Search This Blog

Wednesday, November 09, 2011

ராகுல் காந்திக்கு மனம் திறந்த கடிதம்

Open Letter to Rahul Gandhi    ஆங்கிலத்தில் – டாக்டர் ஹில்டா ராஜா


நீங்கள் இந்தியா முழுவதும் சுற்றுபயணம் செய்து வருகிறீர்கள். உங்களது நடவடிக்கைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் உரையாடல்கள் குறித்தும், சொற்பொழிவுகள் குறித்தும் சொல்லத் தவறியவை குறித்தும் விமர்சனக் கடிதங்கள் உங்களுக்கு வந்து கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன். உங்களையும் உங்கள் தாயாரையும் சுற்றியுள்ள சந்தர்ப்பவாதக் கும்பல் இவற்றை தணிக்கை செய்யாமலேயே உங்களிடம் தரும் என்று நம்புகிறேன். தணிக்கை செய்யப்படாமல் தந்தால் உங்களைப் பற்றியும் பிரதமராக விரும்புகின்ற உங்களது நினைப்பு குறித்தும் இந்தியர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.இந்தியா வளமான தேசம். ஆனால் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறது. நீங்கள் ஏழை இந்தியாவிற்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் அப்படிச் செய்யவில்லை, அப்படி பாவனையாக உள்ளது. வேண்டுமானால் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.


நீங்கள் தலித் குடிசைக்குள் நுழைந்து ஓரிண்டு சாப்பாத்திகளை சாப்பிடுகிறீர்கள். கிரிமினலோ அல்லது வேறு யாரோ ஓட்டுகின்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கிராமங்களில் பயணிக்கிறீர்கள். ஆனால் இந்த போலித்தனமான வித்தைகளால் இந்தியாவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. நீங்கள் உண்மையான இந்தியாவோடு செம்மையான தொடர்பு அற்றவராகத்தான் இருக்கிறீர்கள். உண்மையான இந்தியாவோடு உங்களது அம்மாவுக்கும் தொடர்பு கிடையாது. உங்களது தாத்தாவுக்கும் சரியான தொடர்பு கிடையாது.நீங்கள் நேரு காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். இது மட்டுமே பிரதமராவதற்கான தகுதி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தேசமும் அப்படி நினைத்துக் கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் உண்மை நிலைமை அப்படியில்லை. நீங்கள் பிரதமரானால் நன்மை ஏற்படுமா என்றால் இல்லை. பெரும் தீமைதான் விளையும்.உலகமயமாக்கல் குறிப்பிட்ட தரப்பினரை உள்ளே சேர்த்துக் கொள்கிறது. இது ஒருபுறம் இருக்க மற்றவர்களை வெளியே தள்ளிவிடுகிறது.(உங்கள் அறிக்கை-   இந்தியன் எக்ஸ்பிரஸ் 21ஆம் தேதி) இந்த கருத்துக்களுக்காக உங்களை குறை கூற முடியாது. ஏனெனில் இந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துக்கள் உங்களது சொந்தக் கருத்துக்கள் அல்ல. மற்றவர்கள் எழுதித் தந்ததை வாசிப்பவர்கள்தான் நீங்களும் உங்கள் தாயாரும். ஆனால் உங்களது பெயரில் வெளிவந்த கருத்துக்களுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்றாகவேண்டும். நீங்கள்தான் விளக்கம் தரவேண்டும்.நீங்கள் நகரமயமாக்களைப் பற்றி உலகமயமாக்களைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் தொழில்மயமாவதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறி விட்டீர்கள். நீங்கள் கார் பற்றியும் மாட்டுவண்டி பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள்.


