கடப்பைக் கல்
கடப்பை பகுதியில் இயற்கையாகப் பலகை வடிவில் கல் கிடைத்ததால்
இதுக்குக் கடப்பைக் கல் என்று பெயர் வந்தது.
பென்சிலின்
பென்சிலின் என்பது மருந்து. இது ஜீனல் பென்சிலியம் என்ற காளான் வகையிலிருந்து தயாரிக்கப்படுவதால் பென்சிலின் என்று பெயர் வந்தது.
‘லவ் ஆல்’
டென்னிஸ் விளையாட்டில் 0 என்பதைக் குறிக்க ‘லவ்’ என்று சொல்வார்கள்.
பிரெஞ்சு மொழியில் ‘லஃப்’ என்றால் முட்டை என்று பொருள். முட்டை வடிவில்
உள்ள பூஜ்ஜியத்தைக் குறிக்க ‘லஃப்’ என்று அழைத்து வந்தனர். பின்னர் அதுவே
லவ் என்றாகிவிட்டது.
காக்கி
அடர்த்தியான பழுப்பு நிறத்தை காக்கி என்று குறிப்பிடுகிறோம். இந்தச் சொல்
உருது மொழியிலிருந்து வந்தது. அந்த மொழியில் காக்கி என்றால் ‘புழுதியடைந்த’
என்று
பொருள். காக்கி வண்ணத்திலிருந்த பொருளைக் கண்ட உருதுக்காரர்கள் ‘காக்கி’
என்று அழைக்க, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் அது பரவிவிட்டது.
ரோபோட்
செக் நாட்டு எழுத்தாளர் கரேல்சி சேபல் 1923-ல் ‘ரோசம்ஸ் யுனிவர்சல்
ரோபோட்ஸ்’ என்ற நாடகத்தை எழுதினார். அதில் வரும் விஞ்ஞானி ஒருவர் மனிதனைப்
போல் வேலைகளைச் செய்யும் இயந்திர மனிதனை உருவாக்கினார். செக் மொழியில்
‘ரோபோடா’ என்றால் வேலை செய்பவன் என்று பொருள். இதிலிருந்துதான் ‘ரோபோட்’
என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
பொது அறிவு
என்சைக்ளோபீடியா என்பது கிரேக்க மொழிச் சொல். என்சைக்ளோபீடியா என்றால்
கிரேக்க மொழியில் பொது அறிவு என்று பொருள். 16-ம் நூற்றாண்டு முதல்
ஆங்கிலேயர்கள்
இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 1751-ம் ஆண்டு உலகப்புகழ்
பெற்ற பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா வெளியானது.
No comments:
Post a Comment