொள்ளாமல் ராகு காலத்தில் நடத்தப்படும் பெரியார் பாணி
சுயமரியாதைத் திருமணங்களும் நடக்கின்றன. ஆனால் எந்த முறையில் திருமணம்
செய்து கொண்டாலும்
திருமணத்தை முறைப்படி திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய
வேண்டும்.
ஈஷா திருமணம்:
ஈஷா நிறுவனர் ஸத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் கோவை வெள்ளியங்கிரிதியான லிங்க வளாகத்தில் தேவி லிங்க பைரவி திருக்கோயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் சாதி, மதம், பாகுபாடுகள் இல்லாமல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.
இன்று காலப்போக்கில் நமது திருமணச் சடங்குகள் அர்த்தமற்றவையோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் உண்மையில் அர்த்தமுள்ள சடங்குகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஸத்குருவால் லிங்க பைரவி திருக்கோயிலில் அறிமுகப்படுத்தப்பட்டிருகிறது.
ப்ரியன்
நல்ல தகவல் கிடைத்தது.. தேடியதும் கிடைத்தது நன்றி..
ReplyDelete