Search This Blog

Thursday, April 12, 2012

தற்கொலைக் கூடங்கள்! - பதறவைக்கும் பள்ளி, கல்லூரி பயங்கரம்


மார்ச் 29 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பொறியியல் மாணவர் வெங்கடேஷ், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாததாலும் 20-க்கும் மேற்பட்ட அரியர்களாலும் தன் உடலை பிளேடால் கிழித்துக்கொண்டு, தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 28 - சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - பொறியியல் மாணவர் மணிவண்ணன் 26 அரியர்களால் தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 24 - நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டி ப்ளஸ் டூ மாணவர் பொன்னுசாமி தேர்வு சரியாக எழுதாத பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 15 - நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஜெயப்பிரகாஷ் கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால், தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 14 - கும்பகோணம் பத்தாம் வகுப்பு மாணவர் இத்ரீஸ், ஆசிரியர் 'அநாதைப் பயலே’ எனத் திட்டியதால், தூக்கிட்டுத் தற்கொலை.  

மார்ச் 7 - திருவையாறு அருகேயுள்ள கல்விராயன்கோட்டை 9-ம் வகுப்பு மாணவர் ரத்தினசபாபதி தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால், விஷம் குடித்துத் தற்கொலை.

பிப்ரவரி 26 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி 1 மாணவி ரோஹிணி, சக மாணவனுடனான நட்பைப் பள்ளியின் தாளாளர் பலர் முன்னிலையில் கொச்சைப் படுத்தியதால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

பிப்ரவரி 15 - உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் ப்ளஸ் ஒன் மாணவர் அனுஜ், தொடர்ந்து ஆசிரியர் திட்டி, அடித்துத் துன்புறுத்தியதால், தூக்கிட்டுத் தற்கொலை.

பிப்ரவரி 9 - சென்னை ஜி.கே.எம். காலனி பத்தாம் வகுப்பு மாணவர் லோகேஷ், தேர்வுப் பயம் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை.    

மிழகப் பள்ளிக்கூட வகுப்பறைகள் தற்கொலைக்கூடங்களாகி வருகின்றன. எல்.கே.ஜி-யில் தொடங்கி கல்லூரி வரை 15 வருட வகுப்பறை வாழ்க்கை, பிரச்னைகளை எதிர்கொள்ள சொல்லித் தரும் ஒரே தீர்வு... தற்கொலை மட்டும்தானா?மிழகப் பள்ளிக்கூட வகுப்பறைகள் தற்கொலைக்கூடங்களாகி வருகின்றன. எல்.கே.ஜி-யில் தொடங்கி கல்லூரி வரை 15 வருட வகுப்பறை வாழ்க்கை, பிரச்னைகளை எதிர்கொள்ள சொல்லித் தரும் ஒரே தீர்வு... தற்கொலை மட்டும்தானா? படிப்பைக் கெடுக்கும் விஷயங்கள். ஏன் இந்தப் பதற்றம்? காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். போட்ட பணத்துக்கு ஒழுங்காக ரிட்டர்ன் வர வேண்டுமே என்ற பதைபதைப்பு அவர்களுக்கு. கல்லூரி முதலாளிகளும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு ரிசல்ட் நன்றாக வந்தால்தான் கல்லூரிக்கு நற்பெயர் வரும், நல்ல ரிட்டர்ன் எடுக்கலாம். இடையில் மாணவன் சிக்கிக்கொள்கிறான்!

