Search This Blog

Tuesday, May 08, 2012

சந்தோஷம் எங்கே?


* காலையில் எழுந்ததும் கடவுளுக்கு ஒரு குட்மார்னிங் சொல்லி விட்டு ‘ஹேப்பி இன்று முழுவதும் ஹேப்பி’ என்று இன்றைய நாளைத் துவக்குங்கள்.

* உண்மையான சந்தோஷம் எது என கண்டுக் கொண்டால், எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம்.

* நம்முடன் இருப்பவர்களைச் சந்தோஷமாக வைத்துக்கொண்டால், நாம் சந்தோஷத்துடன் இருக்க முடியும்.

* நம்முடன் இருப்பவர்களிடம் கூடுமானவரை உண்மையாக இருப்போம்.
* மனதில் தோன்றியதை எல்லாம் பேசக்கூடாது; செய்யக்கூடாது. மனசாட்சிப்படியே பேச, செய்ய வேண்டும்.

* சிந்தனையில் முதுமையும், செயலில் இளமையும் வேண்டும்.

* பணம் சம்பாதிப்பதற்கு முன் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். (கடன் வாங்காமல் இருப்பது சாலச் சிறந்தது.)

* நம் நேரத்தை விரயமாக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது.

* முக்கிய தருணங்களில் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. பேசாமலேயும் இருக்கக் கூடாது.

* மற்றவர் உணர்வை நாம் மதித்தால் நம் உணர்வு மதிக்கப்படும்.

* நல்ல யோசனையும், முடிவும் உரிய தருணத்தில் எடுக்காவிட்டால் பயனற்றதே.

* எதிர்மறையான பேச்சு, சிந்தனை உடையவர்களின் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

* ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழப் பழகினால், எப்போதும் சந்தோஷம் நம்மிடமே!




பார்வதி கோவிந்தராஜ்

5 comments:

  1. நம்முடன் இருப்பவர்களைச் சந்தோஷமாக வைத்துக்கொண்டால், நாம் சந்தோஷத்துடன் இருக்க முடியும்.

    * நம்முடன் இருப்பவர்களிடம் கூடுமானவரை உண்மையாக இருப்போம்.
    * மனதில் தோன்றியதை எல்லாம் பேசக்கூடாது; செய்யக்கூடாது. மனசாட்சிப்படியே பேச, செய்ய வேண்டும்.

    அருமை

    ReplyDelete
  2. அருமையான கருத்துகள் ...

    ReplyDelete
  3. //எதிர்மறையான பேச்சு, சிந்தனை உடையவர்களின் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

    //

    100% உண்மை

    ReplyDelete
  4. நல்ல கருத்துக்கள் சார் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete