முழுமையான பெண்ணாக இருக்கும் ஒருவரின் எடை, பிறந்த குழந்தையை விட கொஞ்சம் அதிகமாக இருக்குமா? "என் எடை அப்படித்தான்...' என அதிசயமாக சொல்கிறார் ஒரு பெண்.
உலகின் மிகவும் குள்ளமான பெண் என சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அந்த பெண்ணின் பெயர் ஹாட்சிஸ் ஹோகாமன். இவர், துருக்கி நாட்டில் கதிரிலி என்ற நகரில் வசிக்கிறார். இவர் உயரம் வெறும் 28 அங்குலம் தான்.
ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இந்த பெண்ணின் உயரம் மட்டும் அதிகரிக்கவே இல்லை. இவர் அம்மா உட்பட, இவர் வீட்டில் எல்லாருமே வழக்கமான உயரம் கொண்டவர்கள் தான். ஹாட்சிஸ் மட்டுமே வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கிறார்.
ஹாட்சிசின் வயது இப்போது 21. உலகின் மிகவும் குள்ளமான மனிதர், நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திர தாபா. அவர் உயரம் 25.8 அங்குலம். தாபாவை விட இந்த பெண் உயரம் சிறிது அதிகம்.
தினமலர்
No comments:
Post a Comment