ஆங்கிலத்தில்: ஷாலினி சக்சேனா Magicians of anti-venom
இந்த நவீன காலத்திலும் கூட மந்திரங்களின் வாயிலாக பாம்புக் கடியையும் தேள்
கடியையும் குணப்படுத்த முடியும். மொபைல் போன் வாயிலாக மாந்திரத்தை
உச்சரித்தால் கூட குணம் அளிக்க முடியும் என்பதை நம்புவது சற்று
கடினமானதுதான். ஆனால் அதுதான் உண்மை. மந்திரவாதிகள் சிலர் பாம்புக்
கடியையும் தேள் கடியையும் சில நொடிகளிலேயே குணப்படுத்திவிடுகிறார்கள்.
டாக்டர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்டவர்களைக் கூட
மந்திரவாதிகள் குணமாக்கியுள்ளனர் என்பதுதான் விசேஷமான அம்சமாகும்.
1960ஆம் ஆண்டு மத்திய பிரதசேத்தில் உள்ள சாகரில் நடைபெற்ற ஒரு
நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு மனிதர் தனது வீட்டை நோக்கி நடந்து வந்து
கொண்டிருந்த போது ராஜநாகம் ஒன்று எதிர்பட்டது. அது புல் நிறைந்த
பகுதியாகும். மழைக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பாம்பை
அடிப்பதற்கு தடி கொண்டு வாருங்கள் என்று அவர் அலறினார். அங்கு
கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இவரது அலறலைக் கேட்டு தடியை
எடுத்துக் கொண்டு வருவதற்குள் அந்த மனிதரை ராஜநாகம் கடித்துவிட்டது.
ராஜநாகத்தால் கடிபட்டவர் தலைமைப் பொறியாளரின் உதவியாளர் ஆவார். அவரை அரசு
மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாகக் கொண்டு சென்றனர். விஷ முறிவு மருந்தை
டாக்டர்கள் செலுத்தினார்கள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தலைமைப் பொறியாளரும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். அங்கு ஏராளமானோர்
கூடிவிட்டனர். ராஜநாகத்தால் கடிபட்டவரின் உடல் நீலம் பாரிக்கத்
தொடங்கியது. இந்நிலையில் அந்த கூடத்திலிருந்த ஒருவர் பாம்புக் கடியை
குணப்படுத்தக்கூடிய மந்திரவாதி ஒருவரை தனக்குத் தெரியும் என்று கூறினார்.
ஆனால் தலைமை பொறியாளருக்கோ அல்லது பாம்புக் கடிபட்டவரின்
குடும்பத்தினருக்கோ ஜார்புங்கா வாலா (பாம்புக் கடியை குணப்படுத்தும்
மந்திரவாதி) குறித்து நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும் இக்கட்டான
சூழலில் அதையும்தான் செய்து பார்ப்போமே என்ற முடிவுக்கு அவர்கள்
வந்தார்கள். மந்திரவாதி உடனடியாக மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார். பாம்புக் கடி
பட்டவரை மருத்துவமனைக்கு வெளியே கொண்டு வாருங்கள். தோட்டத்தில்
கிடத்துங்கள் என்று மந்திரவாதி கூறினார். அவர் சில மந்திரந்தங்களைத்
தொடர்ந்து உச்சரித்தார். அதன் பிறகு நடந்ததுதான் அதிசயம். பாம்புக் கடி
பட்டவரின் உடல் பாம்பைப் போல முறுக்கிக் கொண்டது. பாம்புக் கடிபட்டவரின்
தலையில் தண்ணீர் பாத்திரம் வைக்கப்பட்டது. ஆனால் அந்த பாத்திரம் அங்கு
நிற்கவில்லை. பாம்புக் கடிபட்டவரின் கை அதை தட்டிவிட்டது. 20
நிமிடங்களுக்குப் பிறகே தண்ணீர் பாத்திரம் அவரது தலையில் நின்றது.
பாம்புக் கடிபட்டவரின் உடலில் பாம்பு குடி புகுந்திருந்தது. இந்த மனிதரை நீ
ஏன் கடித்தாய் என்று பாம்பிடம் மந்திரவாதி கேட்டார். “நான் புல் தரையில்
சென்று கொண்டிருந்தேன். இந்த மனிதர் என்னைக் கொல்வதற்காக முயற்சி செய்தார்.
தடியைக் கொண்டு வாருங்கள் என்று மற்றவர்களிடம் கூறினார். இதனால்தான்
எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தால்தான் இவரைக் கடித்தேன்.”
என்று பாம்பு குரல் கொடுத்தது. “இவரின் உடலிலிருந்து உடனடியாக நீ
வெளியேறிவிடு” என்று அரூபமாக உள்ள பாம்பிடம் மந்திரவாதி கூறினார். ஆனால்
பாம்பு சுலபமாக வெளியேற சம்மதிக்கவில்லை. மந்திரவாதி நீண்டநேரம் கெஞ்சிக்
கூத்தாடினார். கடைசியில் ஒரு நிபந்தனையின் பேரில் அம்மனிதரின் உடலிலிருந்து
வெளியேற பாம்பு சம்மதித்தது. அவர் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி என்னை
வழிபடவேண்டும் என்பதுதான் பாம்பு விதித்த நிபந்தனையாகும். இந்த நிபந்தனை
ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த மனிதரின் உடல் மறுபடியும் பாம்பைப் போல்
முறுக்கிக் கொண்டது. படிப்படியாக நீல நிறம் மாறத் தொடங்கியது. கால் மணி
நேரத்திற்குள் இந்த மனிதர் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டார். இதை
நேரில் பார்த்துக் கொண்டிருந்த தலைமைப் பொறியாளர் அதிர்ச்சியில் உறைந்தே
போனார். இதைப் போல ஊரூக்கு ஊர் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஆனால்
பெரும்பாலானோர் இவைகளைக் கட்டுக் கதைகள் என்றே கருதி ஒதுக்கித்
தள்ளிவிடுகிறார்கள்.
எல்லா வித பிரச்சினைகளுக்கும் மருத்துவ அறிவியலில் தீர்வு இல்லை. மருத்துவ
அறிவியலுக்கு அப்பாற்பட்டும் பல தீர்வுகள் உள்ளன. எல்லாவற்றையும்
மருத்துவத்தால் தீர்க்கமுடியும் என்றால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்
என்று மருத்துவர்கள் கூறுவது ஏன்? என பண்டிட் ரமேஷ் போஜ்ராஜ் துவிவேதி
கேள்வி எழுப்புகிறார். துவிவேதி மந்திரங்கள் குறித்து பல புத்தகங்களை
எழுதியுள்ளார். சாகரில் நடைபெற்றதைப் போன்ற நிகழ்வுகள் வேறு பல இடங்களிலும் நடைபெற்றுள்ளன.
பலர் இவற்றைக் கண்டுள்ளனர். பாம்புக் கடியை குணமாக்கும் மந்திரவாதிகள்
நாலா பக்கங்களிலும் நாணயங்களை தூக்கி எறிவது வழக்கம். அப்போது நாணயத்தை
தலையில் ஏந்தியபடி அங்கு பாம்பு வந்துவிடும். மீண்டும் சில மந்திரங்களைக்
கூறிய பிறகு பாம்புக் கடிபட்டவர் குணமாகிவிடுவார். மருத்துவர்கள் பலர் இதை
நம்புவது கிடையாது. இது வெறும் கண்கட்டி வித்தை என்று கூறுகிறார்கள்.
பிரதிப் குமார் சிங் என்ற ஜார்புங்கா வாலா கட்டாக்கில் (ஓடிஸா) உள்ள
வனத்துறையில் அதிகாரியாக உள்ளார். எனது தந்தையும் வனத்துறையில் அதிகாரியாக
இருந்தவர்தான் என்று அவர் கூறுகிறார். தனது தந்தையிடம் இருந்து
பாம்புக்டியை குணப்படுத்தும் மந்திரத்தை கற்றுக் கொண்டதாக அவர்
தெரிவிக்கிறார். நான் விஞ்ஞானம் படித்தவன்தான். ஆனால் விஞ்ஞானத்திற்கும்
அப்பாற்பட்டது கடவுள் சக்தி. இந்த மந்திரம் கடவுள் சக்தியைச் சார்ந்ததுதான்
என்று பிரதாப் குமார் சிங் கூறுகிறார். 1983 ஆம் ஆண்டு பிரதாப் குமார் சிங்கிற்கு 18 வயது நடந்து கொண்டிருந்தது.
