‘தேங்க்ஸ் கிவ்விங் டே!’ என்பது அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.
இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 4வது வார வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு
வருகிறது.அமெரிக்காவில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் கடுங் குளிர் நிலவும். ஒரு
சமயம் அமெரிக்காவுக்கு வந்த யாத்திரீகர்கள் இந்தக் கடுங்குளிரில் சிக்கி,
பலவித நோய்களுக்கு
ஆளாயினர். கடுங்குளிரிலிருந்து தங்களைக் காக்கும்படி ஆண்டவனிடத்தில்
வேண்டவே, ஆண்டவனும் அவர்களைக் கடுங்குளிரிலிருந்து காப்பாற்றினார் என்பது
வரலாறு. படிப்படியாகக்
குளிர் குறைந்து மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினர்.
கடுங்குளிரிலிருந்து தங்களைக் காத்த, ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக
அமெரிக்காவில் இப்பண்டிகை ஒவ்வொரு
ஆண்டும் குளிர் ஆரம்பிக்கும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் வான்கோழியைப் பயன்படுத்தி பல வகையான உணவு வகைகளைத் தயாரித்து
விருந்து உண்டு மகிழ்வர். இதுவே இப்பண்டிகையின் முக்கிய அம்சம். நம்ம ஊரில்
கடைகளில் ஆடித் தள்ளுபடியில் பல பொருள்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்குப்
போடுவது போல், அமெரிக்காவில் ‘தாங்க்ஸ் கிவ்விங் டே’,க்கு அடுத்த நாள்
வெள்ளிக்கிழமை
அன்று ஏழை முதல் பணக்காரர் வரை வாங்கிப் பயனடையக் கூடிய வகையில் எல்லா
மால்களிலும் தரமான, அழகான ஆடைகளும், வீட்டுப் பொருள்களும், அழகு
சாதனங்களும்
குறைந்த விலைக்கு விற்பனைக்குப் போடுவார்கள். அந்தச் சமயத்தில் வியாபாரிகள் லாபத்தைக் குறிக்க கறுப்பு நிறத்தையும்,
நஷ்டத்தைக் குறிக்க சிவப்பு நிறத்தையும் பயன்படுத்துவர். வெள்ளிக் கிழமையான
அத்தினத்தில்
விற்பனைக்குப் போடும் பொருள்களின் மூலம் அதிக லாபத்தை எதிர்பார்த்து அந்த
வெள்ளிக் கிழமையை Black Friday என்று அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment