அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு
வணக்கம்.
நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது
செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில்
கோரியிருந்தேன்.
நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும்
எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தைச் செய்திருக்கிறீர்கள். கூடங்குளம்
அணு
உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று! அணுத் தொழில்நுட்பம் 100
சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார். நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு
உலைக்கு
எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு
சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய
பாதுகாப்பு சட்டம் பாயத்
தயாராக இருக்கிறது.
அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ
நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்திய வாதிகள்.
அதுதான் நமக்குள் அடிப்படை வித்தியாசம். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை
மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப்
பார்த்தால் இடம்
போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அதைவிட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஓர் அபத்தமான ஒப்பீடு
செய்திருக்கிறீர்கள்.
சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30
கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது
என்ற
நிலைமை கிடையாது. ஆனால் அணு விபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை
தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்புகளில்
இரண்டாயிரம்
பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல்
கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள்? 1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன.
(இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது
ஒவ்வோராண்டும்
ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கைச் சேத
நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள்.
எம்.ஐ.டி. என்ற உலகப்
புகழ் பெற்ற நிறுவனம் (நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. அல்ல)
2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும்
என்று முன்கூட்டியே
கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.
விபத்து மட்டுமல்ல. அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து
இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும்
மட்டும்தான்.
அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளைப் புற்று
நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே
கல்பாக்கத்தைச்
சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக்
கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை?இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய்
சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாமல் ரகசியமாக
அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம்,
அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும்
இருக்கும் வேறு
எந்தத் துறையும் இந்தியாவில் இல்லை. ஒரு விபத்து நடந்து அதுபற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல்
ஆர்வலர்கள் குரலெழுப்பிய பின்னர் ஒப்புக்கொள்வதுதான் அணுசக்தித் துறையின்
வாடிக்கை. இப்படி
கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக்
கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரி பொருள் நிரப்பும்போது ரியாக்டரின்
கோர் பகுதி சேதமடைந்தது.
1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42
ஊழியர்களுக்குக் கடும் கதிர்வீச்சு
ஏற்பட்டது. 2002 - கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்று
வெளிச்சூழலில் கலந்தது. 2003 - கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள்
உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரைத் தவறாக ஒரு
காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்கக் கலந்தார். அதிலேயே பெயிண்டர்கள் முகம்
கழுவினார்கள்.
கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக்
குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது
1994ல்,
கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120
டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு
நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான்.
அணுசக்தித் துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும்
இருக்கும் ‘நெருக்கமான உறவினால்’ டிஸைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல்
விட்டுவிட்டதால்
இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு
வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன்
சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த
வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம்
நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழுந்தது. இந்த உலை
கூடங்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த
இந்தியாவில்
எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும்?இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது
என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல
பேசுகிறீர்கள்.
யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில்
சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய
சுரங்கப்பகுதியைச் சுற்றியுள்ள
கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய், பிறவி ஊனம் எல்லாம் தேசிய
சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற உலக அமைப்பான
அணுப்போருக்கு
எதிரான மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு
தெரிவித்திருக்கிறது.ஒரு பிரச்னை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை
முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தித் துறையின் வழக்கம்.
நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில்
அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- “இந்தியாவில் சுனாமிகள் வருவதில்லை. எனவே
புயல்களை
மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுனாமி
கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுனாமியைக் கணக்கிட்டு
வடிவமைக்கப்பட்டதில்லை.
தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின்
முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல. மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச்
சொல்கிறீர்கள். கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம்
செய்திருக்கிறீர்களா?
இல்லையே? ஏன் இல்லை? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்லை. எனவே லஞ்சம்
கொடுக்கவில்லை, அல்லவா?
கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அன்னிய சக்திகள் இருப்பதாக
நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதார ஏகாதிபத்திய
சக்திகள் இந்தியா
முன்னேறவிடாமல் தடுக்க இப்படிச் செய்வதாகச் சொல்கிறீர்கள். அந்த சக்தி
யார்? அமெரிக்காதானே? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்பந்தத்தின்
நோக்கம் இந்தியாவை
முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் அணு உலைகளை வாங்க
இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது? அதில் எப்படி இந்தியா
முன்னேறும்?