28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக பாம்புக் கடியால் பாதிக்கப்பட்ட
ஒருவரை தாம் குணப்படுத்தியதாக பிரதாப் குமார் சிங் நினைவு கூறுகிறார்.
இதுவரை எத்தனை பேரை குணப்படுத்தியிருப்பேன் என்பதற்கு கணக்கு எதுவும்
வைத்துக் கொள்ளவில்லை என்று அவர் சொல்கிறார். நேரில் மட்டும்தான் மந்திரம்
சொல்லி பாம்புக்கடி பாதிப்பை விலக்க முடியும் என்பது கிடையாது. மொபைல் போன்
வாயிலாகவும் மந்திரம் சொல்லி பாம்புக்கடி பாதிப்பை விலக்க முடியும் என்று
அவர் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார். பாம்புக் கடிபட்டவரின் பெயர், தனக்கு தெரிவிக்கப்படவேண்டும். அவருக்கு
எத்தனை பெயர்கள் இருக்கின்றனவோ அத்தனையும் தெரிவிக்கப்பட வேண்டும். பட்டப்
பெயர்கள் கேலிப் பெயர்கள் இருந்தால் அவைகளையும் தெரிவிக்க வேண்டும். அந்த
நபர் குணமாக வேண்டும் என்று கூறி நான் மந்திரம் சொல்லத் தொடங்கிய சில
நிமிடங்களிலேயே உடலில் மாறுதல் தெரியத் தொடங்கிவிடும் என்று பிரதாப்
குமார் சிங் கூறுகிறார். மருத்துவ மனைகளிலிருந்துதான் தனக்கு அதிக
அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று அவர் கூறுகிறார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படாத நபரை, பாம்புக் கடியை குணப்படுத்திய
பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து பார்த்து விஷம்
நீங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நான் கூறுவது வழக்கம்
என்று அவர் தெரிவிக்கிறார். நான் செய்வது ஏமாற்று வேலை அல்ல.
உண்மையானதுதான் என்பதை நிலைட்டவே இதைச் செய்கிறேன் என்று தனது
செயல்பாட்டுக்கான காரணத்தையும் அவர் கூறுகிறார். தினந்தோறும் தனக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது வரும் என்று அவர்
கூறுகிறார். மொபைல் போனில் 5 நிமிடங்கள் மந்திரம் சொன்னாலே போதும். மொபைல்
போனை பாம்புக் கடிபட்டவரின் காதில் பொறுத்தியிருக்க வேண்டும் என்று
கட்டாயம் கிடையாது. ஆனால் பாம்புக் கடிபட்டவருக்கு சுவாசம் இருந்து
கொண்டிருக்க வேண்டும் என்பதை மட்டுமே இவர் வலியுறுத்திக் கூறுகிறார்.
தொலைதூர இடங்களிலிருந்துகூட அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்று இவர்
கூறுகிறார்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா போன்ற
வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
நண்பர்கள் மூலமாக இது பரவுகிறது. நண்பர்களின் நண்பர்கள் அழைப்பு
விடுக்கிறார்கள். கோமா நிலையில் உள்ளவர்களைக் கூட தன்னால் குணப்படுத்த
முடியும் என்று பிரதிப்குமார் சிங் உறுதிப்பட உரைக்கிறார். எனது
குடும்பத்திலும் மருத்துவர்கள் உள்ளார்கள். மந்திரத்தின் மகத்தான சக்தியால்
பாம்புக்கடி தேள் கடி ஆகியவற்றுக்கு வைத்தியம் பார்க்க முடியும் என்பதை
அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இனி மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம். “நான் கேட்டரிங் தொழில் செய்து
கொண்டிருக்கிறேன். எனது ஊழியர் ஒருவரை நாகப்பாம்பு ஒன்று கடித்து விட்டது.
உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு
சென்றனர். ஆனால் அங்கே போதுமான மருந்து இருப்பில் இல்லை என்ற காரணத்தால்
அவரை புவனேஸ்வரத்துக்கு கொண்டு சென்றார்கள். அப்போது சிங்கின் மொபைல் போன்
எண் எனக்கு நினைவுக்கு வந்தது. புவனேஸ்வருக்கு எனது தொழிலாளியை கொண்டு
செல்லும் வழியிலேயே சிங்குடன் நான் பேசினேன். பாம்புக் கடிபட்டவரின் உடல்
நிலை எப்படி இருக்கிறது என்று சிங் கேட்டார். அவர் கோமா நிலையில்
இருக்கிறார் என்று நான் பதில் அளித்தேன். என்ன ஆச்சரியம் புவனேஸ்வரத்துக்கு
கொண்டு செல்லும் வழியிலேயே எனது ஊழியர் எழுந்து உட்காரத் தொடங்கினார்.
ஆனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்து பாருங்கள் என்று
சிங் வற்புறுத்தினார். புவனேஸ்வரம் மருத்துவமனையில் டாக்டர்கள் சோதனை
செய்தனர். பாம்பு கடித்தது என்பதற்கு எந்தத் தடயமும் இல்லை என்று
டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். எதற்கும் முன்னெச்சரிக்கையாக
மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே நான்கு நாட்கள் அவரை வைத்திருந்தோம். 20
வயதான எனது ஊழியர் பூரண நலமுடன் வீட்டுக்குத் திரும்பினார்” என்று
அக்ஷைகுமார் படசாணி கூறுகிறார்.
இதுபோன்றே மற்றொருவரும் சிங்கின் மந்திர சக்திக்கு சான்றுரைக்கிறார். அவர்
முக்தி காந்த் பாரி ஆவார். பாரியின் வயதான தாயாருக்கு மருத்துவமனையில்
அறுவைசிகிச்சை நடைபெற்றது. தாயாருடன் பாரி தங்கியிருந்தார். அப்போது
பாம்பால் கடிக்கப்பட்ட 10 வயது சிறுவனை அங்கு கொண்டு வந்தார்கள். விஷப்
பாம்பினால் கடிப்பட்ட சிறுவனின் உடலில் நீலம் பாரிக்கத் தொடங்கியது.
அப்போது அங்கு கூடிய கூட்டத்தில் இருந்த ஒருவர் சிங்கின் பெயரைக் கூறினார்.
மொபைல் போன் வாயிலாகவே மந்திரம் கூறி சிறுவனை பிழைக்க வைக்க சிங்கால்
முடியும் என்று கூறியதை தான் முதலில் நம்பவில்லை என்று பாரி கூறுகிறார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே அதிசயம் நிகழ்ந்தது. மொபைல் போன் வழியாக
மந்திரத்தைக் கூறி சிறுவனை சிங் பிழைக்க வைத்து விட்டார் என்று பாரி
கூறுகிறார். மந்திரத்தால் சிறுவனுக்கு குணம் கிடைத்ததோ அல்லது
மருத்துவர்களின் சிகிச்சையால் குணம் கிடைத்ததோ எப்படியோ சிறுவன் குணம்
அடைந்துவிட்டான் என்று பாரி கூறுகிறார். சிலர் மந்திரத்தை முழுமையாக
நம்புகிறார்கள். மற்றவர்கள் அறைகுறையாக நம்புகிறார்கள். அவநம்பிக்கைவாதிகள்
எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த காலத்தில்
எல்லாவற்றுக்கும் சான்றிதழ் வேண்டியிருக்கிறது. நிரூபணம்
வேண்டியிருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் நிரூபணம் அளிப்பது சாத்தியமல்ல.
