Search This Blog

Tuesday, January 25, 2011

தமிழகத்தின் தொழிற் சூழல் எப்படி?

ம் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி பற்றி பேப்பரில் படிக்கும்போதெல்லாம் பெருமிதமாக இருக்கிறது. உலக வல்லுனர்கள் எல்லாம் ஓஹோ என்று புகழுகிறார்கள். அதே சந்தோஷத்தோடு பக்கத்தில் இருக்கும் ஏதாவது சிறு/குறு தொழில் செய்துவரும் பிஸினஸ்மேனைச் சந்தித்து தொழில் பற்றி பேச்சை எடுத்தால் அவர்களோ நேர்மாறாக கதறுகிறார்கள்!

உண்மையில் நம்நாட்டில் தொழிற்சூழல் நன்றாக இருக்கிறதா இல்லையா, இல்லை என்றால் எஸ்.எம்.இ. பிஸினஸ்மேன்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் என்ன, குறைந்தபட்சம் அவர்கள் செய்கிற பிஸினஸில் அவர்களுக்கு திருப்தியாவது இருக்கிறதா? இது மாதிரியான கேள்விகளை அவர்களிடமே கேட்க விரும்பினோம். இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்கள் அனைத்திலும் உள்ள பிஸினஸ்மேன்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டோம். அவர்கள் சொன்ன பதில், தமிழகத்தின் இன்றைய தொழிற்சூழலை வெட்ட வெளிச்சமாக்குவதாக அமைந்திருந்தது. 


 
தலையாயப் பிரச்னை!

சொல்லவே வேண்டியதில்லை, மின்வெட்டுதான்! ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னாடியெல்லாம் கோடைகாலம் வந்தாதான் மின்வெட்டு அதிகமா இருக்கும். ஆனா இப்போ கோடையோ, மழைக்காலமோ எதுவா இருந்தாலும் மின்வெட்டுதான். இவ்வளவுக்கும் காற்றாலை மூலமா அதிக மின்சாரம் கிடைச்சும், எங்களுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்தபாடில்லை. இந்த இருபது வருஷத்துல புதுசா எந்த மின்திட்டமும் கொண்டுவரலை. இதுதான் இந்த நிலைக்குக் காரணம். அதுவே குஜராத்தைப் பாருங்க, அங்க கரன்ட் கட் அப்படிங்கிற பேச்சே கிடையாது.


 
ஆட்கள் பற்றாக்குறை!

மின்வெட்டுக்கு அடுத்தபடியாக அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருப்பது வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காதது!.''முன்னாடி எல்லாம் நிறைய பேர் ஏதாவது ஒரு வேலை கொடுங்கன்னு கேட்டு வருவாங்க. ஆனா இப்போ ஆட்கள் தேவையா இருந்தும் கிடைக்கமாட்டேங்கிறாங்க. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துல 100 நாள் வேலை கொடுத்துடறாங்க. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துடுது. பிறகு எதுக்கு அவங்க வேற வேலை தேடணும்? அதனாலதான் ஒருத்தரும் வேலை கேட்டு வரமாட்டேங்கிறாங்க.


 
தயங்கும் வங்கிகள்!

அரசாங்கத்துக்கு அடுத்து எஸ்.எம்.இ.களின் அதிருப்திக்கு அதிக அளவில் உள்ளாகி இருப்பது வங்கிகள்தான்.

ஃபேக்டரியில வேலை பார்த்துக்கிட்டிருந்த ஒருவர் , சொந்தமா தொழில் துவங்கற ஆசையில பேங்குல 6 லட்சம் கடன் கேட்டார் . எல்லா டாக்குமென்ட்டும் சரியா இருந்தும் எட்டு மாசம் அலைய விட்டாங்க. கடைசியில 85,000 லஞ்சம் கொடுத்துதான் கடன் வாங்கினார்  ! வங்கிகளோட ஒத்துழைப்பு இந்த லட்சணத்துலதான் இருக்குது''.


 
வளர்ச்சி இல்லை!

 சுருக்கமாகச் சொல்வதென்றால் தினம் ஒரு பன்னாட்டு நிறுவனம் நம் தமிழகத்தைத் தேடி வந்துகொண்டிருக்கையில் உள்ளூர் எஸ்.எம்.இ-க்களோ தொழில் செய்யச் சாதகமான சூழ்நிலை இல்லை என்று நினைப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது!.

No comments:

Post a Comment