Search This Blog

Thursday, November 03, 2011

ஜெயலலிதா சர்க்கிள்! - இன்றைய ஆட்சிச் சக்கரத்தின் மிக முக்கியமான கண்ணிகள் இவர்கள் :(


ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறுவது எத்தனை கடினம் என்பதை, அவரால் துரத்தப்பட்டவர்களிடம் கேட்டால் நிறையச் சொல்வார்கள்!'இன்று இருப்பார் நாளை இல்லை’ என்ற வாழ்க்கையின் இலக்கணம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... போயஸ் கார்டனுக்கு அதிகமாகவே பொருந்தும்.இப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் இடம்பிடிப்பது எத்தனை கஷ்டம்? இடம் பிடித்த மனிதர்களின் மினி லைவ் ரிலே இது. இன்றைய ஆட்சிச் சக்கரத்தின் மிக முக்கியமான கண்ணிகள் இவர்கள் என்று சொல்வதேகூட இவர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம். இருந்தாலும் இவர்கள்தான் அதிஅதிமுக்கியமானவர்கள்!

ஒடிஷாவும் திருச்சியும்!

டிஷாக்காரர்களுக்கும் தமிழக முதலமைச்சர்களுக்கும் பிரிக்க முடியாத பந்தம் ஏதோ ஒன்று இருக்கிறது. கருணாநிதிக்கு தலைமைச் செயலாளராக ஒரு திரிபாதி என்றால், ஜெயலலிதாவுக்கு தேவேந்திர நாத் சாரங்கி! ஷீலா பாலகிருஷ்ணன் அல்லது பாலகிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவரைத் தான் தலைமைச் செயலாளராக ஜெயலலிதா கொண்டுவருவார் என்றார் கள். முந்தைய ஆட்சியின்போது ஜெ-வின் தனிச் செயலாளராக இருந்தவர் ஷீலா. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணா நிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்துடன் இவர் இணக்கம் காட்டியதாகச் சொல்லப்பட்டதால், சாரங்கிக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இவரை இந்த இடத்துக்குப் பரிந்துரைத்தவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான முன்னாள் தலைமைச் செயலாளர் நாராயணன். சாரங்கிதான் ஒடிஷாக்காரர். அவரது மனைவி தமிழகத் தைச் சேர்ந்தவர். நாராயணன் மனைவியும் அவரது மனைவியும் உறவினர்கள். இது போதாதா போயஸ் கார்டனுக்குள் போவதற்கு? தி.மு.க. ஆட்சியில் திரிபாதி மூலமாக முக்கியத்துவம் வாய்ந்த போக்கு வரத்துச் செயலாளர் பதவியில் இருந்தார் சாரங்கி. இப்போது அதைவிட முக்கியத் துவம் வாய்ந்த பதவிக்கு வந்துவிட்டார்.


