கூடங்குளத்தில் அணுசக்தி ஆலைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டம்
தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சிகளைப் போன்று நமது காட்சி
ஊடகங்களில் பல வாரங்களாக காட்டப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுசக்தி
ஆலையில் தேசம் 13,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஆனால் இதை செய்தி
பஞ்சத்தால் துடித்துக் கொண்டிருக்கின்ற காட்சி ஊடகங்கள், காலை, நண்பகல்,
மாலை, இரவு காட்சிகளாக தரம் தாழ்த்திவிட்டன.கூடங்குளம் போராட்டம் ஒன்றும் தனித்தன்மை வாய்ந்ததல்ல. அன்னா ஹசாரே நடத்திய
உண்ணாவிரததப் போராட்டத்தை நகல் எடுத்ததைப் போன்று கூடங்குளத்தில் நாடகம்
அரங்கேற்றப்பட்டு வருகிறது. நிராதரவான கிராமவாசிகளின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அதற்காக அவர்கள் போராட்டம் நடத்தி வருவதா
கவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திரைக்கதை எழுதியவர்கள், வசனகர்த்தாக்
கள், இயக்குனர்கள் இன்னும் திரைக்குப் பின்னால் உள்ள பிற கலைஞர்கள் யார்
என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. ஆனால் கூடங்குளம் நிகழ்வு ஒன்றும்
தனித்தீவு போன்று ஒற்றை நிகழ்வு அல்ல.தொலைதூரத்தில் இருக்கின்ற மேகலாய மாநிலத்தில் உள்ள மேற்கு காஸி மலைக்
குன்று பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன நடைபெற்று வருகி றதோ
அதுதான் இப்போது கூடங்குளத்தில் நடைபெற்று வருகிறது.
மேகலாயாவில் யுரேனியத்தை தோண்டி எடுக்கக்கூடாது என்பதை முதன்மைப்படுத்தி
போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேகலாயா நிகழ்வுக்கும்
கூடங்குளம் நிகழ்வுக்கும் திரைக்கதை எழுதியவர்கள், வசன
கர்த்தாக்கள், இயக்குனர்கள் இன்னும் திரைக்குப் பின்னால் உள்ள பிற
கலைஞர்கள் ஒரே அணியைச் சேர்ந்தவர் கள்தான். அவர்களுக்கு பொதுவான இலக்கு
ஒன்று உள்ளது. கூடங்குளம் போராட்டம் அணுசக்திப் பாதையில் இந்தியா எழுச்சிப்
பெறுவதை தடுத்து நிறுத்துகிறது. மேகலாயாவில் மேற்கு காஸி மலைக்குன்று
பகுதியில் நடத்தப்பட்டு வருகின்ற போராட்டம் இந்தியா அணு ஆயதங்கள்
தயாரிப்பதை தடுக்கிறது. இதற்கு பின்னணியில் உள்ள திரைக்கதை
எழுதியவர்கள், வசன கர்த்தாக்கள்,இயக்குனர்கள் இன்னும் திரைக்குப் பின்னால்
உள்ள பிற கலைஞர்கள் யாவருக்கும் ஒரு பொது இலக்கு உள்ளது. இவர்கள்
யார்? இவர்களின் இலக்கு என்ன?அணு சக்தித் தொழில்நுட்பம், இந்தியாவைப் பொறுத்த வரை எந்த அளவில் இருக்கிறது? இந்தியாவுக்கு அணுசக்தியும் தேவைப்படுகிறது.அணு ஆயுதமும் தேவைப்படுகிறது. உலகில் மொத்தம் 22 ஆயிரம்
அணுகுண்டுகள் உள்ளன. இவற்றில் 8 ஆயிரம் அணுகுண்டுகள் எதிரிகளைத்
தாக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனா 240 அணு குண்டுகளை
வைத்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலான வற்றை இந்தியாவைத் தாக்க தயார்
நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தான் 80 அணு குண்டுகளை இந்தியாவைத் தாக்க
தயார் நிலையில் வைத்துள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து
வைத்துள்ளத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே அதாவது 100 அணு
குண்டுகள் மட்டுமே இந்தியா வசம் உள்ளன.
