அன்புள்ள பால் நலமா?
நலம் என்று நம்புகின்றேன்.. இங்கு உன் நண்பர்கள் அனைவரும்
நலம்...
உன்கிட்ட முதலில் போன் பண்ணி தான் பேசணும் நினைத்தேன்.. ஆனால், ஒரு நல்ல
நாளில் உன்னை கஷ்டபடுத்த நான் விரும்பவில்லை. ஆனால், நான் நினைத்ததை
கண்டிப்பா சொல்லவிட்டால் மண்டை வெடித்து விடும். நான் என்ன எழுத போகிறேன்
என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா உன்னை காய படுத்த இல்லை..
பத்து வருடத்திற்கு முன்பு துவங்கிய நம் நட்பு.. நியாபகம் இருக்கா? B
குரூப் மாணவர்கள்.. முதல் வருடத்தில் அவ்வளவு பழக்கம் இல்லை. சும்மா
எப்போவது கட் அடித்து விட்டு பசங்கள் உடன் கிரௌண்டில் கிரிக்கெட்
விளையாடுவது.. நீ, நான் , சிவா, பாபு, மணி, மாதவன் மற்றும் சிலர். எனக்கு
தெரிந்து எப்போவுமே என் எதிர் டீம் நீ.. உன்னை குதிரை என்று செல்லமாக மணி
சொல்லுவான். அப்போவே மலிங்கா போல நீ காலில் பந்தை எரிவாய்.. எத்தனையோ
நபர்கள் உன் பந்துக்கு பயபிடுவார்கள். நான் சமாளித்து ஆடுவேன்.. சொல்லி
வைத்து உன் பந்தை அடிப்பேன்.. வேணும் என்றே முறைத்து கொள்வோம். ஆத்தி கூட
மேட்ச் போட்டு பிரச்சனை வந்து அன்றோடு தலை முழுகிய கிரிக்கெட், இன்று வரை
நான் விளையாடவே இல்லை :(
வாழ்க்கையில் நண்பர்களை அமைவது நம் கையில்தான்
இருக்கின்றது.. சிலரோடு ஒத்து வராது
என்று தெரிந்து விட்டால், புறக்கணிப்பது .. இது தான் நான் .. ஒத்து
வந்து விட்டால் நான் எப்படி இருப்பேன் என உனக்கு தெரியும்.. பொதுவாக என்
வண்டியை நான் யாருக்கும் தந்து விட மாட்டேன். ஆனால், உனக்கு என்றால் உடனே
கொடுத்து விடுவேன். பின்னாடி யாரையும் உட்கார வைக்க எனக்கு பிடிக்காது.
ஆனால், நீ கஷ்டப்பட வேண்டாம் என்று தினமும் உனக்கு டிரைவர் போல் இருந்து
உள்ளேன்.. நீயும் கூட .. நம் இருவரும் வேற வேற துறையில் படித்தாலும் உனக்கு
எக்ஸாம் என்றால் நான் சும்மா வந்து உட்கார்ந்து இருந்தேன்.. நீ ஏன் இப்படி பண்ண ?
உனக்கே தெரியும், எங்கள் வீட்டில் உன் மேல எவ்வளவு மரியாதையை வைத்து
இருந்தார்கள். எத்தனை மதியம் வீட்ல சாப்பிட்டு இருப்போம். நீ ஏன் இப்படி
பண்ண ? நான் அந்த சொத்தை வண்டிய எடுத்துட்டு உங்க வீட்ற்கு வருவேன். என்னை
விட நீ நல்லா தான் படிப்பாய்.. என் department மாணவர்களை விட உன் வகுப்பு
மாணவர்கள் தான் எனக்கு அதிகம் பேர் தெரியும். இன்று வரை என் கூட நட்பு
கொள்வதும் அவர்கள் தான். உண் சூழ்நிலை வேலைக்கு போக வேண்டும். உன்
அம்மாவிடம் பேசியது எனக்கு இன்னும் நினைவு இருக்குது. தயவு செய்து அவனை
படிக்கச் வைங்க.. எல்லாம் நல்லா தான் போய் கொண்டு இருந்தது.. ஆனால், அந்த
மொக்க காலேஜ்ல போய் சேர்ந்து உன்னை நீயே அழித்து கொண்டாய். உன் மேல எனக்கு
வந்த மிக பெரிய கோபம் என்கிட்டே கேட்காமல் அந்த பெண்ணிற்கு ரூட் போட்டது.
நீ சொல்லி இருந்தால் நானே நம்பர் தந்து அறிமுகம் செய்து வைத்து இருப்பேன்.
ஆனால், என்னை கேட்காமல், தெரியாமல் அவள் நம்பர் என் கைபேசியில் நீ எடுத்தது
தவறு தான்.
துரோகத்திலும் பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம். நீ செய்தது தப்பு என்று ஒரு நாள் கூட உனக்கு தோன்ற வில்லை.. மீதி ஆப் தி ரெகார்ட்
சரி விடு, நான் தான் டென்ஷன் ஆனால் கத்தி விடுவேன். நீ அமைதியா இருந்தா
நல்லவனா ? ஒய்யா, அப்படி என்ன பெரிய ஈகோ உனக்கு. ஒரு தடவை போன் நம்பர்
எடுத்து பேசி இருக்கலாம். என்னை மட்டும் தான் கழட்டி விட்டாய் என்று
நினைத்தேன் ஆனால், யாரிடமும் நீ பேசுவது இல்லை. சரி விடு. உன் நேரம்.
ஆனால், நீ ஏன் இப்படி பண்ண ?
கல்யாணம் வாழ்க்கைல ஒரு முறை தான் வரும். இன்னைக்கு உன் கிட்ட பணம் காசு
இருக்கும். அதுக்காக நீ என்ன வேண்டும் என்றாலும் செய்வ நாங்க மண்டையை ஆடி
விட்டு போகணும் என்று நினைக்குற.. நீ நல்லா இருக்கனும் என்று நினைக்குற
ஜீவன் இன்னும் நிறைய உயிரோடு தான் இருக்கு. ஆனால், உனக்கு புரியாது. உனக்கு
புரியும் போது யாரும் இருக்க மாட்டோம் ..
நேத்து உன் மெயில் பார்த்தா வுடன் செம கோபம்.. ------ போன் பண்ண முடியாதோ..
அதுவும் கடைசி நிமிடத்தில் மெயில் அனுப்புற உனக்கு கல்யணம் என்று.. நல்லா இரு .. செல்வி, அம்மா , அப்பாவை கேட்டதா சொல்லு..
உனக்கு கார்த்திக்கும் ஒரு வித்தியாசம் இல்லை :(
இந்த பக்கியை யார் யார் திட்ட வேண்டும் என்று நினைபவர்கள் இந்த நம்பர்க்கு போன் பண்ணி பேசுங்க..+919900252238
கண்டிப்பா என் கல்யாணத்திற்கு வா...
ஆனால், நீ பேசாத வரை என்று எப்பொழுதும் நான் பேச மாட்டேன்.. ஓடுறது அப்பன் ரத்தம் :)
அடுத்தது யாரு ?
No comments:
Post a Comment