பிரிட்டிஷார் இந்தியாவை தொழிற் துறையில் வளர்ச்சியடைய விடவில்லை. ஆனால் நகரமயமாக்களை பிரிட்டிஷார் ஊக்குவித்தார்கள். கிராமங்களில் உள்ள மக்கள் படிப்படியாக திவால் ஆனார்கள். அவர்கள் நகரங்களுக்கு குடி பெயர்ந்தார்கள்.சேரிகளில் வாழத் தொடங்கினார்கள். கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டன. சிறு நகரங்கள் வளர்ந்தன. அவற்றோடு சேர்ந்து சேரிகளும் பெருகின. கிராமங்களிலிருந்து வந்தவர்கள் சிறு நகரங்களிலும் பெரு நகரங்களிலும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்தார்கள். அவர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். பருத்திப் பொதிகளையும், சணல் பொதிகளையும் சுமந்தார்கள். ஆனால் தொழில் மயமாக்கம் என்பது பின் தங்கியே இருந்தது.சாலையில் நவீன கார்கள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில் மாட்டு வண்டிகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன. என்ன இந்த முரண்பாடு. அடுத்தபடியாக ஆங்கிலக் கல்வி முறை மிகவும் மோசமானது. அவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்திட ஆட்கள் தேவை. அதை மையமாக வைத்துத்தான் கல்விக் கொள்கையே வகுக்கப்பட்டது. நமது கச்சாப் பொருட்களைப் பயன்படுத்தி மற்ற நாடுகள் தொழில் துறையில் முன்னேறின. ஆனால் இந்தியா ஏழை நாடாக பின் தங்கிய நாடாகவே இருந்தது. நகரங்கள் நரகங்களாகத் தொடங்கின. உங்களது கட்சிதான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இதற்கு உங்களது கட்சிதான் காரணம். 


தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் உலகமயமாக்களை துரிதப்படுத்தியது. உங்களது உதாரணங்களை நான் மேற்கோள் காட்டுகிறேன். நம் நாட்டில் உற்பத்தியாகும் ரப்பர் இங்கு நேர்த்தி செய்யப்படவில்லை. இதற்காக ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டது. பெல்லாரியில் தோண்டியெடுக்கப்பட்ட தாதுப் பொருட்கள் கொரிய கப்பலின் வாயிலாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டன. இதுதான் நமது அரசியல் கலாச்சாரம். தொழில் நுட்பத்தில் நாம் முன்னேற அனுமதிக்கப்படவில்லை. அதற்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. நமது கச்சாப் பொருட்களைப் பயன்படுத்தி வெளிநாடுகள்தான் வளர்ச்சி அடைந்தன.ழை இந்தியாவைச் சேர்ந்தவன் என்று நீங்கள் கூறிக் கொள்கிறீர்கள். ஆனால் நீங்களும் உங்கள் தாயாரும் விமானாங்களில் பறக்கிறீர்கள். அரசு மருத்துவ மனைகள் போதுமான வசதிகளின்றி உள்ளன. நமது போக்குவரத்து வசதி பின் தங்கியே உள்ளது. நீங்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவர். கார்களில் செல்பவர்கள் ஒருபுறமும், மாட்டு வண்டியில் பயணிப்பவர்கள் ஒருபுறமும் இருப்பதற்கு நீங்களும் உங்கள் கட்சியும்தான் காரணம். குரலற்றவர்கள் அதிகாரமற்றவர்கள் சொத்தற்றவர்கள், பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏழைகளுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உலகமயமாக்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஏழைகள் பால் இரக்கம் உள்ளவராக பாவனை செய்து கொண்டிருக்கிறீர்கள். 


