பொதுவாக நம் தமிழகத்தில் பொங்கல் அன்று ஏக்க சக்க திரை படங்கள் வரும். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் பொங்கல் அன்று வெளியாகும் படங்கள் எண்ணிக்கை மிக சொற்பமான அளவில் தான் உள்ளது. அதற்க்கு காரணம் அனைவரும் அறிவோம்.
நான் விருதுநகரில் படிந்து கொண்டு இருக்கும் போது நான் பொங்கல் அன்று எதாவது ஒரு படத்தை முதல் ஷோபார்த்தால் தான் பொங்கல் நிறைவு பெரும். சில சமயம் எதிர்பார்த்த படங்களின் டிக்கெட் கிடைக்காமல் வேறு எதாவது படத்தை பார்த்து இரண்டாவது ஷோ படம் பார்த்த அனுபவம் உண்டு. அப்படி நான் பார்த்த படம் வாஞ்சி நாதன் மற்றும் தீனா . சில படங்கள் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விடும். பிரண்ட்ஸ் மற்றும் வானத்தை போல அந்த வகை..
சரி விசயத்திற்கு வருவோம்.. இந்த வருட பொங்கல் படம் ஒரு பார்வை
மொத்தம் நான்கு அல்லது ஐந்து படங்கள் வருசையில் உள்ளது..
1 . காவலன்
விஜய் படத்தை ஒரு காலத்தில் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இருந்து உள்ளது. ஆனால் இப்போது எத்தனை பிரச்சனைகள்.. அண்ணாச்சிக்கு கட்டம் சரியில்லை.. ரீமேக் படங்களில் அவர் நடித்து உள்ள அனைத்து படங்களும் கையை கடிக்காமல் வசூல் செய்யும் படங்கள். இந்த படம் கண்டிப்பாக போட்ட பணத்தை எடுத்து விடும் என்ற மிக பெரிய நம்பிக்கை என் இடத்தில் உள்ளது. விஜய் படத்தில் எப்பொழுதும் உள்ள பாடல்கள் மெட்டு இதில் இல்லை.. ஆனால், இவரை ஒழித்து கட்ட வேண்டும் என பேரன்கள் முடிவு செய்து விட்டார்கள் என என்ன தோன்றுகிறது.
காவலன் - அவர்க்கு யார் காவலனோ !
2 . இளைஞன்
நம் தமிழகத்தின் தாத்தா உயர் திரு கருணாநிதி கதை மற்றும் வசனம் எழுதி இருக்கும் படம். படத்தை நன்றாக ப்ரொமோட் செய்து உள்ளார் கள்ள லாட்டரி புகழ் மார்டின். இது கருணாநிதி அவர்களின் எழுபத்தி ஐந்தாவது ( திரைப்பட துறையில் ) இருக்கும் ஆண்டு. அனைத்து அமைச்சர் பெருமக்கள் தன் இடம் உள்ள திரை அரங்கு மற்றும் தான் பினாமிகளின் அரங்குகளில் இப்படம் வெளியிட பட உள்ளது. எதாவது ஒரு தியேட்டரில் கண்டிப்பாக நூறு நாட்கள் ஓடும்.. பா விஜய் நடித்து உள்ளார். எந்த பண் பலை வானொலி கேட்டாலும் கலைஞரின் இளைஞன் என பேச்சாக உள்ளது..
இளைஞன் - கருணாநிதி அல்ல..
3 . சிறுத்தை :
இது ஒரு தெலுகு படத்தின் ரீமேக். விக்ரம்ர்குடு என்று சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வந்த திரைபடம். செம மாஸ் படம். ஜின்த்தாக்கு...ஜின்த்தாக்கு... பாடல் நான் இதில் ரசித்தது ( தெலுங்கு ). பாடல் மற்றும் படத்தின் ப்ரோமோ பார்க்கையில் அக்மார்க் காப்பி என குறி விட முடியும். கார்த்திக் முதல் முதலில் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம். கண்டிப்பாக முதல் பாதி இவரின் குறும்பு கலந்த வசனம் மற்றும் சந்தானத்தின் உதவி உடன் சிரிப்பு மழை பொழிய போகிறது. ஆனால், இரண்டாம் பாதி கண்டிப்பா தெலுங்கு படத்தை போல் சொதப்ப போவது உறுதி . ஹிட் கொடுக்கும்னு சொல்ல முடியாட்டியும் கையை கடிக்காமல் போட்ட பணத்தை எடுக்க உதவும்.
சிறுத்தை - கண்டிப்பாக கார்த்திக் ரசிகர்களை காயபடுத்த போது..
4 . ஆடுகளம் :
வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம்.பொல்லாதவன் படத்திற்கு பிறகு அவர் இயக்கும் படம். மதுரையின் பக்கம் நடக்கும் சேவல் சண்டை தான் படத்தின் மைய கரு.. ஒரு மாலை பொழுதில் விஜய் டிவீயில் நீயா? நானா ? பார்த்து கொண்டு இருக்கும் போது தான் அவரை பார்த்தேன்.. எதார்த்தமான சினிமா தான் ஜெயிக்கும்.. மசாலா சினிமா சில காலம் மட்டுமே நினைவில் நிற்கும் என சொன்னார் .மெய்யாலுமே நம் அனைவரும் ஒத்து கொள்ள வேண்டும். பாடல்கள் எல்லாம் சூப்பர்.. த்ரிஷா ஒத்து கொண்டு பின்னர் பிரச்சனை வந்ததால் புது முகம் அறிமுக மாகும் படம். எனக்கு தெரிஞ்சா வர நாயகி தான் மொக்க தனமா படத்துல இருபாங்க..
செம வரி பாட்டுல.. அப்புறம் மதுரை தொனியில் வருகிற கொன்னேபுடுவேன்.. செம செம ..
அநேகமா இது ஹிட் ஆகும் என எதிர்பார்கிறேன் ..
ஆடுகளம் - விளையாடி வெற்றி காணும் என நினைக்குறேன்
இதை தவிர வேறு படங்கள் எதுவும் வருதானு சரியாய் தெரிய வில்லை....
அருமை........
ReplyDeleteபொறுத்திருந்து பார்க்கலாம்!!! சிறுத்தை trailor நானும் பார்த்தேன்.. இரண்டாம் பாதி அக்மார்க் தெலுகு வாடை அடிகிறது.. கொஞ்சம் தமிழ் nativity க்கு மாத்தி இருக்கலாம்..
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
karthi ku fans ah .. roftl :)
ReplyDeletevijay ku kavalan his fans ...
ReplyDeleteKavalan still super...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletekavalan will rock
ReplyDelete