Search This Blog

Wednesday, January 19, 2011

உங்கள் தன்னம்பிக்கையின் அளவு?

கீழே உள்ள ஒவ்வொரு கேள்விக்குமான உங்கள் உண்மையான விடையைக் குறித்துக் கொள்ளுங்கள். கேள்விகளின் முடிவில் ஒவ்வொரு விடைக்குமான மதிப்பெண் குறிக்கப்பட்டுள்ளது. உங்கள் மொத்த மதிப்பெண்கள் குறித்த மதிப்பீடு இறுதியில். 

1. மேஜிக் நிகழ்ச்சியில் ‘யாராவது மேடைக்கு வாருங்கள்’ என்று அழைக்கிறார் மந்திரவாதி. உங்கள் நிலை என்ன?

(அ) உடனே எழுந்து மேடைக்குச் செல்வேன்.
(ஆ) எதற்கு வம்பு? என்னைக் கூப்பிட்டு விடு வாரோ என்று தலையைக் குனிந்து கொள்வேன்
(இ) என்னைக் குறிப் பாகக் கூப்பிட்டால் மட்டும் தயக்கமின்றிப் போவேன்.  

2. ஆண்டுத் தேர்வு (அல்லது அலுவலகத் தேர்வு) இன்னும் மூன்று வாரங்களில் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் உங்களுக்குத் தொடர்ந்து இரு நாட்களுக்குக் காய்ச்சல் என்றால் உங்கள் மனநிலை பெரும்பாலும் எப்படி இருக்கும்?

அ) நடுங்கிவிடுவேன். மிகவும் கவலை யுடன் டாக்டரை அணுகுவேன்.
ஆ) மூன்று வாரம் உள்ளன என்பதால் கவலையில்லை. எனினும் டாக்டரின் ஆலோசனையைப் பெறுவேன்.
இ) காய்ச்சலெல்லாம் ஒரு பெரிய விஷயமா? அதுபற்றிக் கவலைப்பட மாட்டேன்.

3. மிருகங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் நண்பருடன் ஜீப்பில் சென்று வரத் திட்டம். கடைசி நிமிடத்தில் நண்பரால் வரமுடியவில்லை. உங்களை மட்டும் போய்வரச் சொல்கிறார். ஓகேவா?

(அ) அட போங்க, இந்த மாதிரி நடுங்க வைக்கும் திட்டத்துக்கு நான் முதலில் ஒப்புக்கொண்டே இருக்க மாட்டேன்.
(ஆ) அதனால் என்ன, நான் மட்டும் ஜீப்பில் கிளம்பிவிடுவேன்.
(இ)துணை இருந்தால்தானே ஒரு பாதுகாப்பு. எனவே வேறொரு சந்தர்ப்பத்தில் நண்பரும் வர முடிந்தபோதுதான் கிளம்பு வேன். 
4. அலுவலகத்துக்குக் கிளம்பும்போது பார்த்தால் வண்டியின் சாவி அது இருக்க வேண்டிய இடத்தில் காணோம். என்ன உணர்வு தோன்றும்?

(அ) கொஞ்சம் பதற்றம்
(ஆ) அதனாலென்ன? வேறு இடத்தில் இருக்கும். தேடினால் கிடைத்துவிட்டுப் போகி றது.
(இ) மிக அதிகமான டென்ஷன்.

5. சில திரைப்படப் பாடல்களில் ஒரே பாட்டில் ஏழை, கோடீஸ்வரனாகி விடுவதாகக் காட்டுகிறார்கள். இது சாத்தியமா?

(அ) ஒரே பாட்டை விடுங்கள். ஆயுளுக்கும் சாத்தியம் இல்லை.
(ஆ) சாத்தியம்தான். ஆனால் அவ்வளவு வேகமாக அல்ல.
(இ) நேரமும் உழைப்பும் கூடினால் எதுவும் சாத்தியமே. 
6. மாலை நேரம். இருட்டும் வெளிச்சமுமாகக் கலந்திருக்கும் அறை ஒன்றில் நுழைகிறீர்கள். ஆறடி தூரத்தில் ஏதோ கிடக்கிறது. பாம்பா, கயிறா என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்?

(அ) உரக்கக் குரல் கொடுத்து யாரை யாவது துணைக்கு அழைத்துக் கொள்வேன்.
(ஆ) பயத்தில் அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓடுவேன்.
(இ) அதனருகில் தடியால் தட்டி பாம்பா கயிறா என்பதை உறுதி செய்துகொள்வேன்.

7. சுய முன்னேற்ற நூல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

(அ) முத்துக்கள். அவற்றில் கூறு வதைப் பின்பற்றப் பின்பற்ற வெற்றி நிச்சயம்.
(ஆ) நமக்கு எது சாத்தியமோ அந்தக் கருத்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(இ) வேஸ்ட். ஒரு பயனும் கிடையாது. 
8. சொல்லப்படும் கருத்து என்கிற வகையில் எந்தப் பாடல் வரி உங்களுக்கு அதிகம் பிடிக்கும்?

(அ) உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
(ஆ) நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
(இ) நினைத்ததை நடத்தியே முடிப்ப வன் நான் நான்.

 உங்களின் மொத்த மதிப்பெண் கள் 30லிருந்து 40வரை என்றால் தன்னம்பிக்கையின் சிகரமே, வாழ்த் துக்கள். ஆக்கபூர்வமாகச் சிந்திக்கிறீர்கள்... சபாஷ். ஆனால் கூடவே சில எச்சரிக்கை வார்த்தைகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. தேவைப்படும் எச்சரிக்கைகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை என்பது தலைக்கனமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

 உங்கள் மொத்த மதிப்பெண்கள் 15 லிருந்து 29 வரை என்றால், நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டுக்கும் நடுவே ஊசலாடுகிறீர்கள். என்றாலும் தேவையான தன்னம்பிக்கை இருக்கிறது உங்களிடம். எனினும் எந்தெந்தக் கேள்விக்கான மதிப்பீடுகளில் குறைவான மதிப்பெண்கள் வாங்கினீர்கள் என்பதைக் கவனித்து உங்களை ஆக்கபூர்வமான வழிகளில் மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது உங்களால் மேலும் சாதிக்க முடியும். 

உங்கள் மொத்த மதிப்பெண்கள் 15க்கும் குறைவு என்றால்: என்ன இது இப்படியா தன்னம்பிக்கையில் லாமல் இருப்பது? இப்படி இருந்தால் வாழ்க்கை சுருங்கிவிடும். மிகவும் பாது காப்பான உறவினர்களுடன் மற்றும் நண்பர்களுடன்தான் பேசிக்கொண்டிருப்பீர்கள். அவர்களைக்கூட முழுவதுமாக நம்பிவிடமாட்டீர்கள். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால், எதிலுமே தாழ்வுமனப்பான்மை என்றால் வாழ்க்கை அர்த்த மற்றுப் போய்விடுமே! மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே.

- நான் 27 மதிப்பெண் பெற்றேன்.

2 comments:

  1. ஐயா நான் 32மதிப்பெண்.

    நன்றி.

    ReplyDelete
  2. நான் 28 மதிப்பெண் பெற்றேன்

    ReplyDelete