ஒரு வருடத்துக்கு
12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை
உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம்
என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்!'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்கிறது கீதை. இந்தத்
தத்துவத்துக்குள் இன்னொரு விஷயம் உள்ளார்ந்து கிடப்பதாகத் தோன்று கிறது.
அதாவது, 'கடமையைச் செய்தால், அதற்கான பலன் கிடைத்தே தீரும்!’ ஆனால்,
பலனில்லாத காரியங்களைச் செய்யாதீர்கள் என்றே சாஸ்திரங்கள்
அறிவுறுத்துகின்றன ('ந கிர்யாத நிஷ்பலம் கர்ம). உத்தராயன காலம் துவங்குகிற
இந்தத் தை மாதத்தைப் போற்றும் வகையில் சொல்லப் பட்ட வாசகம்... தை
பிறந்தால் வழி பிறக்கும்!உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை
தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர். நம் சநாதன தர்மத்தில், ஒவ்வொரு
காலமும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 'உத்தரம்’ என்றால்
'வடக்குத் திசை’ என்றும், 'பதில்’ என்றும் சம்ஸ்கிருதத்தில் அர்த்தங்கள்
சொல்லப்பட்டுள்ளன. நம் ஆன்மிகத் தேடல்களுக்கான விடைகளை உள்ளடக்கியிருப்
பதால் சம்ஸ்கிருதத்தை வடமொழி என்றும், நம் சந்தேகங்களை அனுபவத்தில்
உணர்ந்து தெளிவுபடுத்துகிற சிறந்த வழி என்பதால் உத்தராயனம் என்றும்
ரிஷிபெருமக்கள் பெயர் சூட்டியுள்ளார்களோ என்னவோ?!
சரி, தக்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயன காலம் துவங்குகிற சிறப்பைப்
பார்ப்போமா? தை மாதப் பிறப்பான (15.1.12) அன்றைய தினத்தை, உத்தராயன புண்ய
காலம் என்பார்கள். சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்
பெயர்வதால், அந்த நாளை 'மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்தப்
பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும்
அளிக்கும் ஸ்ரீசூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத்
திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது
மிகவும் விசேஷம்.
சூரியனை ஆராதித்துப் போற்றுகிற பொங்கல் திருநாள், இந்த வருடம் ஞாயிற்றுக் கிழமையன்று வருவது பெரும் பாக்கியம்.
ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம:
ஓம் பாஸ்கராய நம
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம:
ஓம் பாஸ்கராய நம
தை 23-ஆம் தேதி (6.2.12) நட்சத்திரத்தின்படியும், மறுநாள் 24-ஆம் தேதி (7.2.12) பௌர்ணமி திதியின் படியும் தைப்பூசத் திருநாள் உலகம் முழுவதும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில், ஆலயங்கள் பலவற்றிலும் உத்ஸவத் திருநாளின் நிறைவு நாளாகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். முருகக்கடவுளை வழிபட செல்வம், ஆழ்ந்த ஞானம், தேக ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, உத்தியோகத்தில் ஏற்றம், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்!தை 24-ஆம் தேதியான பௌர்ணமியில், அதி காலை 4.24 மணி முதல் 6 மணிக்குள் ஸ்நானம் செய்பவர்களுக்கு, மனக்குழப்பங்கள் யாவும் விலகும்; புத்தியில் தெளிவு ஏற்படும் என்பர்.ஒரு பெரிய வீடாக, மிகப் பிரமாண்டமான மாளிகையாக இருந்தாலும், அந்த வீட்டைப் பூட்டுவதற்கான சாவி சிறிதாகத்தான் இருக்கும். வீட்டுக்குத் தகுந்தபடி சாவி இருப்பதில்லை, அல்லவா? நம் இந்த பிரமாண்டமான வாழ்க்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, ஆனந்தமயமாக வாழ நம் முன்னோர்கள் செய்து கொடுத்திருக்கிற சாவிகள்தான் சடங்குகளும் சம்பிரதாயங்களும்!இதோ... இந்த தை மாதத்தில் இருந்து உரிய காலங்களில் வருகிற சடங்கு - சாங்கியங்களைச் செவ்வனே செய்வோம். 'தை பிறந்தால் வழி பிறக்கும்!’ என்பதை உணர்ந்து பூரிப்போம்!
விகடன்
பொங்கல் திருவிழா ஏதோ விழா என நினைத்துவிடாதீர்கள். அது உள்ளத்தையும், உடலையும் செம்மைப்படுத்தும் விழாவாகும்.
ReplyDeleteபொங்கலை நாமும் இனிதே கொண்டாடி ஆனந்தம் அடைவோம். ஆரோக்கியம் பெறுவோம்.
மிகப்பயனுள்ள அழகான பகிர்வுகள் பாராட்டுக்கள்..
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்..
ReplyDelete