இந்தியாவில் மிக சிறந்த ஒளிபதிவு இயக்குனர்களில் சந்தோஷ் சிவன் குறிப்பிடதக்கவர். ஏற்கனவே அவர் அசோகா என்னும் ஒரு சரித்திர படம் இயக்கி உள்ளார். அந்த படம் ஓட வில்லை. ஆனால், சமீபத்தில் மல்லி திரை படம் பார்த்தேன் . ஒரு சின்ன கிளை கதையை எடுத்து அருமையாக திரை க கதை பண்ணி இருப்பார். அந்த படம் தான் இந்த உருமி படத்தை பார்க்க காரணமாய் இருந்தது.
இதில் ப்ரித்வி ராஜ்,ஜெனிலியா,வித்யா
பாலன்,பிரபு தேவா,ஆர்யா,தபு நடித்து மலையாளத்தில் வெளிவந்துள்ள படம் உருமி.
கதை
வாஸ்கோடகாமா
கோழிக்கோடு கரையில் இறங்கி வடக்கு கேரளத்தை தன்கைக்குள் கொண்டு
வருவதாகத் தொடங்குகிறது படம். நிகழ்காலத்தில் ப்ரிதிவிராஜின் முன்னோர்கள்
விட்டுச் சென்ற சொத்தை வாங்க முனையும் அயல் நாட்டு கூட்டம் ப்ரிதிவிராஜையும்,நண்பன்
பிரபு தேவாவையும் பேரம் பேச கூட்டிச் செல்கிறது. அவர்களும் அந்த இடத்தை தேவை இல்லை என முடிவு செய்து விற்க ஓகே சொல்கிறார்கள் .
அந்த இடத்தை வேண்டாம் என்று வித்யா பாலனும்,ப்ரிதிவிராஜின்
பூர்விகம் பற்றி ஆர்யாவும் (கூறுகின்றனர்). பூர்விகம் பற்றி
தெரியும்போது காட்சிகள் பிரிதிவிராஜ் எப்படி வாஸ்கோடகாமாவை விரட்டி
அடிக்கிறார் என்று விரிகிறது. பின் நிகழ்காலத்தில் பிரிதிவிராஜ் அந்த
சொத்தை யாருக்கும் விற்காமல் அநாதை,ஆதிவாசிகளுக்கு விடுவதும் போலவும்
காண்பிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ள
படம்,சிறந்த ஒளிப்பதிவாளர்,திறமையான நடிகர்கள்,நிறைய பொருட் செலவில்
எடுக்கப்பட்ட படம். படத்தின் கதை என்னவென்று இரண்டு மணி நேரம் பார்த்தும் புரியவே
இல்லை. ஜெனிலியா மட்டும் நடித்து இருக்கிறார். லவ் ஹேர் ஆக்டிங். செம நடிப்பு.
ஒரு பெண் இறக்கும் தருவாயில் விட்டுச் சென்ற நகைகளை தனது முஸ்லிம்
நண்பனுடன் சேர்ந்து அதை உருக்கி வாஸ்கோவை கொல்ல ஆயுதம் செய்கிறான்.
அதுதான் உருமி.
பாடல்கள் ஓகே. ஒட்டாத காட்சி அமைப்பு,விறுவிறுப்பே இல்லாமல் போவது
என்று படம் முழுவதும் இருந்தாலும் படத்தின் மேகிங் அருமை.
உருமி - Must watchable Movie ( ஜெனிலியா :) )
ஜெனிலியாவை மட்டும் நீங்க பார்த்த மாதிரி இருக்கு...ரசித்தேன்...
ReplyDelete