ஓராண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு என்ன மார்க் போடுவீர்கள் என்று ஒரு டி.வி சேனலில் கேட்டார்கள். இதோ மார்க்ஷீட்.
ப்ளஸ் மார்க் (மொத்தம் 50)
அரசு ஆடம்பர விழாக்கள் நடத்தாமல் இருப்பதற்கு - 5
முன்பை விட அதிகமாக மீடியாவைச் சந்திப்பதற்கு - 5
பெரும்பாலான தி.மு.க அரசு திட்டங்களைத் தொடர்வதற்கு - 5
கட்சியினரின் அராஜகத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருப் பதற்கு - 5
மொத்தம் 20.
மைனஸ் மார்க் (மொத்தம் 50)
ஒரு வருடமாக புது செயலகக் கட்டடத்தை வீணாக வைத்திருப்பதற்கு - 5
சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குளறுபடிகளுக்கு - 5
பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் என்கவுண்ட்டர் கொலை வரை போலீஸ் துறையிடம் அளவுகடந்த அதிகாரத்தை அளித்திருப்பதற்கு - 5
12 மாத ஆட்சியில் 9 மாதமாக நடக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு
போராட்டத்தை மதிக்காமலும், நசுக்கியும் எடுக்கும் ஜனநாயக விரோத
நடவடிக்கைகளுக்காக - 10
சட்டப் பேரவையில் விவாதங்களுக்கு வழியின்றி 110 ஆட்சி நடத்துவதற்கு - 5
சசிகலா உறவைத் துண்டிக்க முடியாமல் மக்களை நாடகம் நடத்தி ஏமாற்றியது - 5
மொத்தம் 35
ஒரு வரி எச்சரிக்கை: மக்களின் ஏமாற்றத்தைப் போக்க இன்னும் 4 வருடம் வாய்ப்பு இருக்கிறது. தவறினால் கருணாநிதி கதிதான்.
கடைசி எச்சரிக்கை மிகவும் உண்மை
ReplyDelete