Search This Blog

Sunday, May 20, 2012

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்: எது சிறந்தது?


முதலில் சில புள்ளிவிவரங்கள்: 1956-ம் ஆண்டிலிருந்து எல்.ஐ.சி நிறுவனம் மட்டுமே இந்தியாவில் இன்ஷூரன்ஸ் சேவைகளை தந்து வந்தது. 2000 ஆண்டுக்கு பின்னர் தனியார் நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றன. இப்போதைக்கு  23 லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.இதில் எல்.ஐ.சி. என்பது ஒரு பொதுத் துறை நிறுவனம். இது தவிர, சஹாரா லைஃப் மட்டுமே முழுமையான இந்திய நிறுவனமாகும். மற்ற நிறுவனங்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்தே இந்தச் சேவையைக் கொடுத்து வருகிறது.

ஏன் இன்ஷூரன்ஸ்?

ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு காரணமாக இருக்கும் நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அந்த குடும்பத்தின் பொருளாதார இழப்பை சரிகட்டுவதுதான் இன்ஷூரன்ஸின் முக்கிய நோக்கம்.

டேர்ம், எண்டோவ்மென்ட், ஹோல் லைஃப், பென்ஷன் உள்ளிட்ட பல வகையான பாலிசிகள் இருக்கிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்ததே. மக்களிடம் செல்லும் முன்பே இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை மூன்று குரூப்களாக பிரித்துக் கொண்டோம்.

குரூப் ஏ - எட்டு வருடங்களுக்கு மேல் செயல்படும் இன்ஷூரன்ஸ் நிறுவனம்.
குரூப் பி - எட்டு வருடங்களுக்குள் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனம்.
குரூப் சி - பொதுத் துறை நிறுவனம். இதில் எல்.ஐ.சி. மட்டுமே.

இரண்டு வகையான சர்வே செய்தது கான்சர்ட். முதலாவது, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் சர்வே செய்வது. இரண்டாவது, மக்களைச் சந்தித்து கேள்வி கேட்டு அதனடிப்படையில் முடிவுக்கு வருவது.


தகவல்களின் அடிப்படையில் சோதனை!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஐ.ஆர்.டி.ஏ.வுக்கு கொடுக்கும் தகவல்களான சால்வென்ஸி விகிதம், லேப்ஸ் விகிதம், பிஸினஸில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்கு, எக்ஸ்பென்ஸ் விகிதம், குற்றச்சாட்டுகள், ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பலவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது.


விகடன்  

 
 

No comments:

Post a Comment