விபத்து ஏற்பட்டால் நஷ்டஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது.
இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது? அதை நீங்கள்,
ஏன்
அய்யா அப்போது குடியரசுத் தலைவராக இருந்தும் எதிர்க்கவில்லை? ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக்காட்டினால், அதற்குக்
காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான
யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை
விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம்
யுரேனியத்தையும், அணு உலை
இயந்திரங்களையும் வெளி நாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு
ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும்? நம்மிடமே இருக்கிறதே?உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு
உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை
மொத்தமாக
அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும்
யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படும். நம்
அணுகுண்டு உலைகள்
கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையைச்
சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான
தூய்மையான
பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது
என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று
சொல்லி, நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள்.
ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து
மின்சாரம் பெறும்போது, இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும்
கோடானுகோடி
ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50
ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம்.
அவ்வளவு ஏன்? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை
சுமார்
72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும் போதே இழந்து கொண்டிருக்கிறோம்.
ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும்
7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பைக் குறைக்க விஞ்ஞானிகள் வேலை
செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும்.
கிராம
மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும்
10 மெகா வாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரி
சக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள்
புராவில் இடம் பெறுவதில்லை? ஏன் பிரம்மாண்ட மான ஆபத்தான கோடிக்கணக்கில்
விழுங்கும்
அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன? இந்த மாதம் 81-வது வயதில் நுழைந்து விட்டீர்கள். உங்கள் நூற்றாண்டு
வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10
சதவிகிதத்தைக் கூட பூர்த்தி
செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக்
கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.
கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு
இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது.
ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும்
கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும். மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான காயத்ரி
மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை
நினைவுபடுத்துகிறேன்:
செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.
அன்புடன்
ஞாநி
Is Gnani a scientist. Which modern development is 100% harmless. Even electricity cell phones Tv are harmful since they emit radiation.The question is why should this opposition rear its head only now? What prevented Idinthakarai people to oppose the acquisition of 3000 acres of land? What prevented them to oppose the construction.KKNP director says they had cordial relations till August. Where from these people got instruction to start agitation. What do they gain from it? What prevents them to move away if they think the power plant will explode? Has not people moved away when natural calamities occur?
ReplyDeletemr.jk22384 gnani is one of the people who was fighting against koodankulam power project from 1990. When one person is telling lies, there is no harm in telling the truth. What do you know about this opposition? What justice had indian government had done to Bhopal Gas victims? What justice had indian government done to Ms.Irom Sharmila who is fighting for 12 years? Where did Mr.Kalam went all these years, being a mute spectator to all the evil deeds done by the Indian Government? Will you abandon your house and move out in one day, not knowing where to go, what to do? Are you saying that agricultural people should leave the land and go away so that you can sit in the Airconditioned room and type nonsense.
ReplyDeleteSolar panels are hundred percent harmless
ReplyDeletewind energy hundred percent harmless
what more do you want?
All this agitation shold be started in the beginning itself.. Till the date they simply seen the progress and enjoyed the job oppertunities.. This is not the right time to think about shutting the project... Let Gnani starts campaign against using electrical goods, Power supply, mobile phones which are all the indirect cause for the project... Hope the agitators will follow Gnani's campaign and avoid using all modern world accessories... Let us live along with nature...
ReplyDeleteMr.Muththukkumar, as i had told previously it is a agitation which goes beyond 20 years. If you dont know first refer the facts and then claim. The hazard of electrical goods is not going to harm your future generation, perhaps you would shut up your mouth and go to any other foreign countries if kalpakkam facts comes tumbling out...
ReplyDelete@ I have also written about this in my blog. If time permits , please have a visit... You are welcome..
ReplyDeletehttp://naanoruindian.blogspot.com/2011/11/blog-post_09.html
really its not a right time to shutting down this project, Very early the starting stage of the project we have lot of times to such kind of Strikes .......... Now the Govt. spend lot of money in this project, If shutdown all the people affected for this.
ReplyDelete