இந்தியாவுக்காக உண்மையிலேயே அக்கறைப்படவும் அணுசக்தியை மேம்படுத்தவும்
யாருக்கும் சிரத்தை இல்லை. அணு சக்தி மற்றும் அணு ஆயுத மேம்பாடு
இந்தியாவுக்கு அவசியம். இதற்கான அணுசக்தி தொழில்நுட்பமும் இன்றியமையாதது
என்பதை சரியான முறையில் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். மறுபுறம் நமது
அணு பாதுகாப்பு, ராணுவம் சார்ந்த அணு சக்தி, வெளிநாட்டு இறக்குமதியையை
பெருமளவு சார்ந்திருக்கிறது. இது கவலைத் தரக்கூடியது, இடர் அளிக்கக்
கூடியது. உலக மக்கள் தொகையில் நாம் 6ல் 1 பங்காக இருக்கிறோம். நாம்
எண்ணெய், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்
என்பது வெட்கக் கேடானது. நாம் ஆண்டுதோறும் நமது எரிசக்தி பொருள்களின்
இறக்குமதிக்காக 100 பில்லியன் டாலர் செலவு செய்கிறோம்.
தற்போது 100 பில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இதற்காக
மட்டும் 5 பில்லியன் டாலர் செலவாகிறது. இது 2020ல் 45 பில்லியனாக உயரும்,
2050ல் இது 250 பில்லியனாக உயரும்.நாம் இப்போது 1,50,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்து
வருகிறோம். 2030ல் இதை 6 மடங்குக்கும் அதிகமாக அதாவது 9,50,000 மெகாவாட்டாக
உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டிருந்தால்
இந்த இலக்கை நிறைவேற்ற முடியாது. இதைச் சொல்வதற்கு எந்த தீர்க்கதரிசியும்
தேவையில்லை. நீண்டகால கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் தேவையைப் பூர்த்தி
செய்ய உள்நாட்டு எரிசக்தி கட்டாயம் தேவை. இதற்கு அணுசக்தி முதன்மையானது.
இனி அனல் மின்சாரத்திற்கும், அணு மின்சாரத்திற்கும் இடையே உள்ள இயல்புகள்
குறித்து குறிப்பாக சூற்றுச்சூழல் விவகாரம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய
இடர்கள் ஆகிய கண்ணோட்டத்தில் அலசிப் பார்ப்போம். ஒன்று சாதகமாக இருந்தால்
மற்றொன்று சாதகமற்றதாக இருக்கும். 1000 மெகாவாட் அனல் மின் நிலையம் காரணமாக
ஆண்டுதோறும் 400 பேர் உயிர் இழக்கிறார்கள். இந்த உயிர் இழப்பு காற்று
மாசுபடுதல் வாயிலாகவும் தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாகவும் நிகழ்கிறது என
வல்லுனர்கள் கூறுகின்றனர்.அணுசக்தி மின்சார உற்பத்தியிலும் சில இடர்பாடுகள் உள்ளன, விபத்துக்களும்
நேரிட்டுள்ளன. ஆனால் பல பத்தாண்டுகளுக்கு ஒரு முறைதான், அதாவது 60
ஆண்டுகளில் நான்கு விபத்துக்கள் நேரிட்டுள்ளன.இவற்றில் 66 பேர் நேரடியாக
உயிர் இழந்துள்ளனர். சுமார் 4000 பேர் மறைமுக நிகழ்வுகள் காரணமாக உயிர்
இழந்துள்ளனர்.அனல் மின்சாரத்தோடு ஒப்பிடும்போது அணு மின்சாரம் குறைந்த
இடர்பாடு உடையதுதான்.விமானங்களில் செல்கிறோம், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 1000
பேர்விமான விபத்துகளில் இறக்கிறார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
2007ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் போக்குவரத்து
சார்ந்த விபத்துகளால் 1.14 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளார்கள்.
இப்படியெல்லாம் நடத்து விட்டதே என நிலக்கரி பயன்பாட்டை
தடுத்துவிடுவீர்களா? அல்லது விமான போக்குவரத்து வேண்டாம் பேருந்து
போக்குவரத்து வேண்டாம் என்று சொல்வீர்களா? இப்படிச் சொன்னால்
சிரிக்கமாட்டார்களா?மற்றவற்றுடன் ஒப்பிடும்போது அணு சக்தி மேலானதுதான். குறைந்த இடர்பாடு
உடையது. தூய்மையானதும் கூட. இப்படி இருக்கும்போது அணு சக்தி மிகவும்
அபாயகரமானது என்று சிலர் முத்திரை குத்துவது ஏன்? இனி, நாம் அணு சக்தியை
உற்பத்தி செய்வது குறித்தும், அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வது குறித்தும்
கவனிப்போம்.
