Search This Blog

Thursday, January 26, 2012

அருள் மழை 16 & 17


அருள் மழை 16: 

ஈச்சங்குடி கணேசையர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய்  ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.

பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசையர்... ‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக்காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு கால்வாய் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சோல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.

அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது. (துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)"

- ஸ்ரீ மடம் பாலு


அருள் மழை 17:

குடும்பத்தில் சொத்துப் பிரிவினையில் தகராறு. பாகப் பிரிவினையில் உடன்பாடு ஏற்படாததால், வழக்கு நீதி மன்றத்துக்குப் போய் விட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர், தரிசனத்துக்கு வந்தார். "பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்கணும்" என்று குழைந்தார்.

பெரியவாள், "நான் ஜட்ஜ் இல்லையே, தீர்ப்பு சொல்றதுக்கு!"
என்றார்கள்.

"பெரியவா அனுக்ரஹம் பண்ணினால் போதும்..."

"சஞ்சயன் சொல்லியிருக்கார்.....
யத்ர யோகேஸ்வரக் கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: !

தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம !! பெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களைக் காப்பாற்றவில்லை.சொத்தில் மட்டும் பங்கு வேணும் இல்லையா?" என்று சற்றுக் கோபமாகிச் சொல்லி விட்டு,உள்ளே போய் விட்டார்கள் பெரியவாள். இரண்டு மாதங்கள் கழித்து நீதி மன்றத் தீர்ப்பு வந்தது. இவருக்கு விரோதமாக. பெரியவாள் ஜட்ஜ் இல்லைதான், ஆனால் அவர்கள் ஜஸ்டிஸ்- நீதிமான் ஆயிற்றே!..

No comments:

Post a Comment