Search This Blog

Monday, November 07, 2011

மதவெறியர்களா?

ஹிந்துத்துவமும் தீவிரவாத இஸ்லாமும்


ஒவ்வொரு புனித நூலும் வன்முறை உள்பட அனைத்து விளைவுகளையுமே நியாயப்படுத்தும்  விவாதங்களைக் கொண்டவையே. இந்த 200 ஆண்டுக்கால நிகழ்வுகளால் ஹிந்துக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம் மிகவும் குறைவாக எடைபோடப்பட்டுள்ளது.“உங்கள் ஹிந்துத்துவம் இஸ்லாமிய அடிப்படைத் தத்துவத்திலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதல்ல” என்பது சமீப காலங்களில் புழக்கத்திலிருக்கும் ஒரு நவநாகரீக வாதம். இப்படிச் சொல்வதனாலேயே சொல்லப்படுபவரின் மதச்சார்பற்ற கொள்கை வெளிப்படுத்தப்படுவதாக எண்ணம். ஆனால் இது ஒரு பொய் என்பது சில நொடிப் பொழுதுகளிலேயே தெரிந்துவிடும். இருப்பினும் இதனுள் ஒரு துளி உண்மை பொதிந்திருக்கிறது. அது அவர்கள் நினைப்பது போல் ஹிந்துத்துவத்தை இஸ்லாமுக்கு நிகராக சித்தரிப்பவை அல்ல. மாறாக, ஹிந்துக்களைப் புறம்தள்ளுபவர்களுக்கான சில எச்சரிக்கை வாதங்களே.

எந்த கீதோபதேசத்திலிருந்து மகாத்மா காந்தி அகிம்சைக் கொள்கையையும் சத்தியாக்கிரகத்தையும் கைகளில் எடுத்துக் கொண்டாரோ, அதே கீதையிலிருந்துதான் லோகமான்ய திலகர் தமது தீவிரவாதக் கொள்கைகளுக்கான ஆயுதங்களை எடுத்து கொண்டார். எந்த கீதையிலிருந்து காந்தியடிகள் சத்தியம், தர்மம், தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்தல் ஆகியவற்றைத் தனது கொள்கைகளாக எடுத்துக் கொண்டாரோ, அதே கீதையிலிருந்துதான் லோக்மான்ய திலகர், அவரது புகழ்பெற்ற கொள்கையான “தீயவனுக்கு தீங்கு செய்தல்” என்ற கொள்கையை எடுத்துக் கொண்டார்.அந்தத் துளி உணர்த்தும் உண்மை என்னவென்றால் எந்த ஒரு கலாசாரத்திலும் எந்த ஒரு புனித நூலிலும் கூட கொடுமைகளை, கொடும் விளைவுகளை நியாயப்படுத்தும் வாதங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதே.மாண்டலே சிறைச்சாலை வாசத்தின் போது திலகர் அவரது மகத்தான படைப்பான கீதாரகசியத்தில் ஸ்ரீசமர்தாவிற்கு எழுச்சியூட்டும் வகையில், “தைரியத்தை தைரியத்தின் மூலமாகவும், முரட்டுத்தனத்தை முரட்டுத்தனம் மூலமாகவும், அயோக்கியர்களை அயோக்கியத்தனத்தின் மூலமாகவுமே வெல்ல வேண்டும்” என்கிறார். சின்னத்தனம் புரிபவர்களிடமா பெரிய மனதுடன் நடந்து கொள்வது? குரூரர்களிடமா மன்னிக்கும் தன்மையை செயல்படுத்துவது? பக்தப் ப்ரகலாத சரித்திரத்தை நினைத்துப் பாருங்கள். எனவே நண்பர்களே… அறிவாளிகள் எப்போதுமே மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையைப் போதிக்க சில அசாதாரணமான உதாரணங்களை முன்வைக்கின்றனர். உண்மைதான். சாதாரணமான சூழ்நிலையில் ஒருவன் மற்றொருவனுக்கு தீங்குகள் செய்யக் கூடாது என்பது பொதுவிதிதான்.


