Search This Blog

Tuesday, August 16, 2011

'ஸ்மெல் சீனிமா' திரைக்கு வரும் 4D மிரட்டல் !

பொழுதுபோக்கு விஷயத்தில் சினிமாவுக்கு எப்போதுமே முதல் இடம் உண்டு. காரணம், காலத்துக்கு ஏற்ப சினிமாவின் டெக்னிக்கும் மாறுவதுதான். அந்த வகையில் இப்போது திரையில் மிரட்ட வருகிறது... 4ஞி டெக்னாலஜியில் உருவான 'ஸ்பை கிட்ஸ்’.


மௌனத்தில் ஆரம்பித்த சினிமா, பேசியதே ஒரு காலத்தில் ஆச்சர்யமாக இருந்தது. பிறகு, கறுப்பு-வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கு மாறியது. சினிமாஸ் கோப் என்ற அகன்ற திரையாய் பிரமிக்க வைத்தது. அதுவும் ரசிகர் களுக்கு அலுத்தபோது 2ஞி என்று வளர்ந்தது. அதாவது, வெளியே இருந்து ஒருவர் அழைக்கும் காட்சி திரையில் வந்தால், நமக்கும் தியேட்டருக்கு வெளியே இருந்து அழைப்பது போன்ற சத்தம் கேட்கும். இது அங்கே இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. சத்தத்தின் மூலம் கொடுத்த உணர்வை, காட்சிகள் மூலம் கொடுக்க உருவானதுதான் 3D சினிமாக்கள்.  இப்படி நமது ஐம்புலன்களில் காது, கண்களுக்கு அடுத்து மூக்கைக் குறிவைத்து வந்துள்ள டெக்னிக்தான் இந்த 4D.

படத்தைப் பார்க்கையில், திரையில் கமகம பிரியாணியையோ சூடான பஜ்ஜியையோ சாப்பிடும் காட்சி வந்தால், அந்த வாசனையை நம்மை உணரவைத்து, நாவில் நீர் சுரக்க வைத்துவிடுவார்கள். பூங்காவில் இருந்தால் மலர்களின் வாசனையை நுகரலாம். 'ஸ்பை கிட்ஸ்’ அந்த கலக்கல் அனுபவத்தைத் தரும். ஸ்பை கிட்ஸ் படத்தின் முதல் பாகம் 2001-ல் வெளியானது. அடுத்த ஆண்டு இரண்டாம் பாகம். இவை இரண்டும் சாதாரண தொழிநுட்பத்தில் உருவானவை. மூன்றாம் பாகத்தை 3D தொழில்நுட்பத்தில் 2003-ல் வெளியிட்டார்கள். அதனால், நான்காம் பாகத்தை 4D-யாக வெளியிட  திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிறைய எதிர்பார்ப்புகளுடன் வருகிறது ஸ்பை கிட்ஸ்-4.

ரெபிக்கா, சிசில் என்ற இரட்டையர் சுட்டிகளின் சாகஸமே படத்தின் கதை. Organization of Super Spies என்பது சக்தி படைத்த உளவாளிகளை உருவாக்கும் நிறுவனம்.(சுருக்கமாக ஓ.எஸ்.எஸ்.) தீயவர்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும்போது இந்த உளவாளிகள் வருவார்கள்.  இங்கே பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மரிசா என்ற பெண் உளவாளி. இவர் சிசில், ரெபிக்காவின் சித்தி. ஓ.எஸ்.எஸ். நிறுவனத்தில் இருந்த டைம் கீப்பர் கருவி எதிரியால் திருடப்படுகிறது. அதை மீட்க மரிசாவை அழைக்கிறது ஓ.எஸ்.எஸ். மரிசாவுடன் சுட்டிகளும் செல்கிறார்கள். சுட்டிகளின் செல்ல நாயும் இந்த சாகஸத்தில் பங்கேற்கிறது. வித்யாசமான நறுமண சக்தியை வைத்தே டைம் கீப்பரை  அவர்கள் எப்படி மீட்கிறார்கள் என்பதை 4D டெக்னிக்கலுடன் கண்டு மகிழலாம்.

இந்த டெக்னிக்கை பெரிய நகரங்களில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டுமே அனுபவிக்க முடியும். மற்றவர்களுக்காக, 3D மற்றும் சாதாரணமாகவும் உலகம் முழுவதும் வருகிறது ஸ்பை கிட்ஸ்.

 அறிவியலின் அட்டகாச வளர்ச்சியில் 5D, 6D தொழில்நுட்பங்களும் வந்துவிட்டன. அதாவது... பறக்கும் தட்டிலோ, பைக்கிலோ வேகமாகச் செல்வது போன்ற காட்சிகள் வந்தால், நம் இருக்கை இடதும் வலதுமாக அசையும். மழை, பெரும் காற்று போன்ற காட்சிகளில் நம் மீது நீர் தெளிக்கப்படும். காற்று வீசும்.  பொழுதுபோக்குப் பூங்காக்களில் ஏற்கனவே இவை உள்ளன. இந்த டெக்னிக் விரைவில் தியேட்டர்களுக்கும் வந்துவிடும்.  பிறகு, சினிமா பார்ப்பதே அட்வென்சர் பயணம் செய்துவிட்டு வந்ததுபோல் இருக்கும்.

2 comments:

  1. பெற்றோரின் பணம் கொள்ளை போவது உங்களுக்கு புரியுமா...2D ...3D ...எல்லாம் எங்கள் பணத்தை திருD....

    ReplyDelete