Search This Blog

Thursday, May 03, 2012

அழியாத ரங்கோலி!

தேவையான பொருள்கள்:


ப்ளைவுட்- விருப்பமான திலகம், மாங்காய் போன்ற வடிவம் ‘வாட்டர் ஃப்ரூப்’ ஆக இருப்பது நல்லது

(மரம் வெட்டித் தரும் கடையில் தேவைப்பட்ட டிஸைனில் வெட்டி வாங்கிக் கொள்ளவும்).

பிரஷ், ஃபேப்ரிக் கலர், மஞ்சள், சிவப்பு, 3 டி கோன் லைனர் - வெள்ளை, பச்சை நிறம் வட்ட வடிவமான, சிறிய பெரிய கண்ணாடித் துண்டுகள், பசை.

டூ வே ஸ்டிக்கர் - வேண்டுமெனில்
அகல் விளக்கு (அ) வீட்டில் இருக்கும் குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

செய்முறை விளக்கம்:


* விருப்பமான வடிவத்தில் ப்ளைவுட், அல்லது கார்ட்போர்டு வெட்டிக் கொள்ளவும்.

* அதன் ஓரங்களில் மஞ்சள் கலர் கொடுத்து பார்டர் கட்டவும் (படம்-1)

* நடுவில் சிவப்புநிற ஃபேப்ரிக் கலர் கொடுக்கவும். (படம் 2)

* அரைமணி நேரம் பெயிண்ட் காய்ந்தவுடன் வெள்ளை 3டி கோன் லைனரால் அதன் மேல் நெளி கோலம் போடுவது மாதிரி வரையவும். (படம் 3)

* பிறகு பச்சை 3டி கோன் லைனரால் படத்தில் காட்டியபடி மேலும் அழகுபடுத்தி ஆங்காங்கே சிறிய, பெரிய கண்ணாடிக் கற்களை வெள்ளைப் பசை கொண்டு ஒட்டவும்.

* இதே மாதிரி ஆறு, எட்டு என்ற எண்ணிக்கையில் ஒரே டிஸைனில் நம் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் தயார் செய்து ஒரு மணி நேரம் காயவைத்து எடுத்தால் என்றும் அழியாத ரங்கோலி தயார் (படம் 5)

நடுவே விளக்கு வைத்து வழிபடலாம்.

அதன் பின்புறம் (வேண்டுமெனில்) டபுள்வே ஸ்டிக்கரை ஒட்டி, தரையில் நிரந்தரமாக ஒட்டி வழிபடலாம்.

அல்லது விசேஷ நாட்களில் தரையில் ரங்கோலி மாதிரி அடுக்கி, விளக்கேற்றி வழிபட்டு உள்ளே எடுத்து வைத்து விடலாம்.

‘வுட்’டில் வர்ணம் அடிப்பதற்கு முன் ‘வுட் ப்ரைமர்’ அடித்துக் காயவிட்டுப் பிறகு கலர் அடிக்கலாம்.

சுதா 
 

 

No comments:

Post a Comment