வெற்றி மாறன் யதார்த்த படத்தை தருவேன் என்று அடம் பிடிக்கும் இயக்குனர் . பொல்லாதவன் படத்தை சென்ற வருடம் தான் பார்த்தேன். அவரின் திரைக்கதை எனக்கு பிடித்து போனது. ஆடுகளம் ஏற்கனேவே நான் கணித்த படி இந்த வருஷத்தின் முதல் ஹிட் படம் . நல்லா இருந்துச்சான்னு கேட்டா, கண்டிப்பா நல்லா இருந்துச்சு. ஆனா, படம் பார்த்து முடிச்ச அப்பறம் ஏதோ ஒண்ணு குறைவது தெரிந்தது . என்னான்னு சொல்லத் தெரியலை.
கதை :
கருப்பு (தனுஷ்) சேவல் சண்டை தான் உயிர். சேவல் சண்டையின் எல்லா நுணுக்கங்களும் தெரிந்தவர் பேட்டைகாரர் ( ஜெயபாலன்) . அவர் தான் கருப்புக்கு எல்லாமே . கருப்பு தயார் செய்த சேவல்களில் ஒன்று சரியில்லை என அதை அறுத்து போட்டு விட சொல்கிறார் பேட்டைகாரர். ஆனால் கருப்பு அதை செய்வதில்லை. அதே சேவல் ஒரு சந்தர்பத்தில் போட்டியில் வென்றுவிட எங்கே தன்னை விட இந்த கருப்பு பெரிய ஆள் ஆகி விடுவானா என்று பேட்டைகாரருக்க்கு கருப்பின் மேல் பொறமை வளர்கிறது. பொறாமையின் உச்சத்தில் கருப்பை அழிக்க கை நகர்த்து கிறார். யார் விளையாடி ஆட்ட நாயகன் விருதை வாங்கினார்கள் என்பதே இந்த ஆடுகளம் .
தனுஷ், ஜெயபாலன் இருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்கள். தனுஷ் மதுரை தமிழ் பேசி அசத்தி உள்ளார். இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. தனுஷ்க்கு இந்தப்படம் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய படமே. தனுஷின் உடல்மொழி கேரக்டருக்கு அச்சுஅசலாக பொருந்தி போகிறது.
தன்னைத்தான் நாயகி காதலிக்கிறேன் என்று கைகாட்டியவுடன் தனுஷ் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அடடா . அதே உற்சாகத்தோடு லுங்கியை தூக்கி மடித்துக்கொண்டு அவர் ஆடுகையில் வாய்ப்பே இல்லை . பார்த்தால் தான் தெரியும் ..
நாயகி வெட்டி.. ஏற்கனவே நினைத்தது போல மகா சொதப்பல்.. இடைவேளைக்கு முன்னால் வரும் சேவல் சண்டை காட்சி தான் படத்தின் தூள் காட்சி.. இடைவேளைக்கு அப்புறம் எனக்கு படம் பிடிக்கவில்லை..
பாடல்கள் நல்லா இருக்கு.. பார்க்க பிடிக்கவில்லை.. தனுஷ் அம்மாவா நடித்த பெண் மற்றும் பேட்டைக்காரன் மனைவி தனுஷ் கூடவே வரும் நண்பன் என அனைவரும் நிறைவாக நடித்து உள்ளார்கள் .. கிஷோரே வழக்கம் போல கிடச்ச எடத்துல சூப்பரா ஸ்கோர் பண்ணுறாரு..
சேவல் சண்டையின் பின்னணி, சேவலை எப்படி போட்டிக்கு தயார் செய்து, அடிபட்ட சேவலுக்கு எப்படி முதலுதவி செய்வது, சேவலின் ரத்தத்தை எப்படி உறிஞ்சி எடுப்பது, இந்தப் போட்டிக்காக வெளிநாடுகளில் இருந்து கூட இருந்து சேவலை எப்படி வரவழைக்கிறார்கள் என்ற மிக நுணுக்கமான விவரங்களை சுவாரஸ்யமாய் நுழைத்ததில் வெற்றிமாறன் ஜொலித்திருக்கிறார்.
ஒலிபதிவு சரியாக கேட்க்க வில்லை. படம் முழுவதும் இருட்டிலே நடப்பது படத்தின் பலவீனம் ..
No comments:
Post a Comment