விருதுநகர் . விருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது.. தொடர்ந்து 25 வருடங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட வாரியாக தொடர்ந்து முதலிடம் இருக்கும் ஊர் விருதுநகர்.
சென்ற முறை நான் விருதுநகர் சென்ற பொழுது என்னை அறியாமல் கோபம் வந்தது . ஏற்கனவே குறுகலான சாலைகள் உள்ள அந்த இடத்தில தற்பொழுது பாதாள சாக்கடை என்ற பெயரில் கடந்த நாலு வருடங்களாக ரோடு எல்லாம் தோண்டி போட்டு நடக்க கூட வழி இல்லாமல் செய்த கவுன்சிலர் மற்றும் அவர்களின் கையில் இருக்கு நகராட்சி ஆணையர் மீது...
வச்சுட்டாங்க ஆப்பு..
விருதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் நடந்த குளறுபடிகள் காரணமாக, விருதுநகர் நகராட்சிகமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் ஆகியோரை அரசு சஸ்பெண்ட் செய்து உள்ளது. எதனால் என்பதை அறிந்து கொள்ள மேலும் படியுங்கள் ...
விருதுநகரில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவு நீரை பாதாளச் சாக்கடை மூலம் ஊருக்கு வெளியே கொண்டுவந்து, புதிதாக நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, வெளியேற்றுவதுதான் திட்டம்! இதற்காக 23.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை நிறைவேற்றும் பொறுப்பு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 2006 டிசம்பரில் தொடங்கி, 2008 டிசம்பருக்குள் முடித்துத் தரவேண்டும் என்று காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
'ப்ரியா கன்ஸ்ட்ரக்ஷன், சேகர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது. ஆனால், பல பிரச்னைகளினால் சுணக்கம் ஏற்பட்டு, முயல் வேகத்தில் ஆரம்பித்த பணி, நத்தை வேகத்துக்குப் போனது! பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே பாதியில் விடப்பட்டது.
இந்த நேரத்தில், விருதுநகர் நகராட்சி நிர்வாகம் திடீரென ஒரு காரியத்தில் இறங்கியது. வீடு, தெருக்களில் உள்ள கழிவு நீர்க் குழாய்களைப் பாதாள சாக்கடையில் இணைத்து, அதை அருகே ஓடும் கவுசிகா நதியில் கலக்க வைத்தது. இந்த முறைகேட்டினை, விருதுநகர் நகர்நல அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதாரத்துடன் புகார் அனுப்பியது. அதனால், 'பாதாள சாக்கடை திட்டம் முடிவடையாத நிலையில், வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பது தவறு. உடனே இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்’ என்று நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். ஆனால், 'கனெக்ஷனை கட் பண்ணினால்... கழிவு நீர் ரோடுகளில் ஓடும்’ என்பதால் நகராட்சி நிர்வாகம் செயலற்று நின்றது. இதனால் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் அரசு சஸ்பெண்ட்செய்து உள்ளது ...''
ஏற்கனவே எனக்கு தெரிந்து அரசு கொடுத்த சுமார் 25 கோடி கோவிந்தா !!!! வாழ்க கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி தலைவி.. பூனைக்கு மணி கட்ட போவது யாரோ !!
No comments:
Post a Comment