Search This Blog

Monday, January 17, 2011

ஃபிக்ஸட் டெபாசிட் - வங்கி

ஒரு லட்ச ரூபாய் வைத்திருக்கிறீர்கள்... மற்ற முதலீடுகளில் உங்களுக்கு விருப்பமும் இல்லை... ஃபிக்ஸட் டெபாசிட் மட்டும் போதும் என்று நினைக்கிறீர்கள். என்ன செய்வீர்கள்? மொத்த ரூபாயையும் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு விட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவேன் என்கிறீர்களா? வேண்டாம் , கொஞ்சம் யோசியுங்கள் !

மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் அல்லது அதிக நஷ்டம் அடையக்கூடும். காரணம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்ற வாய்ப்பிருக்கிறது. அதனால் நமக்குக் கிடைக்கும் வட்டியும் மாறலாம்.

ஒரு லட்ச ரூபாயை மொத்தமாக ஐந்து வருடம் பத்து வருடம் என்று டெபாசிட் செய்ய வேண்டாம். ஒரு லட்ச ரூபாயை முதலில் மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பங்கான 33,333 ரூபாயை ஒரு வருட டெபாசிட்டில் போடவும். அடுத்த பங்கை இரண்டு வருட டெபாசிட்டிலும், மீதமுள்ள மூன்றாவது பங்கை மூன்று வருட டெபாசிட்டிலும் பிரித்துப் போடவும். ஒரு வருட முதலீட்டுக்கு 8% வட்டி என்றால், வருட முடிவில் 36,000 ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகையை எடுத்து புதிதாக ஒரு மூன்று வருட டெபாசிட் ஆரம்பித்து அதில் போடவும். 
அடுத்து இரண்டு வருடத்துக்கு போட்ட டெபாசிட் முடிவுக்கு வரும்போது அதை இன்னொரு மூன்று வருட டெபாசிட்டில் போடவும். அதே போலவே முதலில் மூன்று வருடத்துக்கு போட்ட மூன்றாவது பங்கையும் அதன் முதிர்வுக்குப் பிறகு எடுத்து இன்னொரு மூன்றாண்டுக்கு போடவும்.  

இப்படி பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் அனைத்து விதமான வட்டி விகிதங்களிலும் நாம் முதலீடு செய்திருப்போம். நம் முதலீட்டுக்கு மிதமான லாபமும் கிடைத்திருக்கும்.

No comments:

Post a Comment