முதன் முறையாக கார்த்திக் இரட்டை வேடத்தில் நடிக்கும் ,தெலுங்கில் "மஹதீரா" புகழ் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த "விக்கிரமார்க்கடு" திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த சிறுத்தை. ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான ஆட்களை தேர்வு செய்து இயக்குனர் சிவா ஒரு கம்மேர்சியால் காக்டெயில் கொடுத்து உள்ளார் . கதை நாம் பலமுறை பல படங்களில் பார்த்துவிட்ட கதைதான் என்றாலும் படுவேகமான திரைக்கதைதான் படத்திற்கு மிகப்பெரிய பலம். கதை : ராக்கெட் ராஜா சென்னையில் திருட்டு வேலைகள் செய்பவன் ,அவனுக்கு உதவியாக சந்தானம். ஒரு திருமணத்தில் தமனாவை பார்த்து காதல் கொள்கிறான் .ஒரு திருட்டு சமயத்தில் சின்ன குழந்தை இவனை அப்பா என்று அழைத்து இவனுடன் ஒட்டிகொள்கிறாள்,ராஜாவுக்கு எல்லாம் குழப்பமாக உள்ளது .பிறகுதான் அவனுக்கு தெரிய வருகிறது இவனை போலவே உருவ ஒற்றுமை உள்ள ரத்தினவேல் பாண்டியனின் குழந்தை தான் அது என்று . அதற்கு பிறகும் நடக்கும் லாஜிக் இல்லா அதிரடியை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . கார்த்தி : பாடி லாங்குவேஜ் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் கேரக்டரில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சீனியர் ஆபிசர் பானுசந்தர் இவரிடம் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் பயம் இருக்க வேண்டும்" என்று சொல்லும்போது "எனக்கும் பயம் இருக்கு சார். எங்க நான் என் கடமைகள முடிக்காம செத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்குன்னு " சொல்லிவிட்டு கம்பீரமாக சல்யுட் அடிக்கும் போது ஜொலிக்கிறார். "மரணம் என்னை நோக்கி வரும் பொழுது அதை சிரிப்போடும் ,மீசையை என் கை தடவிய படியும் வரவேற்ப்பேன்" என்று கம்பீரமான் போலீஸ் அதிகாரியாக....ராக்கெட் ராஜா கேரக்டரு வசன உச்சரிப்பு மிக அருமை . சந்தானம் : தமன்னா வழக்கம்போல் தமிழ் சினிமா நாயகி போல் வந்து போகிறார் . கொஞ்சம் கொட்சிகள் , மூணு பாட்டு அந்த வகை. முதல் முறையாக அவர் இடுப்பை கட்டி நடித்து உள்ளார். வளர்க அவரது சேவை . மயில் சாமி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். ஆனால், படத்தில் குறைகள் நிறைய உள்ளது . நீங்கள்,லாஜிக நன்றாக வாய் விட்டு சிரித்து + சண்டை படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவரா..? சிறுத்தை உங்களுக்கான படம்தான்! தயவு செய்து கார்த்திக் இம்மாதிரியான ஆக்சனை விட, காமெடி அற்புதமாக வருகிறது. எப்படினாலும் இந்த படம் வசூலில் ஹிட் அடிக்க போகுது. விஜய் டிவி இந்த படத்தை சுமார் நாலு கோடிக்கு சில லட்சம் கம்மியாக வாங்கி உள்ளார்கள்.. |
Search This Blog
Sunday, January 16, 2011
சிறுத்தை
Subscribe to:
Post Comments (Atom)
nice review
ReplyDelete