ஆனால் நண்பர்களே மகாபாரதம் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.  இந்தப் பொதுவிதி, ‘எங்கெல்லாம் பிறரது மனங்களும், மதக் கொள்கைகளும் பாதிக்கப்படுகிறதோ அத்தகையோரது சமூகங்களில் செல்லுபடியாகாது’ என்றே தெளிவுபடுத்துகிறது. எனவே ஒரு கொடுங்கோலனைக் கொல்வதனாலேயே அகிம்சைக் கொள்கை மீறப்படுகிறது என்பது அர்த்தமற்றது. அதேபோல் பிறரையும் சமமாக பாவிப்பது என்பதும், தீங்கு செய்பவர்களைத் தண்டிப்பதன் மூலம் மீறப்படுவதாகாது. எங்கெல்லாம் எப்போதெல்லாம் சத்தியங்களும் தர்மங்களும் மீறப்படுகிறதோ, அங்கெல்லாம் தர்மத்தைக் காக்க நான் அவதாரமெடுப்பேன் என்று பகவானே சொல்லவில்லையா? தர்மத்தைக் காப்பாற்ற ஒருவன் துணியவில்லை என்றால் அவன், அதர்மம் தன் வேலையைச் செய்ய துணை போகிறான் என்றே பொருளாகிறது.திலகர், பீஷ்மர் மற்றும் யுதிஷ்டிரரின் அறிவுரைகளை எடுத்துரைக்கும் முயற்சியாக, “மதம் மற்றும் நல்லொழுக்கம் என்பது எவனொருவன் தன்னைப் போல் பிறரையும் மதிக்கிறானோ அவனே உண்மையானவன் என்று உணர்த்துவதோடு, புனிதர்களிடம் புனிதமாகவும், பொய்யர்களிடையே  சாமர்த்தியமாகவும் செயல்பட்டு வெல்வதே அறிவுடைமை.” லோகமான்யர் மேலும் அறிவுறுத்துகிறார்.“எடுத்தவுடனேயே சண்டைக்குப் போகவேண்டும் என்பது அர்த்தமல்ல. சாத்வீகமாக முயற்சித்துப் பாருங்கள். தீங்கு செய்பவர்களை சமாதானமாக எச்சரித்துப் பாருங்கள். அதன்பிறகும் கேடு செய்பவர்களின் கெடுதல்கள் நமது சாத்வீகமான முயற்சிகளை மீறித் தொடருகிறது என்றால், முள்ளை முள்ளால் எடுப்பது என்கிற கொள்கையை கையிலெடுப்பதுதான் சிறந்தது. பகவான் கிருஷ்ணரே, ‘இத்தகைய வழிகளில் தர்மத்தை நிலைநிறுத்துபவர்களை, நான் என்னிடம் பக்தி செலுத்துபவர்களிடம் பொழிகின்ற அதே கருணையைக் காட்டுவேன்’ என்கிறார். குற்றவாளியைத் தண்டிக்கும், தூக்கிலிடச் செய்யும் எந்த நீதிபதியையும் யாரும் குற்றவாளிக்கு எதிரானவன் என்று கருதுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார் திலகர்.


லோகமான்ய திலகரின் கீதா ரகசிய  அறிவுரைகளும், காந்திஜியின் அகிம்சைப் பிரயோகங்களும் ஒரே புனித நூலிலிருந்து எடுக்கப்பட்ட இருவேறு கோணங்கள் தான். இரண்டுமே மாபெரும் ஹிந்து அபிமானிகளால் ஏற்படுத்தப்பட்டவையே. காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளால் சாதாரண ஹிந்துக்கள்  கட்டுண்டுபோய் விட்டார்களா என்ன? கீதையிலேயே இறுதியில் அர்ஜுனன் அகிம்சை சத்தியம் போன்றவைகளைக் கேட்டு செயலற்றா அரண்மனையில் உட்கார்ந்து விட்டான்? ரத்தக் களரியான போர்க்களமல்லவா புகுந்துவிட்டான்? 

