ஜனவரி மாதத்தில் நடைபெறுகிற விழாக்களில் பெரும்பாலானவைப் புத்தாண்டை
வரவேற்பதாக அமைந்திருக்கின்றன. ஜனவரி மாதத்தில் எத்தனை விழாக்கள்
வந்தாலும்,
அதில் வித்தியாசமானது டிரம்ஸ் திருவிழாதான். ஆண்டுதோறும் ஜனவரி மாதம்
20-ம் தேதி, இந்த ‘டிரம்ஸ் திருவிழா’ ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகிறது.
ஸ்பெயின் மக்கள் இந்த மேளத் திருவிழாவுக்கு ‘டம்போர ராடா’ என்று பெயர்
வைத்துள்ளனர்.ஸ்பெயின் நாட்டிலுள்ள ‘சான் செபஸ்டியன்’ நகர மக்கள் இந்தத் திருவிழாவைக்
கொண்டாடி மகிழ்கின்றனர். புனித செபஸ்டியன் நினைவு நாளான ஜனவரி 20 அன்று
டிரம்ஸ் திருவிழா இணைந்துகொண்டு, ஸ்பெயின் மக்களைக் குதூகலிக்க வைக்கிறது.
சான் செபஸ்டியன் நகரின் மேயர் கொடியேற்றி வைக்க ‘டிரம்ஸ் திருவிழா’
தொடங்குகிறது.
பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் விழாக்கோலம்தான். மாநகர் முழுவதும்
விண்ணும் மண்ணும் அதிரும் ‘டிரம்ஸ்’ சத்தம்தான். நகரின் பல்வேறு
பகுதிகளிலும்
இந்த விழா தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். விழா எங்கு
தொடங்கினாலும் எங்கு தொடர்ந்து நடைபெற்றாலும், இறுதியாகச் சந்திக்கும் இடம்
‘கோன்ஸ்
டியூசியா பிளாசா’.ஒவ்வொரு விழாவின் தொடக்கத்துக்கும் பல காரணங்கள், கதைகள் உண்டு. 1813-ம்
ஆண்டு ஸ்பெயினில் முகாமிட்ட பன்னாட்டுப் படையினர், குறிப்பாக ராணுவ
வீரர்கள்
தங்களின் தேவைகளுக்காக, தினந்தோறும் சாலையில் அணிவகுத்து வருவர். பின்னர்,
இதைக் கிண்டலடிப்பது போல உள்ளூர் இளைஞர்களும் ஆடல், பாடலுடன் அணிவகுத்தனர்
என ஒரு கதை உள்ளது. அந்த நிகழ்வின்போதே ‘எருது ஓட்டம்’ கூட நடைபெற்றது.
பின்னர், சில குழுவினர் ‘பேரல்ஸ்’ எனப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களை
டிரம்ஸ்கள்
போலத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால், அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதை ஒன்று 1720-ம் ஆண்டிலிருந்து
தொடங்குகிறது. அந்நாளில் ஒரு ரொட்டித் தயாரிப்பாளர் நீரூற்றிலிருந்து
தண்ணீர் பிடித்துக்கொண்டு
வந்தார். அப்போது பாடல் பாடத் தொடங்கினார். அந்நேரத்தில் அங்கு குழுமிய
பெண்கள், தங்கள் கைகளில் இருந்த குடங்களால் தாளம் போட்டனர். இதுவே, இந்த
விழாவுக்கான
தொடக்கமாக இன்றளவும் நிலவுகிறது.நன்றாக வளர்ச்சியடைந்த டிரம்ஸ் திருவிழாவில் ஆண்கள் சமையல்காரர்கள்
போலவும், ராணுவ வீரர்கள் போலவும் வேடமணிந்து டிரம்ஸ் அடித்து விழாவைக்
கலக்குவார்கள்.
பிள்ளைகள் ஸ்பெயின், இங்கிலாந்து, ருமேனியா நாட்டு ராணுவ வீரர்களின்
சீருடையை அணிந்து டிரம்ஸ் அடித்து இரவையும் பகலையும் வெளுத்து
வாங்குவார்கள். 1861-ம் ஆண்டு இசையமைப்பாளர் ‘ராய்முன்டோ சாரிகுய்’ வெளியிட்ட ‘சான்
செபஸ்டின் நடைப்பயணம்’ என்ற இசைத்தட்டுக்குப் பின்னர், ஸ்பெயின் மக்கள்
டிரம்ஸ்
திருவிழாவில் டிரம்ஸை மேலும் பலமாகத் தட்டத் தொடங்கிவிட்டனர். ஆண்கள்
மட்டுமே டிரம்ஸ் அடித்து அமர்க்களம் செய்த விழாவில் பெண்களும் தலைக்காட்டத்
தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment