உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சிதானே? அது எங்கே இருக்கிறது?
தற்போது சோரா (sohra) என்று அழைக்கப்படும் சிரபுஞ்சி, இந்தியாவில் மேகாலயா
மாநிலத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4872 அடி உயரத்தில்
ஹாசி (khasi) மலை உச்சியில் அமைந்துள்ள பகுதி இது. ஆண்டுதோறும் 11,430
மி.மீ. மழை இங்கே பொழிகிறது.இவ்வளவு மழை பொழிந்தாலும், குடிநீர்
தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் துன்புறுகிறார்கள் என்பதும் வியப்பான செய்தி.
காரணம், அந்தத் தண்ணீர் முழுதும் தேக்கி வைக்க முடியாததால்,
வீணாகிவிடுகிறது.
ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதால், தொண்டையில் சதை வளருமா?
ஐஸ்கிரீம், குளிர்
பானம் போன்றவற்றை சாப்பிடுவதற்கும், டான்ஸில் எனப்படும் தொண்டையில் சதை
வளர்வதற்கும் தொடர்பில்லை. நாம் உட்
கொள்ளும் பொருளின் மூலம் பரவும் கிருமிகளைத் தடுப்பது டான்ஸில்.
குளிர்ச்சியான பொருள்களை உட்
கொள்ளும்போது, அது தன் வடிகட்டும் திறனை இழந்து விடுகிறது. அதனால்,
கிருமித் தொற்று ஏற்படவும், அந்தக் கிருமிகளின் மூலம் தொண்டையில் சதை
வளரவும் வாய்ப்பு உண்டாகிறது. குளிர்பானம் என்றல்ல; குளிர்ச்சியான எந்தப்
பொருளை சாப்பிட்டாலும் - ஐஸ் வாட்டர் உள்பட, இந்த நிலைதான்.
ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தவர் யார்?
சர் வில்லியம் ராம்ஸே என்பவர், 1895ஆம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தார்.
ஹீலியம் என்பது வெறும் வாயுவல்ல. அதற்கு நிறமோ, மணமோ கிடையாது. இது, காற்றை
விட எடை குறைவானது. இதைவிடவும் எடை குறைவானது ஹைட்ரஜன்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘வளையாபதி’ பற்றி...?
நவகோடி நாராயணன் என்ற வணிகரைப் பேசும் காப்பியம் இது. சமண சமய இலக்கியம் என்றும்
சொல்வதுண்டு. என்றாலும், இந்தத் தொகுப்பு முழுமையாகக் கிடைக்க
வில்லை. வெறும் 72 பாடல்களே கிடைத்துள்ளன. இயற்றியவர் பெயரும்கூடத் தெரியாது என்பது வருத்தமான விஷயம்!
No comments:
Post a Comment