Search This Blog

Tuesday, November 08, 2011

புவி வெப்பமாதல் உண்மையா?


இன்று சமூக ஆர்வலர்கள் ஆரம்பித்து எல்லோர் வாயும் முணுமுணுக்கும் வார்த்தை சுற்றுப்புறச் சீர்கேடு. அதிலும் குறிப்பாக ‘குளோபல் வார்மிங்’ என்ற வார்த்தைகளைச் சொல்லாதவர்களே இருக்க முடியாது. குளோபல் வார்மிங் என்றால், பூமியைக் கட்டுக்கடங்காத வெப்பம் சூழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். சுருக்கமாக புவி வெப்பமாதல். குளோபல் வார்மிங் பிரச்னையால் பசுமைக் குடில் வாயு அதிகளவில் வெளியேறுவதால் ஓசோன் படலம் ஓட்டை விழுந்து புற ஊதாக்கதிர்களும் அகச்சிவப்பு கதிர்களும் நேரடியாக பூமியைத் தாக்கும். இதனால், மனிதர்களுக்கு தோல் புற்றுநோய்கள் ஆரம்பித்து, வித்தியாசமான உயிர்க்கொல்லி நோய்கள் எல்லாம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள். 

புவி வெப்பமாதல் எப்படி ஏற்படுகிறது? வீடு, அலுவலகங்கள், கார், பஸ்களில் பயன்படுத்துகிற ஏ.சி., ஃபிரிட்ஜ் சாதனங்களில் இருந்து வெளிவரும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வாயுதான் இந்தப் புவி வெப்பமாதலுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். பூமியைப் பாதுகாக்கும் படலத்துடன், இந்த வாயு வினைபுரிந்து அதை ஓட்டை விழச் செய்கிறது. அதனால், கட்டுக்கடங்காத வெப்பம் பூமியைத் தாக்குகிறது. இந்த வெப்பத்தின் அளவு எதிர் காலத்தில் இன்னும் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால், துருவத்தில் உள்ள பனி மலைகள் உருகும். கடல் நீர்மட்டம் உயரும். இதனால், பல்வேறு கண்டங்கள் அழிந்து போகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவான சுனாமி கூட புவி வெப்ப மாதலால்தான் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.உலக நாடுகள், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு மின்சாரத்தை வழங்குவதற்காக, அணு உலைகளை அமைத்து வருகின்றன. இதிலிருந்து வெளியேறும் கார்பன் துகள்கள், பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள், எந்திரங்களில் இருந்து வெளியேறும் கார்பன் துகள்களால்தான் புவிவெப்பமாகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தப் புவி வெப்பமாதல் வாகனப் பெருக்கம், அணு உலைகள் பெருக்கம், குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினால்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதெல்லாம் பொய் என்று சொல்லும் அளவுக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இருக்கிறது.


1799-ம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் அமெரிக்க செனட்டில், புவி வெப்பமாதல் குறித்த பிரச்னையைக் கிளப்பினார். பூமியில் கட்டுக் கடங்காத கார்பன் வாயுக்களால் பூமிப் பந்து வெப்பத்தால் கட்டுண்டு கிடக்கிறது. இதனால், துருவங்களில் இருக்கும் பனிச் சிகரங்கள் உருகி அமெரிக்காவுக்கு ஆபத்து நேர்ந்து விடும். எனவே இந்தப் பிரச்னையை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தது, ஜான் ஆடம்ஸ். தாமஸ் ஜெபர்சன், 1779 முதல் 1781 -ம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் மூன்றாவது அதிபரும் அவர்தான்.  ஆனால், பூமி வெப்பமாதலுக்கு காரணம் என்று நாம் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறோமே... அணு உலைகள், குளிர்சாதனங்கள், பெட்ரோல், டீசலால் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள், அவை எல்லாம் 1799-ம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் அறிக்கை வெளியிடும்போது பயன்பாட்டிலேயே கிடையாது என்பது ஆச்சர்யமான விஷயம்.நாட்டின் வளர்ச்சிக்காக உலகில் முதன்முதலில் அணு உலைகள், உருவாக்கப்பட்டது 1954-ம் ஆண்டுதான். குளிர்சாதனப் பெட்டி குறித்த யோசனையை முதன்முதலில் 1758-ம் ஆண்டு பெஞ்சமின் பிராங்க்ளின் தான் வெளியிட்டார். அவர் அப்போது அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியராக இருந்தார். அவரும் குளிர்சாதனப் பெட்டிக்கான கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாரே தவிர முழுமையாக வடிவமைக்கும் பணியில் ஈடுபடவே இல்லை.


ஆனால் அதற்குப் பிறகு 1820-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஃபாரடே அம்மோனியாவை பயன்படுத்தி குளிர்விப்பானை உருவாக்கலாம் என்று யோசனையை சொன்னதுடன், அதன் வடிவமைப்புப் பணிகளிலும் முதன்முதலாக ஈடுபட்டார். இருப்பினும் குளிர்சாதனப் பெட்டி மற்றும் குளிர்சாதனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது 1880-ம் ஆண்டுக்குப் பிறகுதான். அதேபோல 1800-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வதேச அளவில் கார்கள், வாகனங்கள் நீராவியில் தான் ஓடியிருக்கின்றன. முதல் முறையாக எண்ணெயைப் பயன்படுத்தி நீராவியால் ஓடும் கார் 1815-ம் ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வந்தது. பெட்ரோலை பயன்படுத்தி ஓடும் வாகனம் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது 1838-ம் ஆண்டுதான். மேற்சொன்ன கண்டுபிடிப்புகளையும் அதன் காலங்களையும் வைத்துப் பார்க்கும்போது, பெட்ரோல், குளிர்சாதனப் பெட்டி, அணு உலைகள் எதுவுமே பயன்பாட்டிலேயே இல்லாத கால கட்டம். ஆனால், 1799-ம் ஆண்டு புவி வெப்பமாதல் குறித்து மிகவும் பயங்கரமான ஓர் அறிக்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சன் தாக்கல் செய்திருக்கிறார் என்றால், இப்போது புவி வெப்பமாதலுக்கு காரணமான விஷயங்களாக விஞ்ஞானிகள் சொல்லும் காரணிகள் பொய்யா? 


அல்லது 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் அல்லது அதற்கும் முந்தைய மக்கள் பூமிப்பந்தை தாக்கும் அளவுக்கு வெப்பத்தைக் கிளர்ச்சியடைய செய்யும் அளவுக்கு மாறுபட்ட கருவிகளைப் பயன்படுத்தி இருந்தார்களா? எது உண்மை... அல்லது 1700-ம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் விஞ்ஞானத்தில் நம்மைவிட விஞ்சியவர்களா? விந்தையான பல கேள்விகள்... நம்மை துளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு வைக்கப்பட்டிருக்கும் கேள்விகள் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

No comments:

Post a Comment