Search This Blog

Monday, May 14, 2012

டூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது?

நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, ''டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..!'' என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் மீறி அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு பாதி பேஸ்ட்டை சாப்பிட்டவர்கள் பலர். இப்போதும் அந்த எச்சரிக்கையை நம் குழந்தை களிடம் சொல்கிறோம். காரணம், அதிலிருக்கும் கெமிக்கல்.இதனால் நம் உடல்நலம் பாதிப் படையுமா என்கிற கேள்விக்கான விடையை கடைசியாகப் பார்ப்போம். அதற்கு முன், பல் தேய்ப்பது பற்றி சில சுவாரஸ்ய மான விஷயங்களைப் பார்ப்போம்.  

தினசரி காலை, இரவு என இரு முறை பல் துலக்குவது கட்டாயம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பலரும் காலையில் கடனே என ஒருமுறை பல் தேய்ப்பதோடு சரி. பல் தேய்க்கும்போது குறைந்தது இரண்டு நிமிட நேரமாவது தேய்க்க வேண்டும். ஆனால், இந்தியர்கள் சராசரியாக 20 நொடிகள் மட்டுமே பல் தேய்க்கிறார்கள்.
 
பற்பசையின் தரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு டூத் பிரஷ்ஷின் தரமும் முக்கியம். சுமார் 3-6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.  
 

இனி பற்பசைக்கு வருவோம்.இதில் பசை, ஒயிட்னர்கள், தண்ணீர், நிறப் பொருட்கள் போன்றவை அடங்கி இருக்கின்றன. இந்திய தர நிறுவனத்தின் தர அளவீடுகளின் அடிப் படையில் பற்பசைகளின் தரம் இருக்கிறதா என ஆராயப் பட்டது. இந்த ஆய்வு மற்றும் சர்வே மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை யின் அனுமதியின்பேரில் நடத்தப்பட்டது. கோல்கேட், குளோஸ்-அப், ஹிமாலயா, டாபர் போன்ற முன்னணி பிராண்ட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.பற்பசைகளில் பேக்கிங் மற்றும் லேபிலிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவை நன்றாக இருக்கிற டூத் பேஸ்ட்கள்  அதிக எண்ணிக்கையில் விற்பனையா கின்றன. காலையில் கண் விழிக்கும்போது நம்மவர்கள், அழகிய பொருளை பார்க்க விரும்புவதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.
 
டூத் பேஸ்ட்டில் நுரை வர சோடியம் லரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. இது அதிகமானால் பல் ஈறுகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. காரீயம், ஆர்ஸனிக் போன்ற கன உலோகங்கள் குறைவாக இருப்பது உடல் நலனுக்கு நல்லது.அதே நேரத்தில், டூத் பேஸ்ட்டில் உள்ள ஃபுளோரைட் பற்சொத்தையை தடுக்க உதவுகிறது.  பற்பசை சாப்பிடுவதால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நாம் குடிக்கும் காபி-யின் பாதிப்பை விட குறைவுதான்.டூத் பேஸ்ட்கள், வாய் துர்நாற்றத்தைப் போக்குவது, பல் கரை மற்றும் காரை போக்குதல், பூச்சி தொல்லை, பற்சொத்தை போன்றவற்றிலிருந்து நம் பற்களை காப்பதோடு, பற்களை பளிச்சிடவும் வைக்கிறது.எது பெஸ்ட் நிறுவனம் என்பது அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளது.
 
விகடன்  

No comments:

Post a Comment