ஒடிஷா மாநிலம், கட்டாக் பகுதியைச் சேர்ந்த இவர், 86-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கி, இது வரை அனைத்து முக்கியத் துறைகளிலும் கால் ஊன்றி வலம் வந்தவர். முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தான் நினைத்ததைச் செய்து முடிக்கும் திறமைக்காரர். அனுபவங்களின் மூலமா கவும்... பழகும் தன்மையாலும் அனைவரை யும் ஈர்க்கக்கூடியவர். முடிவெடுப்பது ஜெயலலிதாவாக இருந்தாலும், இவரது கருத்தைக் கேட்ட பிறகு முடிவெடுக்கலாம் என்று நினைக்கத் தக்க மனிதராக இருக் கிறார் சாரங்கி. இதற்கு முன்பு ஜெயலலிதா, தலைமைச் செயலாளராக வைத்திருந்தவர் களைவிட தைரியமாகக் கருத்து சொல்லக் கூடியவராக சாரங்கி இருப்பது ஆறுதல்!ஆட்சிப் பணிக்கு சாரங்கி என்றால், காவல் பணிக்கு இருக்கிறார் ஜி.ராமானுஜம்!திருச்சி மாவட்டத்தில் வேலை பார்த்த போலீஸ்காரரின் மகன். தன்னுடைய அரசுப் பணி அனுபவத்தின் பெரும் பாலான காலத்தை, ஒதுங்கிய இடத்தில் உட்கார்ந்து ரகசியமாக வேவு பார்க்கும் காரியங்களைப் பார்த்தவர் ராமானுஜம். அவரை உளவுத் துறைக்கு மட்டும் போடாமல், சட்டம் - ஒழுங்கு பிரிவுக் குக்கும் சேர்த்து டி.ஜி.பி-யாக ஜெயலலிதா நியமித்தது அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம். சட்டம் - ஒழுங்கு பிரிவில் இருப்பவர் கலகலப்பாக இருக்க வேண்டும். உளவுத் துறையைக் கவனிப்பவர் அமுக்கமாக இருக்க வேண்டும். ஆனால், இரண்டு குணாம்சங்கள்கொண்ட இரு வேறு பதவிகளை ஒரே மனிதருக்குக் கொடுத்தார் ஜெ. இதுவரை அதற்குக் குந்தகம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார் ராமானுஜம். ஆரம்பத்தில், ''இவரால் எத்தனை நாளைக்கு இந்தப் பதவியில் தாக்குப்பிடிக்க முடியும்?'' என்றுதான் பலரும் சந்தேகம் கிளப்பினார்கள். அந்த அளவுக்கு யார் சொல்லுக்கும் தலை ஆட்டாமல், தனக்கு நியாயம் எனப் பட்டதைச் சொல்லக்கூடியவராக இருப்பார் ராமானுஜம். ஆட்சிகள் மாறினாலும் உளவுத் துறையில் இவரது பொறுப்பு மாறாது என்கிற அளவுக்கு இவரது பணியிடம் அமைந்தது. ''பொலிடிக்கல் இன்டெலிஜென்ஸ் பண்ண மாட்டார்'' என்பார்கள். தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க-வினர் பலரும் கைதானார்கள். அதில் எந்தவிதமான விமர்சனமும் வராமல் இருக்கக் காரணம், ''புகார் இல்லாத கைதுகள் எதுவும் வேண்டாம்'' என்று இவர் போட்டஉத்தரவு தான். போலீஸை வைத்து நினைத்ததை நடத்தி முடிக்கலாம் என்பதற்குக் கருவியாக எப்போதும் ஆக மாட்டார் இவர்!

போயஸ் கார்டனின் பஞ்சபூதங்கள்!


1.எம்.ஷீலா ப்ரியா, 2.பி.ராம்மோகன் ராவ், 3.கே.என்.வெங்கடரமணன்... இந்த மூவர்தான் ஜெயலலிதாவின் தனிச் செயலா ளர்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் கூடுதல் செயலாளராக ஏ.ராமலிங்கமும் உதவிச் செயலாளராக ரீட்டா ஹரீஸ் தக்கரும் இருக்கிறார்கள். முதல்வரைச் சுற்றி நிற்கும் பஞ்ச பூதங்கள் இவர்களே.  முதல் அமைச்சர் அலுவலகம், போயஸ் கார்டன் இரண்டுக்குள்ளும் எப்போதும் புகுந்து புறப்படுபவர்கள் இந்த ஐவர் அணிதான்.தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பிரெஞ்சு, ஜெர்மன் எனப் பல்வேறு மொழிகள் அறிந்த ஷீலா ப்ரியா, கடலூரைச் சேர்ந்தவர். ராமநாதபுரத்தில் உதவி கலெக்டராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், தஞ்சாவூரில் இயங்கிவரும் தென்னகக் கலைப் பண்பாட்டு மையத்தில் ஐந்து ஆண்டுகள் இருந்தார். 1993-ம் ஆண்டு இவர் கவர்னர் மாளிகைக்குச் சென்ற பிறகுதான் அனைவரது கவனத்தையும் கவர்ந் தார். எவ்வளவு செல்வாக்கான அதிகாரியாக இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பதவியிலும் நீடிக்க முடியாது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேல்  நான்கு கவர்னர்களுக்குச் செயலாளராக இருந்தார் என்றால், இவரது செல்வாக்கு அப்படி. கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்று சொல்லத்தக்க சம்பவம் எதுவும் இல்லை. ஆனால், ஆந்திர மாநில அரசியல் தொடர்புகள் மூலமாக ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு, நம்பர் ஒன் செக்ரெட்டரி ஆனவர் ஷீலா ப்ரியா. இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ராம்மோகன் ராவ், ஆந்திராக்காரர். கடந்த ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்தான். ஆனால், சசிகலா குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான எம்.ராமச்சந்திர னின் நட்பு வட்டாரத்தைப் பயன்படுத்தி, நம்பர் டூ இடத்தைப் பிடித்துவிட்டார். மூன்றாவது செயலாளராக இருக்கும் கே.என்.வெங்கடரமணன், முந்தைய முறையும் ஜெயலலிதாவின் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். திருநெல்வேலிக்காரர். முதல்வர் அடிக்கடி அழைத்துப் பேசுவது இவரைத்தான்.