சௌகரியமான வாதங்கள்:

 
வீர சாவர்க்கர் போன்ற தனிமனிதர்களையோ அல்லது ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.ஹெச்.பி போன்ற அமைப்புகளையோ ஒடுக்குவதன் மூலம் பிரச்சினைகளை ஒடுக்கிவிடலாம் என்று நினைப்பது வெறும் சௌகரியமான வாதங்கள் மட்டுமே. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. கடும் நடவடிக்கைகளின் மூலமே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று ஹிந்துக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். 200 ஆண்டுகளாக ஹிந்துக்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மிகவும் குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.தங்களது மதங்களை நமது பாரத நாட்டில் நிலைநாட்டி விடுவதற்காக நம்மை அடிமைப்படுத்தி, ஆயிரம்  ஆண்டுகளுக்கும் மேலாக நம்மீது அதிகாரத்தைச் செலுத்திவந்த பிற மதத்தினருக்கு எதிராக  ஹிந்துக்களிடமிருந்து பல்வேறு வகையான எதிர்க் குரல்கள் ஒலித்து வந்தன. ஆயுதமேந்திய போராட்டங்கள் பல நூற்றாண்டுகளாய்… இறுதியில் பயனற்றுப் போயின. மகத்தான கவிகளால் போற்றப்பட்ட பக்தி இயக்கங்கள்… அவற்றின் மூலம் ஹிந்துமத கலாசாரங்கள் ரகசியமாய் காப்பாற்றப்­பட்டன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கோவாவின் தென்பகுதிகளில் மக்கள் தங்களது இஷ்டதெய்வங்களின் திருவுருவங்களைத் தங்கள் உடைகளைப் பாதுகாக்கும் பெட்டிகளில் வரைந்து வைத்துக் கொண்டு தங்களது வழிபாடுகளை ரகசியமாகப் பின்பற்றி வந்துள்ளனர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உதாரணமாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரது எளிமையான அறிவுரைகள் கூட, மிஷனரிகளின் செயல்பாடுகளைச் செயலிழக்க வைத்தன. தட்சிணேஸ்வர ஆலயத்தின் திருவுருவங்கள் மிஷனரிகளின் பிடியிலிருந்து அவரால்… அவருடைய தீவிர பக்தியினால் மீட்கப்பட்டன. ஸ்ரீ அரவிந்தர், ரமண மகரிஷி ஆகியோர்களின் காந்தசக்தியை என்னென்று சொல்வது? காந்திஜி ஹிந்து மதத்தின்மீது கொண்டிருந்த பற்று வெளிப்படையானது.


ஆனால் இத்தகையை உணர்வுகள் கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்துக்களிடம் மேலும் வலுவடைந்­திருப்பதாகத் தோன்றினாலும், அது இந்த பாரத தேசத்தை அந்நிய ஆளுமையிலிருந்து தடுத்துவிடவில்லை. அந்நிய ஆட்சியாளர்களிடம் இருந்து  இந்த மக்களைக் காப்பாற்றிவிடவில்லை. லட்சக்கணக்கான மதமாற்றங்களைத் தடுத்துவிடவில்லை. மதங்களின் பெயரால் இந்த தேசம் துண்டாடப் படுவதிலிருந்து பாதுகாக்கவில்லை.கிடுக்கிப்பிடியாக இந்த தேசத்தை ஜுதாயிஸமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் தன்னைத் தானே உண்மையானதென தீவிரமாகவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்திய மதங்களான ஹிந்து, பௌத்தம், ஜைனம், சீக்கியம் ஆகியவை அடக்கியாளும் நோக்கத்துடனும், அதன் மூலம் தங்களது மதங்களை நிலைநாட்டிக் கொள்ளும் எண்ணங்களுடனும் ஊடுருவியுள்ள மதங்களை மீறி எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப்போகின்றன? அதுவும் அவர்கள் கையேந்தியுள்ள ஆயுதங்கள் மற்றும் இன்னபிற அமைப்புகள் (மிஷனரிகள்), தாராளமாகக் கொட்டும் பணபலம் ஆகியவற்றை­யெல்லாம் மீறிக் கொண்டு எவ்வாறு தலைதூக்கப் போகின்றன? இந்தக் கேள்வி இந்தியாவிலுள்ள ஹிந்துக்களை மட்டும் எதிர்­நோக்கி இருப்பதல்ல. ஹிந்து மதம் பரவியுள்ள அனைத்து நாடு­களுக்கும் தான். இந்தோனேஷியா, மலேசியாவின் ஹிந்துக்களின் நிலை பற்றி யோசியுங்கள். திபெத், தாய்லாந்திலுள்ள புத்த மதத்தின் கதி என்ன? எதனால் இந்த நிலை? பிற மத ஊடுருவாளர்களின் கிடுக்கிப்பிடியேதான் காரணம் என்பதனை உணர்ந்தே சுவாமி விவேகானந்தர் ஹிந்துக்களை நோக்கி, “உள்ளத்தளவில் (ஆன்மா) ஹிந்து ஆகவும் உடலளவில்   இஸ்லாமியராகவும் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்” என்றார். மதச்சார்பற்றவர்களையும் மீறி சுவாமி விவேகானந்தரின் இந்த அறிவுரை ஏற்கப்படும் என்றே கருதுகிறேன்.

