Search This Blog

Friday, January 14, 2011

2011 - எதிர்பார்க்கபடும் படங்கள் :

2011 - எதிர்பார்க்க படும் படங்கள் :


நான் மகான்  அல்ல சுசீந்திரன் இயக்கம் படம் . இதை பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன்.  ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கும் படம் .

மாப்பிளை :


தனுஷ் நடித்து சுராஜ் இயக்கம் படம். காமெடி படமா இருக்கும் என நினைக்குறேன். ஏற்கனவே தனுஷ் வைத்து இரண்டு ஹிட் கொடுத்தவர்.  மருதமலை படத்தை இயக்கியவர் தான் இந்த சுராஜ். கண்டிப்பாக போட்ட பணத்தை எடுக்கும் .

போராளி :

நாடோடிகள் தந்த சமுத்ரகன்னி இயக்கம் படம். இருவரும் சேர்ந்தாலே ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். ஈசன் ஏமாற்றியது அனைவரும் அறிவோம். ஆனால், இந்த படம் பரவில்லை என பேச்சு வரும்.

 எங்கேயும் காதல் :

ரவி , பிரபு தேவா இணையும் படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். நீரவ் ஒளிபதிவு மற்றும் பாடல்களுக்காக இந்த  படம் பாக்கலாம்.

வேங்கை : 


ஹரி மற்றும் தனுஷ் இணையும் படம். இதற்க்கு முன்னால் இருவரும் இணைந்து பிளாப் குடுத்தார்கள். ஒரே சாயலில் தான் கதை இருக்கும் என நம்ப படுகிறது. ஓடாது என தான் தோணுது .

கோ :


அயன் படத்தின் வெற்றிக்கு அப்புறம் கே வி   இயக்கம் படம். கண்டிப்பாக ஜீவாக்கு ஒரு ஹிட் ரெடி. பாடல்கள் இன்னும் இரண்டு நாளில் வரும் என எதிர்பார்க்க படுகிறது.   ராதா  பொண்ணு இதில் அறிமுகம். சிம்பு நடிக்க வேண்டிய படம் கூட...

அரவான் : 


எங்கள் ஊர் இயக்குனர் படம். ஆம், வசந்த பாலன் தான். அங்காடி தெரு மற்றும் வெயில் போல ஒரு அழுத்தமான ( ஏழாம் நூற்றாண்டு இல் நடக்கும் )கதையை எதிர்பார்க்கலாம். ஹிட் ஆகுமான தெரில. ஆனா  விருது நிச்சயம்.

யுத்தம் செய் : 


மிஷ்கின் தான் இயக்குனர். துப்பறியும் கதை. எதோ வெளிடனின் படத்தின் தழுவல் என கேள்வி பட்டேன். கமர்சியல்  ஹிட் அடிக்கும். மிஷ்கின் திரை கதைக்கு... 

வேட்டை : 

சென்ற வருடத்தில் மூன்று ஹிட் கொடுத்த ஆர்யா நடிக்கும் படம் . லிங்குசாமி தான் படத்தின் இயக்குனர் . முதலில் சிம்பு நடிக்க   இருந்து பின்னர் விலகிய படம் . இப்போ சிம்பு வேட்டை மன்னன் என படம் நடிக்கிறார் . இரண்டும்  ஒரே கதையாக இருக்க வாய்ப்பு உள்ளது . எது முதலில் வரும் என தெரிய வில்லை .

வானம் : 


 தெலுங்கில் வேடம் படத்தின் ரிமேக் தான் இந்த வானம். சிம்பு, பரத் நடிகர்கள். ஒரே பாடல் தான் வெளியிட பட்டு உள்ளது.அந்த பாடலும்  செம ஹிட். எவண்டி உன்னை .. நல்லா இசை யுவன்.. இந்த வருடத்தில் முதல் பாது பாடலில் கண்டிப்பாக இடம் பிடிக்க போகும் பாடல்.


இரண்டாம் உலகம் :



நீண்ட இடை வெளிக்கு அப்புறம் செல்வராகவன் மற்றும் தனுஷ் இணையும் படம். கண்டிப்பாக எதாவது ஒரு தொலை காட்சி வாங்கி இந்த படத்தை ஓட வைத்து விடுவார்கள். மிக எதிர்பார்ப்பில் உள்ள படம்.

ஆதி பகவான்: 


அமீர் மற்றும் ஜெயம் ரவி இணையும் படம். கண்டிப்பாக ஹிட் கொடுக்கும். ரவி தான் உருவத்தை மாற்றி நடிக்கிற என்று தெரிய வில்லை. கிராமத்து கதை களம்  இல்லை நகரத்து கதை களம் என  யோசிக்க முடிய வில்லை .

நடுநிசி  நாய்கள் : 


கௌதம் வாசுதேவ் படம். ஒரு சைகோ த்ரில் படம். மாடர்ன் சிகப்பு ரோஜாகளோ?

அவன் இவன் : 

பாலா இயக்கம் படம். விஷால் இதில் அரவாணி போல் நடித்து உள்ளார். சூர்யா மன்மதன் அம்பு போல் நடிகர் வேடத்தில் வருகிறார், மற்றும் ஆர்யா உள்ளார் . 


வேலாயுதம் : 

ரி-மேக் புகழ் ஜெயம் ராஜா மற்றும் விஜய் இணையும் படம் . ஆஸ்கார் ரவி தான் படத்தின் தயாரிப்பாளர். கண்டிப்பாக மிக பெரிய விளம்பரம் செய்து இதை ஓட வைத்து விடுவார்


ஏழாம் அறிவு : 

 சூர்யா, முருகதாஸ், ஹாரிஸ் மற்றும் உதயநிதி இணையும் படம். இந்த வருடம்  தீபாவளி அன்று வரும் என எதிர்பார்கிறேன். மிக பெரிய ஹிட் அடிக்கும்.  கமல் பொண்ணு வேற ஜோடி சூர்யாவிற்கு..

மங்காத்தா : 

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, ஒரு முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடிப்பதாக இருந்த கேரக்டரில் இப்போது அர்ஜுன் நடிக்கிறார்.மேலும் இவர்களுடன், பிரேம்ஜி அமரன், லக்ஷ்மி ராய், வைபவ் உட்பட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.  மங்காத்தா அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது. கதை கிரிக்கெட் சூதாட்டம் பற்றியது என கேள்வி பட்டேன். 

இதுபோக சில மிக குறைந்த செலவில் தயாரித்து  வெளி வரும் படங்களும்  வெற்றி வாகை சூடும்  என நம்புகிறேன்.

நன்றி - behindwoods, indiaglitz

1 comment:

  1. Aravan is the drama written by writer S.Ramakrishan. its released as a book also. S.Ramakrishnan is from Mallanginar which is very near to virudhunagar. He is one of my favorite writers.

    ReplyDelete