கூடுதல் செயலாளராக இருக்கும் ராமலிங்கம்தான், முதல்வரிடம் அனைத்து ஃபைல்களையும் கொண்டுசென்று கையெழுத்து வாங்குகிறார். முதல்வரின் அப்பாயின்மென்ட்டுகளையும் கவனிக்கிறார். மூத்த செயலாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஃபைல்களையும் ஒருங்கிணைத்துத் தருபவராக ரீட்டா ஹரீஸ் தக்கர் இருக்கிறார். முதல்வரின் நேரடியான அனைத்து உத்தரவுகளும் இந்த அதிகாரிகளின் மூலமாகத்தான் சம்பந்தப்பட்ட துறைகளுக்குச் செல்கின்றன! 

பொறுமை ஜார்ஜும் உறுமும் பொன்மாணிக்கமும்!


ருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தபோது கமிஷனராக முத்துக்கருப்பன் இருந்தாலும், அதற்கான சர்ச்சையில் சிக்கியவர்களில் ஜார்ஜும் ஒருவர். அவர் அப்போது மத்திய சென்னை இணை கமிஷனராக இருந்தார். யார் யாரை எல்லாம் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கருணாநிதி அனுப்பிய கடிதத்தில் இவர் பெயரும் உண்டு. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கண்காணாத இடத்துக்கு மாற்றப்பட்டார். ஜெ. ஆட்சி வந்ததும் அனைவர் கண்ணிலும் படும் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக ஜார்ஜ் உட்காரவைக்கப்பட்டார். ராமானுஜத்துக்கு உளவுத் துறையும் இருப்பதால், இவரே சட்டம் - ஒழுங்கை மொத்தமாகச் சமாளித்தாக வேண்டும். அமெரிக்கா வில் படித்து... 'ரா’ அமைப்பில் இருந்து... என்று பேக் கிரவுண்ட் பெரிதாக இருந்தாலும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சறுக்கல் இவரால் ஏற்பட்டதுதான். ஆனால், அதைத் தன்னுடைய தவறாக முதல்வர் தாங்கிக்கொண்டது தான் ஆச்சர்யம். தமிழகத்தின் நான்கு மண்டலங்களின் சட்டம் - ஒழுங்கைக் கண்காணிக்கும் முக்கிய மான லகான் இவரிடம் இருக்கிறது.  உளவுத் துறையில் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ராஜேந்திரனுக்கு கல்தா கொடுக்கப்பட்டு, டி.ஐ.ஜி-யான பொன் மாணிக்கவேல் தலையில் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டு உள்ளது. ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு எந்த மாதிரியான அபிப்பிராயங்கள் உள்ளன என்பதைத் தனக்குத் தெரிவிக்க ராஜேந்திரன் தவறிவிட்டார் என்று இவரது கல்தாவுக்குக் காரணம் சொல்லப்பட்டது. பதிலாக வந்திருக்கும் பொன்மாணிக்கவேல், ரோட்டில் லத்தியைச் சுற்றி கப்சிப் ஆக்கும் வகையறாவே தவிர, கமுக்கமாக இருந்து நியூஸ் கறக்கத் தெரிந்தவர் அல்ல. ஆனாலும், தனக்கு நம்பிக்கையானவராக இருக்க வேண்டும் என்று இவரை முதல்வர் தேர்ந்தெடுத்து இருக்கலாம். உளவுத் துறையில் இப்போது ஐ.ஜி-யும் இல்லை, ஏ.டி.ஜி.பி-யும் இல்லை.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஜாபர் சேட் தினமும் அவரைச் சந்தித்து காதைக் கடிப்பார். அப்படி இருந்தால்தான் செய்திப் பரிமாற்றமும் ஒழுங்காக இருக்கும். ஆனால், ஜெயலலிதாவுக்கு இவர்கள் தினமும் நோட்ஸ்தான் அனுப்புகிறார்கள். 10 நாட்களுக்கு ஒரு முறைதான் டி.ஜி.பி-யும் நேரில் சந்திக்கிறார். எனவே, முதல்வருக்கு அனைத்தும் முழுமையாகத் தெரிய தினப்படி ப்ரீஃபிங் அவசியம் என்ற கருத்து போலீஸ் வட்டாரத்தில் இருக்கிறது! 