ஹிந்துக்களின் மனங்களை தூண்டக்கூடிய உண்மைகள்:

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் தீவிர பிரச்சாரங்களைக் கவனியுங்கள். தப்லிக் ஜமாத்தின் தீவிர மதமாற்றங்களையும், மிஷனரிகளின் முறையான ஹிந்து மனங்களின் ‘அறுவடை’ நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மதமாற்றங்களுக்காகவும் இதர நடவடிக்கைகளுக்காகவும் ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவிலிருந்தோ அல்லது ரோமிலிருந்தோ, அமெரிக்க சர்ச்சுகளிலிருந்தோ அந்தப் பணம் வருகிறது.

தங்களை நிலைநாட்டிக் கொள்ள பலவகையான  வன்முறைகளை மேற்கொள்கின்றனர்.

சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட்டணி சேர்ந்து கொண்டு தங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வது.

மதசார்பற்றவர்களின் ஒரு தலைப்பட்சமான உரையாடல்கள். 

அரசியல் கட்சிகள் ஹிந்துக்கள் அல்லாதவர்களை குறிப்பாக, இஸ்லாமியர்களைத் தங்கள் ஓட்டு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல். 

இத்தகைய செயல்பாடுகளுக்கு இந்தியாவில் ஆட்சியில் இருக்கின்ற அரசுகள் வளைந்து கொடுப்பது. 

ஹிந்துக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துவது ஏறக்குறைய அவர்களது தொடர் பழக்கமாகவே ஆகிவிட்டது. இருப்பினும் நமது அறிவாளிகள் அதனைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்பது அதைவிடக் கொடுமை.  


எம்.எஃப். ஹுசைன் அன்பான மனிதர். அற்புதமான ஓவியர். ஆனால் ஹிந்து மனங்களைக் காயப்படுத்தும் அவரது ஓவியக் கண்காட்சிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஹிந்துக் கடவுள்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவருடைய ஓவியங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஒன்று என் நினைவுக்கு வருகிறது. ஹிந்துக்கள் தெய்வமாகப் போற்றி வழிபடும் சீதாவை அனுமனது விரைத்த வால் பகுதியில் அமர்ந்திருப்பது போல் (இதனை மேலும் விளக்குவது நமக்கு அழகல்ல)  சித்தரித்திருப்பது  மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால் நடப்பது என்ன? மதச்சார்பின்மை பேசுபவர்கள், அது ஓர் ஓவியனின் கற்பனை என்கிறார்கள். சரி… இங்கே ஒரு கேள்வி பிறக்கிறது. அவரது 75 ஆண்டுக்கால ஓவியங்களில் ஒரு முறை கூட முகமது நபியை விதவிதமாய்ச் சித்திரிக்க வேண்டும் என்கிற எண்ணம் அல்லது கற்பனை ஏன் பிறக்கவில்லை? ஹிந்துக் கடவுளை சித்திரிப்பது போல் கூட இருக்க வேண்டாம். ஆனால் தனது வளமான கற்பனையைப் பயன்படுத்தி நபி அவர்களை அழகாகவோ ஒளிமயமாகவோ கூட ஏன் ஓவியம் தீட்டவில்லை? இஸ்லாத்தில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு பெண்மணியையும் பார்த்து அவருக்கு ஏன் கற்பனை சுரக்கவில்லை? ஏன் தனது குடும்பப் பெண்கள் யாரையும் தனது கற்பனை வளத்தினால் ஹிந்துக் கடவுள்களைப் போல் ஓவியம் தீட்டவில்லை?