நமது அணுசக்தி திட்டங்களுக்கு யுரேனியம்தான் அடிப்படையாக உள்ளது. நம்மிடம்
யுரேனியம் குறைந்த அளவுதான் இருக்கிறது. இது மேகலாயாவில் உள்ள காஸி
மலைக்குன்று பகுதியில் பெருமளவு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜார்கண்ட்டில்
உள்ள ஜடுகுடாவிலும், ஆந்திராவில் உள்ள தும்மலப்பள்ளியிலும் யுரேனியம்
இருக்கிறது. உலகளாவிய யுரேனியம் வர்த்தகம் என்பது அரசியல் சார்ந்தது. இதை
என்.எஸ்.ஜி எனப்படும் அணுத் தொழில்நுட்பம் வழங்குகின்ற நாடுகளின் குழுமம்
கட்டுப்படுத்துகிறது. என்.எஸ்.ஜி. யால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு
மட்டும்தான் யுரேனியம் கிடைக்கும். இந்த நாடுகளில் உள்ள அணு உலைகளை
என்.எஸ்.ஜி கண்காணிக்கும். இந்த நிபந்தனையில் பேரில் மட்டுமே அணுத்
தொழில்நுட்பம், இயந்திரங்கள் யுரேனியம் வழங்கப்படும்.இந்தியா, அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
என்.எஸ்.ஜி நாடுகளிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்காகவே
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள 22 அணு
உலைகளில் 14 அணு உலைகள் என்.எஸ்.ஜி. நாடுகளின் கண்காணிப்புக்கு
உட்பட்டவையாகும். எஞ்சியுள்ள 8 அணு உலைகளில் மட்டுமே அணு ஆயுதங்களை
தயாரிக்க முடியும். அணு சக்தி உலைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து யுரேனியத்தை
இந்தியா இறக்குமதி செய்ய முடியும். ஆனால் அது குறுகிய கால தீர்வாகத்தான்
இருக்கமுடியும். ஏனெனில் அது மிகுந்த செலவு பிடிக்கக்கூடியது. இந்தியா
போன்ற பரந்து விரிந்த நாட்டுக்கு இது மிகுந்த சுமையை அளிக்கக்கூடியது.
பெரிய அணுசக்தி ஆலைகளுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் நாம் வெளிநாட்டு
யுரேனியத்தையே நெடுங் காலத்திற்கு நம்பிக் கொண்டிருக்க முடியாது.
உள்நாட்டிலேயே எரிபொருள் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக உலகிலேயே மிக அதிக அளவு தோரியம் நம் நாட்டில்தான் உள்ளது.
இது யுரேனியத்திற்கு மாற்றாகும். தோரியம் எதிர்காலத்தில் அணு சக்திக்கான
முக்கிய இடுபொருளாக அமையக்கூடும். இதற்கான தொழில்நுட்பத்தை நாம்
செம்மைப்படுத்தி வருகிறோம். இது நிறைவுபெற்ற பிறகு தோரியத்தைப் பயன்படுத்தி
அணுசக்தியை தயாரிக்க முடியும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தை
செம்மைப்படுத்தும் வரை நாம் உள்நாட்டிலேயே கிடைக்கக்கூடிய யுரேனியத்தை
தோண்டி எடுக்க வேண்டும். முதலாவதாக வெளிநாட்டு இறக்குமதியைச்
சார்ந்திருப்பதை குறைக்கவேண்டும். அணுசக்தி உற்பத்திக்கான இடுபொருளுக்கு
வெளிநாட்டையே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. அடுத்ததாக 8 அணு சக்தி ஆலைகளை
அணு ஆயுதங்கள் உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த இரண்டு
விவகாரங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான். இப்போது திரையை விலக்கிப்
பாருங்கள். அங்கு யார் யாருடைய முகங்கள் பளிச்சிடுகின்றன என்பதைப்
பாருங்கள். 20 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் காஸி மலைப்பகுதி போராட்டத்திலும்
கூடங்குளம் அணு உலைப் போராட்டத்திலும் ஒரே முகங்கள்தான் பளிச்சிடுகின்றன.
இந்தியா அணு சக்தி ரீதியாக எழுச்சிப் பெறக் கூடாது என்று கங்கணம் கட்டிக்
கொண்டு செயல்படுகின்ற தீய சக்திகள்தான் இந்த இரண்டு போராட்டங்களுக்கும்
பின்னணியில் உள்ளன. கூடங்குளம் போராட்டத்திற்குப் பின்னால் கத்தோலிக்க
சர்ச்தான் உள்ளது என்பது சற்று காலதமதமாகவேனும் வெளிச் சத்துக்கு
வந்துவிட்டது. நடு நிலை ஊடகச் செய்திகள், கூடங்குளம் அணு உலை போராட்ட
எதிர்ப்பில் முன்னணி வகிக்கும் எஸ்.பி. உதயகுமார், இடிந்தகரை கிராமத்தில்
உள்ள கிறிஸ்தவ பாதிரி ஜெய்குமாருடன்தான் தங்கியிருக்கிறார். இந்த கிறிஸ்தவ
பாதிரி ஜெய்குமார் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறார்.கூடங்குளம் பாதிரி ததியூஸ், உவரி புனித அந்தோனியார் சர்ச் பாதிரி எஸ்.
