உலகிலேயே அதிகமான டூரிஸ்ட்டுகளின் வாண்டட் லிஸ்டில் முதலிடம் நியூயார்க். இதன் டைம்ஸ்கொயருக்கு கடந்த ஆண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் மேல். நியூயார்க் நகரின் நடுவில் இரண்டு குறுகிய தெருக்கள் ஒரு பெரிய சாலையில் சந்திக்கு மிடத்திலிருக்கும் இந்தச் சதுக்கம், 100 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் அறிந்த புகழ் பெற்ற இடம். உலகத்தின் சாலைகள் சந்திக்குமிடம் ("The Crossroads of the World") என வர்ணிக்கப்படுகிறது. இந்த இடத்தில் நகருக்காகப் போராடி வென்ற டஃபி(Duffy) என்பவரின் நினைவாக அவரது சிலை நிறுவப்பட்டு டஃபி ஸ்கொயர் எனப் பெயரிடப்பட்டிருந்தது. நகர நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 1904ல் நியூயார்க் டைம்ஸ் தினசரி தங்களுடைய பல மாடி அலுவலகக் கட்டடத்தை இங்கு எழுப்பியபோது, டைம்ஸ்கொயராக மாறியது. டஃபியின் சிலை இன்னுமிருக்கிறது. ஆனால், நியூயார்க் டைம்ஸ் இப்போது இங்கில்லை.
உலகின் முதல் மின்சார பல்புகளுடன் விளம்பரம், நியான் விளக்கு விளம்பரம்,
பிளாஸ்டிக் சைன்போர்ட், டிஜிட்டல் விளம்பரம் என பல விளம்பரப் புதுமைகளின்
பிறப்பிடமான டைம்ஸ்
கொயரை இன்று ஒரு சதுர அங்குலம் பாக்கியில்லாமல் ஆக்கிரமித்திருப்பது
வீடியோவால்ஸ் எனப்படும் பிரமாண்டமான டிஜிட்டல் விளம்பரங்கள். ஒரு
கட்டடத்தின் முகப்பைக் கூட விட்டுவைக்காமல்
ஜம்போட் ரான்ஸ் என்ற மிகப் பெரிய (100அடி நீளம் 60 அடி உயரம்) வீடியோ
திரைகளை நிறுவியிருக்கிறார்கள். அதில் அழகாக விளம்பரங்கள், ஐ மாக்ஸ்
திரையில் தெரியும் படம் போல
ஓடிக்கொண்டேயிருக்கின்றன. இந்த விளம்பரங்களுக்குக் கட்டணங்கள் மிக அதிகம்.
சீசன் காலத்தில் ஒரு மணி நேரத்துக்கு 10000 டாலர்கள். ஆனாலும் அடுத்த
புத்தாண்டுவரை
எல்லாம் புக்காகி விட்டதாம்.
உலகிலேயே வாடகை இங்குதான் மிக அதிகம். ஆனாலும் இங்கு
விளம்பரத்துக்காகவாவது ஒரு ஷோரூமோ, அலுவலகமோ இருப்பதை உலகின் எல்லா பெரிய
நிறுவனங்களும் கௌரவமாகக்
கருதுகின்றன. ‘எங்கள் நிறுவன விளம்பர உருவத்துடன் நடனமாடினால் சாக்லெட்
இலவசம், எங்கள் கேமராவில் எடுக்கப்பட்ட உங்கள் குடும்பப் படத்தை பிரமாண்ட
திரையில் உடனே பாருங்கள்’
என்ற ஆர்ப்பாட்டமான அழைப்புகளுடன் கலக்குகிறார்கள்... புகழ் பெற்ற லண்டன் மேடம் டூஸாட்டின் மெழுகுச்சிலை உருவங்களின் அரங்கம்
டைம்ஸ்கொயரின் சமீபத்திய புதிய வரவு. ஹாலிவுட் நட்சத்திரம் மார்கன்
ஃபிரீமேன் (Morgan Freeman)
சாலை நடைபாதையிலேயே நம்மை வரவேற்கிறார். அருகிலிருக்கும் பிராட்வே தியேட்டர் டிஸ்ட்ரிக்ட்டில் 40க்கும் மேற்பட்ட
தியேட்டர்கள். இங்கு தியேட்டர்களில் சினிமா மட்டுமில்லாமல் நாடகம், இசை,
நடனம் எல்லாம் நிகழ்த்தும்
வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில பழைய தியேட்டர்களைப் பாரம்பரியச்
சின்னமாக அதன் பழைய முகப்போடு நகர நிர்வாகமே பராமரிக்கிறது. எல்லா
தியேட்டர்களுக்கும் ஒரே
இடத்தில் டிக்கெட் தருகிறார்கள். அதன் பெயர் ‘சூபாக்ஸ் ஆபிஸ்’. சூ
டிக்கெட்களுக்கு 20லிருந்து 50 சதவிகிதம் வரை டிஸ் கவுண்ட். படத்துக்குக்
கூட்டம் குறைய, குறைய டிஸ்கவுண்ட்
கூடுகிறது. சிலசமயம் முதல் நாளே சில காட்சிகளுக்குப் பின் கூட்டமே
இல்லாவிட்டால் 50% டிஸ்கவுண்ட்டில் டிக்கெட். சினிமா உலகின் ‘பாக்ஸ் ஆபிஸ்
ஹிட்’ என்ற சொல்
இங்கிருந்துதான் பிறந்திருக்கிறது. டிக்கெட்டுகள் கொடுக்கும் கட்டடத்தின்
பின்புறத்தில் அதன் மேல் தளத்திலிருந்து தரைவரை ஒரு ஃபைபர் கிளாஸ் காலரி.
டிக்கெட் கொடுக்கும் முன் உட்கார்ந்து
ஓடும் பிரமாண்ட விளம்பரங்களை வேடிக்கை பார்க்கலாம். எப்போதும் பல
ஆயிரக்கணக்கானவர்களுடன் பரபரப்பாக இயங்கும் இந்தப் பகுதியில் வாகனங்களுக்கு
அனுமதியில்லை.
வாங்கியதைச் சாப்பிட சாலையிலேயே இலவசமாக மேஜை, நாற்காலி வசதி. காஃபி
கப்புடன் ரோட்டில் உட்கார்ந்து நிம்மதியாகப்
படித்துக்கொண்டிருப்பவர்களையும் பார்க்க முடிகிறது.
ஒரு டாலர்க்கு காஃபி குடித்தால் கூட கிரெடிட் கார்ட் தேப்பது
அமெரிக்கர்களின் வாடிக்கை. ஆனால் வரும் டூரிஸ்ட்களின் வசதிக்காக இங்குள்ள
பெட்டிக்கடைகளில் கூட ஏ.டி.எம்.
பொருத்தியிருக்கிறார்கள்.
உலகின் பல மொழிகளின் ஓசைப் பின்னணியில் பிரமாண்ட விளம்பரங்களின் ஒளி
வெள்ளத்தில் நம்மை மறந்துலயித்து விடுவதால் நேரம் போவதே தெரிவதில்லை.டைம்ஸ்கொயர் தூங்குவதேயில்லை என்கிறது நியூயார்க் டூரிஸத்தின் விளம்பரம்.
ஆனால், பார்த்த நம்மையும் தூங்கவிடுவதில்லை என்பதுதான் உண்மை.
டைம்ஸ்கொயர் தூங்குவதேயில்லை -----
ReplyDeleteஒளி வெள்ளத்தில் மிதக்கும் அருமையான பதிவுகள்..