Search This Blog

Wednesday, January 18, 2012

ஃபேஸ்புக்,டிவிட்டரில் மூழ்கிக் கிடப்பது சரியா ?

திண்ணைப் பேச்சு, பேனா நட்பு வட்டம் போன்றவற்றின் லேட்டஸ்ட் வடிவம்தான், சமூக வலைதளங்கள். இளைஞர்கள் அவற்றைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், பொழுதுபோக்க மட்டுமல்ல... வர்த்தகம், படிப்பு, ஆலோசனை, மனப்பகிர்வு என பல விஷயங்களிலும் இந்த வலைதளங்கள் பெரும் உதவி செய்கின்றன.தற்போது மனநல மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படும் இளைய வயதினர் பலரையும் பார்க்கும்போது, 'இன்டர்நெட் அடிக்ஷன் சிண்ட்ரோம்' (Internet Addiction Syndrome) என்று புதிதாக பெயர் சூட்டுமளவுக்கு, மனநலம் சார்ந்த புதிய பிரச்னை உருவாகியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.நடைமுறை உலகம் புறக்கணிக்கும் போதுதான் இளைஞர்கள் வேறு போக்கிடம் தேடுவார்கள். அது உறவினர்களாகவோ, கல்லூரி நட்பு வட்டமாகவோ இருக்கும்போது பெரிய பிரச்னையைத் தந்துவிடாது. ஆனால், சமூக வலைதளங்களில் ஊர் கடந்து, கடல் கடந்து முகமறியா நபர்களிடம், அவர்களின் சுயரூபம் தெரியாது நட்பு பாராட்டுகிறேன் பேர்வழி என அலைபாயும்போது... நிறைய நிழல் நடவடிக்கைகளில் சிக்க வாய்ப்பாகிவிடும். அதிலும் போதிய முதிர்ச்சி இல்லாவிட்டால் சுலபத்தில் பல தீய சக்திகளுக்கு இவர்கள் இரையாவார்கள்.பொதுவாக, தனிமையில் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, அதேபோன்ற இன்னொரு நபரிடம் சாட்டிங் செய்பவர்கள், தங்கள் அந்தரங்கத்தின் புனிதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லைமீற அதிகம் வாய்ப்பிருக்கிறது. முகம் தெரியாத நபரை எளிதில் நம்பிவிடுவது, வார்த்தை ஜாலத்தில் விசாரிப்பவர்களிடம் எல்லாம் தன் புலம்பலைக் கொட்டுவது, தன்னை பலரும் கவனிக்கிறார்கள், அவர்களின் கவனிப்பும் ஆறுதலும் தொடர வேண்டும்... இப்படி பல உள் உந்துதல்களோடு மேலும் மேலும் அவர்கள் இந்த சமூக தளங்களில் கட்டுண்டு போகிறார்கள்.ஃபேஸ்புக்கை தனது பிரசாரத்துக்கான உத்தியாகப் பயன்படுத்தி அமெரிக்க அதிபராக உயர்ந்த பராக் ஒபாமாவே, ஒரு பொறுப்பான தந்தையாக தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு, இப்போதைக்கு ஃபேஸ்புக் தேவையில்லை என்று தடை செய்து, அதை வெளிப்படையாக  அறிவிக்கவும் செய்திருக்கிறார். தனது தேசத்து பெற்றோர்களுக்கும் இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். வளர்ந்த நாடுகளிலேயே இப்படி உஷாராகும்போது, நாம் இன்னும் உஷாராகவே இருக்க வேண்டும்.ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தினமும் 45 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் செலவிடுவது ஓ.கே... அதைத் தாண்டி பின்னிரவு வரை பொழுதுபோக்குவது, குடும்ப உறவு, நண்பர்களைத் தவிர்ப்பது போன்றவை கவலைக்குரியவை.
திருச்சியைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.ராஜாராம். 

2 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. அப்போ எல்லா பதிவுகளையும் வாசிப்பதும் ஒரு வகையில் தவறு என சொல்றீங்களா? அவ்வ்வ்வ்

    ReplyDelete