Search This Blog

Saturday, January 22, 2011

செய்திகள்

சீமானுக்கு குறிவைக்கும் கும்பல்!

''காங்கிரஸ் - தி.மு.க. தரப்புகளை வீழ்த்த சீமான் செமத்தியான ஆயுதம்!'' என எதிர்க்கட்சிகள் ஆர்வத்தோடு இருக்க... சீமானுக்கு குறிவைத்து சிலர் ஆயுதங்களோடு தமிழகத்தில் உலவி வருவதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

''தமிழகத்தின் எழுச்சியைத் தணிய​விடாது செய்யும் சீமானின் முழக்கமும், நாளைய அரசியலை நோக்கி அவர் உருவெடுப்பதும் சிங்கள அரசால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அரசியல் அரங்கில் சீமான் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பது சிங்கள அரசுக்கு குடைச்சலாக இருக்கிறது. அதனால் புலிகளுக்குப் போட்டிக் குழுக்களாக விளங்கும் இரு குழுக்களில் இருந்து ஆறு பேர் தயார் செய்யப்பட்டு அவர்கள் முழுவிதமான பயிற்சிகளுடன் தமிழகத்தில் உலவவிடப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர் யாழ்பாணத்தில் பிறந்த ஒருவர். வேலூர் சிறையில் இருந்து சீமான் வெளி​வந்தபோதே அவரைக் கொல்ல சதி நடந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. சீமான் தனியாக நிற்கும் சமயத்திலோ அல்லது கூட்டத்தில் இருக்கும்போதோ குண்டுகளை வீசித் தாக்குவதுதான் அவர்களின் திட்டம். சீமானை இந்த நேரத்தில் வீழ்த்தினால், பழியை ஆளும் கட்சியினர் மீது போடலாம் என்பதும் சிங்கள அதிகாரிகளின் திட்டமாக இருக்கிறது!''  


குஜராத் வாழும்... தமிழகம் தேயும்?

மாநிலவாரியாகச் சென்று, சலுகைகளை அள்ளிக்கொட்டி, அங்குள்ள  தொழிற்சாலைகளை குஜராத்துக்குக் கொண்டு​வருவதில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி சமர்த்தர்! 'வைபரண்ட் குஜராத்’ என்ற பெயரில் நான்கு நாள் நடைபெற்ற விழாவில், 52 லட்சம் வேலை வாய்ப்பு​களை உருவாக்கக்கூடிய அளவுக்கு 8,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் உருவெடுக்கும்போது 21 லட்சம் கோடிக்கு குஜராத்தில் மூலதனம் குவியுமாம்!

மின்பற்றாக்குறை, தொழிலாளர் பிரச்னை என சென்னையில் ரொம்பவே திண்டாடும் ஹூண்டாய், ஃபோர்டு கார் கம்பெனிகளுக்கும் காதும் காதும் வைத்தாற்போல அழைப்பு விடுத்துள்ளாராம் மோடி. இதில் வெற்றிபெற்றால், தமிழகத்​துக்குக் கிடைக்கவேண்டிய ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் அம்பேல்தான்!

இதை மோப்பம் பிடித்த தமிழக காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, மோடியின் முயற்சியைத் தடுக்கும்படி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மாவுக்குக் கடிதம் எழுதினார். என்றாலும், ''இந்த விஷயத்தில் நான் எப்படி உதவுவது? தடை இல்லாத மின்சாரத்தையும் தொழிலாளர் பிரச்னை இல்லாத சுமுகமான சூழலையும் விரும்பி ஒரு கம்பெனி குஜராத்துக்குப் போகிறது என்றால், தமிழகத்தில் அத்தகைய வசதிகளை ஏற்படுத்தாதது தவறுதானே? மத்திய அரசு இதனைத் தடுத்து நிறுத்த வாய்ப்பு இல்லை!'' எனச் சொல்லிவிட, தற்போது இது குறித்து முதல்வர் கருணா​நிதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நீக்க நினைத்த பிரதமர்... தடுத்த சோனியா!

பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டுக்கு முன்பு, பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை மாற்றத்தை செய்துள்ளார். இதில், விலாஸ்ராவ் தேஷ் முக், முரளி தேவ்ரா (மகாராஷ்ட்ரா), வீர்பத்ர சிங் (இமாச்சல்), எம்.எஸ்.கில், சிபி ஜோஷி, சாய் பிரதாப் (ஆந்திரா), கமல்நாத் (ம.பி.) ஆகியோர் நீக்கப் பட்டியலில் இருந்தனர்.

அடுத்து, திறமையற்றவர்கள் பட்டியலில் வீர்பத்ர சிங், எம்.எஸ்.கில் என்று பலர் இருந்தனர்.ஆனால், மொத்த பேருமே விஷயத்தை எப்படியோ முன்​கூட்டியே மோப்பம் பிடித்து, சோனியா வீட்டுக்​குப் படை எடுத்தனர். பலர் தாங்கள் கட்சியை விட்டு ராஜினாமா செய்வோம் என்றும் மிரட்டினார்​களாம்.

அதன் பிறகுதான் 'நீக்கல்’ திட்டமே நீக்கல் ஆனதாம்! ஆனாலும், சீக்கிரமே மீண்டும் நீக்கல் சர்ச்சை கிளம்பும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.


தனிக்கட்சி சாமியோவ்! 
 

இரண்டரை ஆண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கண்ணா​மூச்சி ஆடிய முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஒருவழியாய் தனது எம்.எல்.ஏ. பதவியை உதறி இருக்கிறார். அவருடைய மூவ் தெரிந்து தமிழகக் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியைசமாதானத் தூது அனுப்பியது காங்கிரஸ். ஆனால், கிருஷ்ணசாமி வந்துபோன அடுத்த நாளே தனது எம்.எல்.ஏ. பதவியை உதறிய ரங்கசாமி சீக்கிரமே தனிக்கட்சித் தொடங்க இருக்கிறாராம். என்.ஆர். காங்கிரஸ் என்பதுதான் கட்சிக்​கான பெயராம். 'தேசியவாத ராஜீவ் காங்கிரஸ்’ என இதற்கு விரிவு சொல்லப்பட்டாலும், 'என்.ரங்கசாமி காங்கிரஸ் என்பதுதான் உண்மையான விரிவாக்கம்!’ என்கிறார்கள் விஷயமறிந்த காங்கிரஸ்​காரர்கள்.



சங்கராபுர சஸ்பென்ஸ்!

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அரசு பஸ் டெப்போவுக்கு கடந்த 20-ம் தேதி வந்த அரசுப் பேருந்தில் டிராவல் பேக் ஒன்று கிடந்திருக்கிறது. பணிமனைப் பாதுகாவலர் அதைப் பரிசோதிக்க... உள்ளே ஒரு பெண்ணின் தலையும், இன்னொரு பாலித்தீன் பையில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையின் உடலும் இருந்தி​ருக்கிறது. குழந்தை​யின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய அடையாளம்!

''பெண் தலை இருந்த பேக்கில் ஒரு நீல நிற காகித கவர் கிடைத்தது. அதில் சென்னை முகவரி ஒன்று உள்ளது. எனவே, இந்தக் கொ​லை​கள் சென்னை அல்லது சேலத்தில் நடந்திருக்​கலாம். கள்ளக் காதல் காரணமாகவும் இருக்க​​லாம்!'' என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

 செய்திகள்


No comments:

Post a Comment