Search This Blog

Saturday, January 29, 2011

தமிழக பட்ஜெட் பார்வை 1

வ்வோர் ஆண்டும் மார்ச் முடிய சில நாட்கள் இருக்கும்போது, மத்திய-மாநில அரசுகள் பட்ஜெட் போடும்.  இந்த ஆண்டும் இந்த வைபவம், வரும் பிப்ரவரி 4-ம் தேதி தமிழக சட்டசபையில் அரங்கேற இருக்கிறது. இன்றைய தி.மு.க. ஆட்சி​யின் கடைசி (இடைக்கால) பட்ஜெட் இது. 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து போடப்படும் 6-வது பட்ஜெட். டந்த கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்​தால்... பாதிக்கும் மேற்பட்டவை பஞ்சர் ஆகிக்கிடந்தன!

2006 ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்​பட்ட 2006-2007-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளின் இன்றைய நிலைமை மட்டும் இங்கே...

நிறைவேறாத திட்டங்கள் 

பழநி மற்றும் கொடைக்கானல் நகரங்​களிடையே பழநி திருக்கோயில் நிர்வாகத்தால் கேபிள் கார் திட்டம் செயல்படுத்தப்படும்.

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஒரு பெரிய துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்து​வோம்.

சென்னை மாநகரில் குடியிருப்புகள் பெருகி வருவதைக் கருத்தில்கொண்டு சென்னைக்கு அருகே துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

விமானப் போக்குவரத்தின் தேவை கருதி விமானவியல் துறையில் உயர் கல்வி அளிக்கவும், ராஜீவ் காந்தி நினைவாக ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விமான​வியல் உயர் கல்வி மற்றும் விமான ஓட்டிகள் பயிற்சி அகாடமி.

300 ஏக்கரில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்​ளிட்டவளர்ச்சிக் கட்டமைப்பு மையம் ஒன்று சென்னை அருகில் ஒரகடத்தில் அமைவதற்கு முயற்சிகள் மேற்கொள்​வோம்.

கோவை மாவட்டம் பல்லடத்தில் வெங்காயத்​துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்துக்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சைப் பழங்​களுக்கும் ஏற்றுமதிக்​கேற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன் கூடிய விற்பனைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ-மாணவியர் விரைவாக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக, ஊரகப் பகுதிகளில் பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், உடல் இயக்க மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த சேகரிப்பு மையங்கள், குளிர்​விக்கும் சாதனங்கள், தரம் பிரிப்பு, பதப்படுத்துதல், மற்றும் மின்னணு ஏலமுறை என அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று வணிக முனையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும்.

வெள்ளத்தால் சென்னை பாதிப்ப​தைத் தடுக்க, கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அரும்பாக்கம் வடிகால், பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி ஆகியவற்றின் வழியாக வெள்ள நீர் சீராகக் கடலில் கலக்கும்படியான வெள்ளத் தடுப்புப் பணிகள் 279.01 கோடியில் நடைபெறும்.

நிறைவேறிய திட்டங்கள் 

காவலர் குறைதீர்க்க மூன்றாவது போலீஸ் கமிஷன்.

அனைத்துப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும்.

கோவை வால்பாறையிலும், சேலம் மேட்டூரிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள கல்வியியல் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வு மையம் நிறுவப்படும்.

விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி.

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக, காவிரி நீரைக் கொண்டுவந்து வழங்கும் 671 கோடி ரூபாய் திட்டம் தொடங்கப்படும்.

கர்ப்பிணிப் பெண்களின் மகப்பேறு காலத்துக்கு முன்னர் 3 மாதங்களுக்கும், மகப்பேறுக்குப் பின்னர் 3 மாதங்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 1,000 வீதம் 6 மாதங்களுக்கு 6,000 வழங்கப்படும்.

அறிவியல் தமிழ் மன்றம் அமைக்கப்படும்.

பரிதிமாற்கலைஞர் பிறந்த வீடு, நினைவு இல்லம்.

தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்குக் கேளிக்கை வரியில் இருந்து முழுமையான விலக்கு.

பெரியார் திரைப்படத்துக்கு 95 லட்சம்.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்த ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான பணிகள் மட்டும் இப்போது நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 23.50 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று 2006-ல் வெளியான அறிவிப்புக்கு 2008-ல் அடிக்கல் நாட்டியும் திட்டம் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.

 விகடன் 




No comments:

Post a Comment