ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசென்ஸ் உரிமங்களைப் பெற்ற கம்பெனிகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள்
1.ஸ்வான்: சாகித் பல்வா குடும்பமும் வினோத் கோயங்கா குடும்பமும் இணைந்து நடத்தும் கம்பெனி. மும்பையில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பலே கம்பெனி. ''இந்திய உளவுத் துறை எடுத்துவைத்திருக்கும் சான்றுகளின்படி இதன் முக்கியத் தொடர்பில் தற்போது கராச்சியில் வசிக்கும் - பகீர் மனிதர் ஒருவரும் இருக்கிறார்!'' என்றும் சொல்லப்படுகிறது.
கம்பெனி உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வா உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 937-வது நபராக இருக்கிறார். இவரது இருப்பிடம் மும்பை. இதே கம்பெனியின் இன்னொரு சேர்மனான வினோத் கே.கோயங்கா இருப்பதும் மும்பையில்தான்.
2.சிஸ்டமா ஷியாம் டெலிகாம்: எம்.டி.எஸ். குரூப்புடன் இணைந்த நிறுவனம் இது. டவர் 334, உதயோக் பவன், குர்ஹான், ஹரியானா மாநிலம் என்ற முகவரியில் திடீரென முளைத்த நிறுவனம் இது. இதன் இயக்குநர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை!
3.லூப் டெலிகாம்: இதன் இந்திய இயக்கு நராக சந்தீப் பாசு என்பவரும் பங்குதாரராக அய்லோன் என்பவரும் இருக்கிறார்கள். மும்பை மாகிம் வெஸ்ட் பகுதியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். 2ஜி விண்ணப்பத்தை உத்யோக் விஹார், குர்ஹான் பகுதியில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இதன் நிஜஉரிமை யாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்!
4.யூனிடெக்: ஒன்பது உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாக இது உள்ளது. ரமேஷ் சந்திரா (சேர்மன்), அஜய்சந்திரா (எம்.டி., எச்.ஆர்.டி), சஞ்சய் சந்திரா (எம்.டி., அட்மின்), சஞ்சய் பகதூர், அனில் ஹரீஸ், ரவீந்தர் சின்கானியா, அம்ப்வானி, மினோத் பாஷி, மகந்தி ஆகிய ஒன்பது பேர்தான் சூத்திரதாரிகள். ''இந்த நிறுவனத்துக்கு முழுக்க முழுக்க நீரா ராடியா ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இதுதான் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனத்தின் துணைப் பெயரில் உருவானது!'' என்கிறது சி.பி.ஐ.
5.எஸ்.டெல் நிறுவனம்: 'ஸ்டெர்லிங்' சிவசங்கரன் என்றால் முன்பு தமிழகம் நன்கு அறியும். முரசொலி மாறனின் நண்பராக இருந்தவர். மெர்கன்டைல் வங்கியை வாங்கிய பிரச்னையில் இவர் செம ஹாட்டாக நியூஸில் அடிபட்டார். இன்றைய 'கலைஞர்' டி.வி-யின் உருவாக்கத்திலும் இவரது பங்கு நிறைய இருந்ததாகச் சொல்வார்கள். நிலம் விவகாரம் ஒன்றில் புகார்கள் கிளம்பி அவர் தவிர மற்ற பல நிர்வாகிகளும் கைதான பழங்கதையும் உண்டு. அந்த சிவசங்கரனின் நிறுவனம்தான் இது.
சிவசங்கரன் (சேர்மன்), வி.சீனிவாசன் (சி.இ.ஓ), பி.சுவாமிநாதன் (தலைவர்)... மற்றும் இயக்குநர்களான பீட்டர் கலிபோல்ஸ், எஸ்.சரவணன், எஸ்.நடராஜன், அலி யூசுப், அப்துல் ரஹ்மான் ரஷிம், டாக்டர் காசன் முராத் ஆகியோர் அடங்கிய டீம் இந்த நிறுவனத்தை நடத்துகிறது.
6.ஐடியா செல்லுலார்: இதன் இந்திய உரிமையாளர்களாக 12 பேரின் பெயர்கள் உள்ளன. குமாரமங்கலம் பிர்லா இதன் சேர்மனாக இருக்கிறார். ராகேஷ் ஜெயின், பிஸ்வாஜித் அன்னசுப்பிரமணியம், பிரகாஷ், தர்ஜானி வாகிப், பி.முராரி, ஜான் விட்டலங்க நவரோ, ராஜஸ்ரீ பிர்லா, சூரிபுத்த அன்ஸா, அருண் தியாகராஜன், சஞ்சய் அஹா, பார்கவா (இயக்குநர்கள்) ஆகியோர் பெயர்கள் உள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகர் முகவரியில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றுள்ளனர்.
7. வீடியோகான்: வேணுகோபால் என்.தத் என்பவர் இதன் சேர்மன். பிரதீப் என்.தத், கே.சி.ஸ்ரீவத்சவா, சத்யபால் தல்வார், எஸ்.பத்மநாபன், மேஜர் ஜெனரல் எஸ்.சி.என். ஜட்டார், அருன் எல்.போங்னிவார், ராடி ஷியாம் அகர்வால், குனிலா நார்ஸம், பி.என்.சிங், அஜய் சாப் ஆகியோர் பெயர்கள் இதன் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளன. இதற்கான தலைமை அலுவலகம் டெல்லியில்!
8. ரிலையன்ஸ் டெலிகாம்: அனில் அம்பானி - அதிகம் சொல்ல வேண்டியதில்லை!
9. டாடா டெலிகாம்: ரத்தன் டாடா - தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
No comments:
Post a Comment