நீங்கள் நீதி குறித்தும் உரிமைகள் குறித்தும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதுதான் மையப் பொருளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் உங்களது பிரசங்க மனப்பான்மை, நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களது மனோபாவம் எப்படிப்பட்டது என்பதை துள்ளியமாக வெளிப்படுத்திவிட்டது. இந்த நாட்டு மக்கள் உலகமயமாக்களுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு நீதியும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளன. தேசிய ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ள உணவுக்கு உத்திரவாத சட்டம் தேவையில்லை.யாருடைய கருணையையும் எதிர்பார்த்து ஏழைகள் ஏங்கிக் கொண்டிருக்க வில்லை. இந்த நாட்டில் பரிவுக்கும் பொறுமைக்கும் பஞ்சமே இல்லை. இதனால்தான் மக்களிடையே சென்று நீங்கள் உபதேசம் செய்ய முடிகிறது. அவர்களை மடத்தனத்திலேயே மூழ்கடித்துக் கொண்டிருக்க முடிகிறது. எங்களுக்கு வேண்டியது நீதி, எங்களது உரிமைகள். இனியும் நீங்கள் இவ்வாறு உபதேசம் செய்ய முற்பட்டால் மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பொங்கி எழுவார்கள்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எது நல்லதோ அதுதானே உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் நல்லதாக இருக்க முடியும். இப்படி இருக்கையில் நீங்கள் ஏழைகளை மேலும் மேலும் அவமதிக்கிறீர்கள். நீங்களும் உங்கள் தாயாரும் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று விடுமுறைகளைக் கழிக்கிறீர்கள், பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள். இவற்றையெல்லாம் செய்துவிட்டு தலித் குடிசைக்குள் நுழைந்து சப்பாத்தி சாப்பிட்டு ஏழையைப் போல நடிக்கிறீர்கள்.உங்களுள்ளோ அல்லது உங்களது கட்சிக்கோ உண்மையான நீதி என்றால் என்னவென்று தெரியுமா? உங்களது கட்டுரை வெளிவந்த அதே நாளிதழில் காங்கிரஸ் தொகுதிகளில் என்னென்ன வசதிகள், குறிப்பாக சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற எம்.பி.களின் தொகுதிகளில் அந்த வசதிகள் ஏன் செய்யப்படவில்லை என்பது பற்றிய கட்டுரையும் வெளியிடப்பட்டிருந்தது. உங்களுக்கும் இங்கிலாந்திலிருந்து வந்து இந்த நாட்டை ஆக்கிரமித்தவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஏழை இந்தியர்களை கசக்கிப் பிழிந்தார்கள். நீங்களும் அதைத்தான் செய்கிறீர்கள்.உங்களது அமேதி தொகுதியில் 25 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வருண் காந்தியின் பிலிபிட் தொகுதியில் ஒரே ஒரு திட்டம்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. 1.8 கி.மீ. கிராம சாலை அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் உள்ள மக்களுக்கும் பிலிபிட் தொகுதியில் உள்ள மக்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் பிலிபிட் தொகுதியில் உள்ள தலித் குடிசைக்குள் நுழையாதது ஏன்? இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கும் உங்களிடமிருந்து நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும். உலகமயமாக்கள், நகரமயமாக்கள் என்றெல்லாம் நீங்கள் சொல்வது வெற்றுக் கூச்சல் தான்.


உங்களைப் போன்றவர்களும் காங்கிரஸ் போன்ற கட்சியும் ஆட்சியை நடத்தும் போது ஏழைகளுக்கு எப்படி விடியல் ஏற்படும். கார்கள் ஒருபுறம் பயணிக்க மாட்டு வண்டிகளும் அதே சாலையில் பயணித்துக் கொண்டுதான் இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் ஒவ்வொரு ஊழலாக வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இறக்கத்தைப் பற்றி பேசுகிறீர்கள். நீதியில்லாத இறக்கத்தால் எந்த பயனும் இல்லை. நீங்கள் ஏழைகளை பரம ஏழைகளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஏழைகளுக்கு உண்மையான அதிகாரத்தை அளிக்க நீங்கள் தாயாராக இல்லை. மாற்றம் சவால் விடும், நீதி மக்களுக்கு உண்மையிலேயே கிடைத்தால்.உங்களது உரிமைகளைப் போல மற்றவர்களின் உரிமைகளும் முக்கிய மானவைதான். இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. உங்களது வெற்றுப் பேச்சுகள் மக்களிடையே ஆத்திரத்தை ஊட்டக் கூடிய வகையில் உள்ளன. நீங்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். (திக்விஜய் சிங்கை வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருக்கச் சொல்லுங்கள். அவர் மௌனமாக இருந்தால் உங்களுக்கு வாக்குகள் கிடைக்கும். அவர் வாயைத் திறந்து உளறிக் கொட்டினால் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும்).உண்மையான சொத்து என்ன என்பதையும், உண்மையான அதிகாரம் என்ன என்பதையும் நீங்கள் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். தந்த கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு இறக்கம் குறித்து பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

தமிழில் – நிகரியவாதி 

No comments:

Post a Comment