பீட்டர் ஆகியோரும் போராட்டத்தை ஆதரித்து வருகிறார்கள். இடிந்தகரை
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இவர்கள் எல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டே
இருக்கிறார்கள். அதனால்தான் அந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து
கொண்டே இருக்கிறது. திருநெல்வேலி பேராயரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு
தெரிவித்துள்ளார் என்பதை பாதிரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது
பாதிரிகளால் நடத்தப்படுகின்ற போராட்டமாகும். உண்ணாவிரதப் போராட்டத்தில்
கலந்து கொள்கிறவர்களுக்கு போக்குவரத்து வசதி, செலவுக்கு பணம், சாப்பிட
பிரியாணி ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள் பாதிரிகள்தான்.
கூடங்குளம் அணு மின்நிலைய அதிகாரிகள் மீது கல்வீச்சு நடைபெற தூண்டுதலாக
இருந்தவர்களும் பாதிரிகள்தான். போராட்டக் களத்திலிருந்து பாதிரிகளை
விரட்டியடித்தால் போராட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும்.
மேகாலய மாநிலத்தில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு
இந்திய யுரேனிய படிவில் 6ல் 1 பங்கு உள்ளது. ஆனால் 1990ல் இருந்து 1 கிலோ
கிராம் யுரேனியம் கூட தோண்டி எடுக்கப்படவில்லை. ஏனெனில் காஸி மலைக்குன்று
பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 20 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தொடர்ந்து
போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை மேகாலயா பாதிரிகள் ஆதரிக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் மாணவர்களை ஏவிவிட்டு போராட்டத்தை நடத்துபவர்களே
பாதிரிகள்தான். வன்முறை நிகழ்வுகள், சாலை மறியல்கள், போக்குவரத்துமுடக்கங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசு அலுவலகங்களை தீ
வைத்துக் கொளுத்துதல், அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தல் என்றெல்லாம்
நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
(http:/wise-uranium.org/upinml.html) போராட்டக் காரர்களுக்காக யாரெல்லாம்
பேசுகிறார்கள்? ஷில்லாங் பேராயர் டொமினிக் ஜலா குரல் கொடுக்கிறார்.
(http://www.cathnewsindia.com/2009/10/29/uranium-mining-arch-bishop-வாண்ட்ஸ் dialogue-2/) போராட்டக் களத்திலிருந்து
பாதிரிகளை அப்புறப்படுத்தினால் போராட்டம் தானாகவே தணிந்துவிடும்.
ஜார்கண்டில் உள்ள யுரேனியப் படிவை எடுப்பதற்குக் கூட முட்டுக்கட்டைப் போடத் தொடங்கிவிட்டார்கள். அங்குள்ள வனவாசிகளிடையே சர்ச் ஆதரவு
பெற்ற தொண்டு நிறுவனங்கள் தீவிர பிரச்சாரம் செய்துவருகின்றன. ஜார்கண்டில்
யுரேனியத்தை தோண்டி எடுக்கக்கூடாது என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
முத்தாய்ப்பு
மேகலயாவில் நடைபெற்றுவரும் யுரேனியத்தை தோண்டியெடுக்கக் கூடாது என்ற
போராட்டமும் கூடங்குளத்தில் உள்ள அணுசக்தி ஆலையை மூடவேண்டும் என்ற
போராட்டமும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்.திரைக்கதை எழுதியவர்கள், வசன கர்த்தாக்கள், இயக்குனர்கள் இன்னும்
திரைக்குப் பின்னால் உள்ள பிற கலைஞர்கள் ஒரே நபர்கள்தான். அவர்களுக்கு
உலகளாவிய தொடர்பு உள்ளது. பணமும் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிந்து
கொண்டிருக்கிறது. அவர்களது ஒரே இலக்கு இந்தியா அணுசக்தி ரீதியாக எழுச்சிபெற
அனுமதிக்கக் கூடாது என்பதுதான். இந்தியா அணுசக்தித் துறையில் எழுச்சிப்
பெறுவதை முடக்க வேண்டும் என்பதற்குப் பின்னணியில் அரசியல் மற்றும் பூகோள
ரீதியான செயல்திட்டம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஏற்படும்
என்பதற்கேற்ப அணுசக்தியை முடக்க நினைத்தால் அதற்கு நேர் எதிரான விளைவு
ஏற்பட்டே தீரும்.
குருமூர்த்தி
anna review the comments and then publish it.
ReplyDelete