ஹோம் மிஸ்ரா!


லைமைச் செயலாளர் ஒடிஷாக்காரராக இருக்கும்போது, உள்துறைச் செயலா ளரும் அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால்தானே சரியாக(!) இருக்கும்.

ஆம், உள்துறைச் செயலா ளராக இருக்கும் ரமேஷ்ராம் மிஸ்ரா, அதே மாநிலத்துக்காரர். சாரங்கியின் பரிந்துரையாகத்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இவருக்கும் ஊர்ப் பாசம் அதிகமாக உண்டு. அதனால்தான் நெல்லை, சங்ககிரி ஆகிய ஊர்களில் உதவி கலெக்டராக இருந்துவிட்டு, ஐந்து ஆண்டுகள் புவனேஸ்வர் சில்க் போர்டு பணிக்குப் போய் ஒடிஷாவில் செட்டில் ஆனார்.அதன் பிறகு மீண்டும் தமிழகத் துக்கு வந்தவர், டான்சி நிறுவனத்தின் எம்.டி. ஆக இருந்தபோது, ஜெயலலிதாவின் அனுமா னத்தைப் பெற்றார். இன்று காவல் துறையில் நடக்கும் அனைத்து முக்கிய முடிவுகளும் இவரது ஆலோசனைப்படியே எடுக்கப்படுகின்றன!

முப்படை வீரர்கள்!


ந்த உதாரணத்தைச் சொல்வது தவறுதான். ஆனாலும், வேறு வழி இல்லை. எப்போதும் அ.தி.மு.க. ஆட்சியில் முப்படை வீரர்களாக இருந்து மூன்று பேர் கோலோச்சுவார்கள். கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசு, செங்கோட்டையன் முதல் முறையும் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரும் முந்தைய முறையும் கோலோச்சி னார்கள். பின்னர், அவர்கள் சில நேரங்களில் டம்மி ஆக்கப்பட்டதற்கும் அதுவே காரணம் ஆனது. 

இப்போது இந்த வரிசையில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும். உடன் இணைந்திருக்கிறார் நத்தம் விஸ்வநாதன்!கட்சிரீதியாக சீனியர்கள் என்பதும் இவர்களின் முக்கியத் தகுதி. நிறைய அமைச்சர்கள் புது முகங்கள், நிறைய பேர் முதல் முறை எம்.எல்.ஏ. ஆனவர்களாக இருப்பதால், இவர் கள் மூலமாகத்தான் முதல்வர் தனது எண்ணங்களைச் சொல்கிறார். கட்சி நடவடிக்கைகளையும் வழிநடத்துகிறார்.மூவரும் அளவுக்கு மீறி அடக்கத்தைக் காண்பிக்கிறார்கள். அதனாலேயே நீடிக்கிறார்கள்! 

விகடன்  
 



1 comment:

  1. மம்மி எப்பவும் சசிகலா பேச்சை தான் கேட்பார்கள், இல்லை என்றால் உன்னி கிருஷ்ணன் பேச்சை கேட்பார்கள், இது உலகத்துக்கே தெரியும்.. போங்கப்பா, அடுத்த தடவையாவது உணர்ச்சி வசப் படாமல் ஓட்டு போடும் முன் அஞ்சு நிமிஷம் யோசிங்க

    ReplyDelete