ஒரு சமயம், இதுபற்றிய விவாதங்களின் போது  ஒரு மதச்சார்பற்றவர், “ஹுசைன் தனது ஓவியங்களின் மூலம் ஹிந்துக் கடவுள்களின் மீதுள்ள தனது மதிப்பையே வெளிப்படுத்துகிறார்” என்று சொல்லி கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு திறமையாளர்களும், அவரவர்களது திறமையின் மூலம் தெய்வங்களையும், தங்களுக்குப் பிடித்த நபர்களையும் மதிக்கத்தான் செய்வார்கள். ஆனால் ஹுசைன் அப்படி ஏன் தனது அபரிமிதமான ஓவியத் திறமை மூலம் முகமது நபியை மதிக்கத் துணியவில்லை?ஒரு கூட்டத்தில், “அருண்ஷோரி எப்பொழுதாவது கஜுரஹோவிற்கு போயிருக்கிறாரா?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு அர்த்தம் என்னவென்றால், “அங்கே ஹிந்து சிற்பங்கள் ஆடையற்ற நிலையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் போது ஹுசைன் அப்படி வரைவதில் என்ன தவறு இருக்கிறது?” என்பதுதான். இருக்கலாம். கஜுரஹோ முறையைப் பின்பற்றும் அதி திறமையாளரான ஹுசைன், அதே முறையைப் பின்பற்றி இஸ்லாமிய சித்திரங்களை ஏன் தீட்டவில்லை? இதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் அவருக்கு, அதாவது ஹுசைன் என்கிற உலகம் போற்றும் ஓவியருக்கு நன்றாகத் தெரியும். அப்படி ஏதாவது அவர் செய்தால், அதன் பிறகு அவருக்கு ஓவியம் தீட்டவே கைகள் இருக்காது என்று. ஏன், அவரை உயிருடனேயே இருக்க விட்டுவைக்க மாட்டார்கள் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். 

இதுதான் இன்று நமது அரசியல் சூழ்நிலையும். ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி என்றில்லை. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுமே, காங்கிரசிலிருந்து இடதுசாரிக்  கட்சிகள் வரை இஸ்லாமியர்களைத் தங்களது ஓட்டுவங்கியாகக் கருதுகிறார்கள். இஸ்லாமியர்கள் ஓட்டு வங்கிகளாகச் செயல்படத் தொடங்கிவிட்டால், கண்டிப்பாக ஒரு காலகட்டத்தில் யாராவது ஒரு அரசியல்வாதிக்கு,  ஹிந்துக்களையும் ஓட்டுவங்கிகளாக உருமாற்றும் யோசனை பிறந்துவிடும். அப்படி நடந்துவிட்டால் பின் படிப்படியாக ஹிந்துக்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள். சந்தேகமே இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் மதச்சார்பற்றவர்கள் என்னும் போது, ஹிந்து பயங்கரவாதிகள் மட்டும் எவ்வாறு மதவெறியர்கள் ஆவார்கள்?

தமிழில்: டாக்டர் ஷ்யாமா  

3 comments:

  1. மதம் என்ற வார்த்தையே உணர்த்தவில்லையா... மனிதனுக்கு மதம் பிடிப்பது தான் மதம் என்று...

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை நண்பரே

    ReplyDelete