சில விஷயங்கள் அறிவியலுக்கும் அப்பாற்பட்டவை. இவற்றை நம்பிக்கையின்
வாயிலாகத்தான் உணர்ந்து கொள்ள முடியும். நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள்
நம்பிக்கையாளர்களாக மாறிவிடுகிறார்கள். சில நிருபர்கள் சிங் மீது சந்தேகப்
பார்வையை வீசியதுண்டு. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட நோயாளிகளைக் கூட பாம்புக்கடியிலிருந்து மீட்டுள்ளதாக சிங்
தெரிவிக்கிறார்.
“எனது உறவினர் ஒருவரை 2007 ஆம் வருடம் விஷப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது.
அப்பெண்ணின் உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியது. அருகே இருந்த
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் அங்கே அனுமதிக்க மறுத்து
விட்டார்கள். இதையடுத்து சற்று தொலைவில் இருந்த பெரிய மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றோம். கொண்டு செல்லும் வழியிலேயே சிங்கைத் தொடர்பு கொண்டோம்.
பாம்புக் கடிபட்டவரை பெயரை அவர் கேட்டார். அதை அவருக்கு
தெரியப்படுத்தினோம். சில நிமிடங்களிலேயே பாம்புக் கடி பட்டவர் எழுந்து
உட்கார்ந்து விட்டார்.” என்று ராஜேந்தர் லெங்கா கூறுகிறார். அவர்
அரசியல்வாதியாவார். அதுமட்டுமல்லாமல் அரசின் வேலைகளை காண்ட்ராக்ட்
எடுத்தும் செய்து வருகிறார். இனி மற்றொரு மந்திரவாதியைப் பற்றிப் பார்ப்போம். மத்திய பிரதேசத்தைச்
சேர்ந்த ஷாஹாதத் என்பவர் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு
எழுதப்படிக்கத் தெரியாது. அவர் பாம்புக்கடியை குணப்படுத்தும் விதம்
சிங்கின் வழிமுறையிலிருந்து சற்று மாறுபட்டது. ஷாஹாதத் பாம்பு கடிபட்டவரின் பெயரை மட்டுமல்லாமல் அவரது தாயாரின் பெயர்,
கிராமம் மற்றும் தாலுகா, மாவட்டத்தின் பெயரையும் கேட்கிறார். ஏனெனில் ஒரே
பெயரில் பலர் இருக்கக்கூடும் என அவர் அதற்கு காரணம் கூறுகிறார். 250 மில்லி
பாலை கொதிக்க வைக்க வேண்டும். அது வெதுவெதுப்பாக இருக்கவேண்டும். இந்த
இடைப்பட்ட காலத்தில் ஷாஹாதத் மந்திரம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
ஸ்பூனில் பாலை பாம்புக் கடிபட்டவருக்கு உறவினர்கள் புகட்ட வேண்டும். பாலை
எளிதில் புகட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து புகட்ட முயற்சிக்க வேண்டும்.
பாலை பாம்புக் கடிபட்டவர் உட்கொண்டுவிட்டால் விஷம் முறிந்துவிடும். பாலை
அவர் குடித்து முடிக்கும் வரை தொடர்ந்து புகட்டிக் கொண்டே இருக்க வேண்டும்
என்று ஷாஹாதத் கூறுகிறார். 15 நிமிடங்களுக்குள் பாம்புக் கடிபட்டவர்
தானாகவே எழுந்து உட்கார முடியும், வேலைகளைச் செய்ய முடியும். இருப்பினும்
தொடர்ந்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றும், பூஜை
நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஷாஹாதத். “இயற்கையில் நான் குறுக்கிட வேண்டியிருக்கிறது. மன்னிப்புக் கேட்டு நான்
மன்றாட வேண்டியிருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நான்
படிப்பறிவில்லாத முட்டாள். எனக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. எனக்கு
உருது மட்டுமே பேசத் தெரியும். வேறு மொழியில் யாராவது பேசினால் என்னால்
புரிந்து கொள்ள கூட முடியாது. எனக்கு இந்த மந்திரங்களைக் கற்றுக்
கொடுத்தவர் எனது குரு பண்டிட் யஷ்வந்த் மராட்டா ஆவார்.
இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது பரிபூரண தூய்மையுடன் இருக்க வேண்டும்.
அழுக்கான உடலோடோ அல்லது அழுக்கான மனத்தோடோ மந்திரத்தை உச்சரிக்கக் கூடாது.
மந்திரத்தை காசுக்காக உச்சரிக்கக் கூடாது. காசு வாங்கிக் கொண்டு மந்திரத்தை
உச்சரித்தால் அது பலிக்காது. நான் விவசாயியாக இருக்கிறேன். விவசாயம்
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் சோறு போடுகிறது. நான் ஏழைதான். ஆனாலும்
இலவசமாக பாம்புக்கடி மந்திரத்தை உச்சரித்து வருகிறேன். எனது கஷ்டத்தைப்
பார்த்து எனது மொபைலை எனது கிராமத்தினர் அவ்வப்போது ரிசார்ச் செய்து
தருகிறார்கள்” என்று 63 வயதான ஷாஹாதத் கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறியதாவது, “எனக்கு 40 வயது நடந்துகொண்டிருந்த போது
மனத்தில் குழப்பம் ஏற்பட்டது. நான் எனது கிராமத்தை விட்டு வெளியேறினேன்.
அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன். வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றேன்.
சாதுக்களிடம் அடைக்கலம் அடைந்தேன். அவர்கள் ஒரு குருவிடம் கொண்டு என்னைச்
சேர்த்தார்கள். குரு பண்டிட் யஸ்வந்த் மராட்டா எனக்கு மந்திரங்களை சொல்லிக்
கொடுத்தார். அதன் பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது. இந்த 23 ஆண்டுகளில் நான் ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். இதற்கு
நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் தினந்தோறும் 10 பேரையாவது
காப்பாற்றி வருகிறேன். இப்போது நான் இது தொடர்பாக கணக்கும் வைத்துக்
கொள்ளத் தொடங்கியுள்ளேன். ஏனென்றால் பலர் நிரூபணம் கேட்கிறார்கள்.
அதற்காகத்தான் இதை நினைவில் வைத்துள்ளேன். எனக்கு 16 குழந்தைகள் உள்ளனர்.
எதற்கும் உதவாதவனாக என்னைப்பற்றி நான் தாழ்வாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
இப்போது எனது வாழ்க்கை சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது”.
மந்திரங்கள் அனைத்தும் வேத காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றன.
நோயை குணமாக்க, வறுமையைப் போக்க, எண்ணியதை நிறைவேற்ற என பல்வேறு
விஷயங்களுக்காக மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக
மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. மந்திரங்களை உச்சரிக்கும் போது
மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உச்சரிப்பில் சிறு பிசிறுகூட ஏற்படக்
கூடாது. பிசிறு ஏற்பட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்று
பண்டிட் போஜிராஜ் துவிவேதி கூறுகிறார். மந்திரங்களை நேரில்தான் சொல்ல
வேண்டுமே தவிர மொபைல் போனில் சொல்லக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். ஆனால்
காலமாறுதலுக்கு ஏற்ப மொபைல் போனிலும் மந்திரங்களைச் சொல்லலாம் என்று
மந்திரங்கள் வாயிலாக பாம்புக்கடியை குணப்படுத்திவரும் மந்திரவாதிகள்
கூறுகிறார்கள்.
தமிழில்: நிகரியவாதி
நல்ல நகைச்சுவை...but this is called as placebo effect in medical terms
ReplyDeleteDear Suryajeeva
ReplyDeletemr. kumar singh matter not a joke. when i was in new project at buvaneswar (10 yrs ago) , ( EX-IT engineer in leading news paper ), i seen for my office staff's son, without treatment he escaped from cobra bite. (his body color changed from light blue to normal. but i missed the contact no.
seshadri
dubai
தயவு செய்து போன் நம்பர் இருந்தால் தாருங்களேன். என் Mail Id: tell2ram@gmail.com
ReplyDeleteஎங்கள் கிராமம் தஞ்சாவூர் அருகில் உள்ளது. இங்குள்ள பலருக்கு இது ரொம்ப உதவியாய் இருக்கும்