'இன்னைக்கு கஷ்டப்பட்டுப் படிச்சாதானே நாளைக்கு அவன் ஃப்யூச்சர் நல்லா இருக்கும்’ என்பதே மாணவர்களை நெருக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லும் காரணம். அப்படியானால், கடந்த 10 ஆண்டுகளில் பொறியியல் படித்த அத்தனை பேரின் ஃபியூச்சரும் இப்போது நன்றாக இருக்கிறதா? இல்லையே! பல்லாயி ரம் பொறியியல் மாணவர்கள் டேட்டா என்ட்ரி, பி.பி.ஓ. என 7,000-த்துக்கும் 8,000-த்துக்கும் அல்லாடுகின்றனர். ஏன் இந்த நிலை?''ஏனென்றால், ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு திறன் இருக்கிறது. 100 சி.சி. பைக்கை, 500 கி.மீ. வேகத்தில் ஓட்ட முடியாது. ஒரு பையனுக்கு ஒரு பாடம் ஒரு மணி நேரத்தில் புரிந்தால், இன்னொருவன் அதற்கு மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்வான். அது அவரவர் திறன் சார்ந்தது. இதைப் புரிந்துகொள்ளாமல், பொத்தாம்பொதுவாகப் 'படி படி’ என்றால் எப்படி முடியும்?'உண்மையில், இன்றைய மாணவனின் முக்கியத் தேவை, பிரச்னை வரும்போது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியமும் தவறு செய்தால் துணிவுடன் தட்டிக்கேட்கும் நேர்மையும்தான். ஆனால் யதார்த்தம்? மாணவர்களின் மனம் எல்லாவற்றுக்கும் உடனடி முடிவை எதிர்பார்க்கிறது. ஃபாஸ்ட் ஃபுட்போல, இன்ஸ்டன்ட் காபியைப் போல உடனடித் தீர்வு கிடைக்கும் இடம்... மரணம்!மாணவர் சங்கம், கல்லூரிகளில் நடக்கும் மாணவர் பேரவைத் தேர்தல், இலக்கிய மன்றம் என மாணவர்களைப் படிப்பின் சுமையில் இருந்து விடுவித்து, அவர்களைச் சமூகத்துடன் இணையச்செய்யும் எந்த அம்சமும் இன்றைய கல்வியில் இல்லை.அநீதியான கல்விக் கொள்ளை, பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் கௌரவக் கனவு, அழுத்தும் கல்விச் சுமை என இது ஒரு சங்கிலி வலைப் பின்னல். மாய மந்திரம்போல இதற்கு ஓர் இரவில் தீர்வு காண முடியாது. அதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவை. அதை நம்மில் இருந்தே தொடங்குவோம்!

விகடன் 

 

1 comment:

  1. மனம் கனக்கிறது மாணவமணிகளின் தற்க்கொலைகளை நினைத்து....

    தீர்வு 1 : பெற்றோர்கள் தயவு செய்து இந்த பள்ளியில் தான் இந்த கல்லூரியில் தான் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற கனவுகளை தயவு செய்து விட்டு விடுங்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் கொல்லைகள் அறிவீர் தாங்கள்..

    தீர்வு 2 : எந்த கல்லூரியிலோ அல்லது பள்ளிகளிலோ மாணவமணிகள் மனதின் நிலைப்பாட்டை கவனிக்க யாரேனும் உண்டோ இல்லை, ஒவ்வொரு கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் மனோத்தத்துவ நிபுனர்களை நியமிக்க வேண்டும் மாதம் இரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ மாணவமணிகளுக்கு அவர்களின் மனவெளிப்பாடுகளை அறிந்துக்கொள்ள கவுன்சிலிங் வைக்க வேண்டும் அதற்க்கேற்றவாரு புரிதல் அவர்களிடம் உண்டோ என்பதயெல்லாம் கண்டறிந்து ஒரு நல்ல வழியில் அவர்களின் பயணத்தை துவக்கலாம் ...

    எனக்கு இதுப்போன்ற கவுன்சிலிங் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது தந்தை பணிப்புரியும் தொழிற்ச்சாலையின் மூலமாக மாதம் ஒரு முறை அனைத்து சக தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் கிட்டியது என்னை நான் முழுவதுமாக அறிந்துக்கொள்ள ஒரு வரபிரசாதமாக அமைந்தது... எனது அனுபவத்தின் படி இன்றைய சூழலில் மாணவமணிகள் தங்களைத் தாங்கள் அறிந்துக் கொள்ளும் விதம் விழிப்புணர்வு வகுப்புகள் ஒவ்வோரு கல்லூரியிலும் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட்டால் மாணவர்கள் தற்க்கொலைகளை தடுக்கலாம் மட்டும் அல்ல அச்சம்பவம் நடக்க வாய்ப்புகள் இல்லை ....

    ReplyDelete