Search This Blog

Sunday, January 08, 2012

மலரும் நினைவுகள் : பள்ளி படிப்பு மற்றும் டிப்ளோமா படிப்பு


பள்ளி படிப்பு எனக்கு சூப்பர் ஸ்பெஷல்.  விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த நான் சின்ன வயதில் நான் படித்த படிப்பை பார்த்து இது எல்லாம் எங்கே தேற  போகுது என்று அனைவரும் கூறுவதை கேட்டு வளர்ந்து உள்ளேன். என் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் எட்டாம் வகுப்பில் நடந்தது. என் முன் கோபம் மற்றும் தன் மானமே என்னை மீண்டும் விருதுநகர் என்கிற ஊருக்கே கொண்டு வந்து சேர்த்தது. முதல் முதலில் பள்ளிக்கு சென்றது எல்லாமே வித்தியாசமா இருந்தது. குறிப்பாக ஜெய கோபால் வாத்தி வகுப்பறையில் எல்லோருமே தூங்கவது என. ஆனால், காதலுக்கு மரியாதையை என ஒரு படம் வந்து, அதன் மீது காதல் கொண்டு தான் படிப்பையை தொலைத்த என் பெஞ்ச் நண்பன் சுரேஷ் என்ன ஆனான் என்பது இன்னும் புரிபடல.. ஒன்பதாம் வகுப்பில் அடக்கி வாசித்த நான் பத்தாம் வகுப்பில் நக்கல், நையாண்டி என சந்தோசமா சென்றது. அநேகமா நான் படித்தது X B நினைக்குறேன். படிப்பு  மேலே மெல்ல கண்டிப்பான காதல் கொண்ட வருடம். அதற்கு காரணம் என் வகுப்பு ஆசிரியரும் தாத்தாவும் ஆகிய பழனிசாமி தான். அன்று அவரிடம் நான் படித்து இருக்கா விட்டால் சத்தியமா இந்த ராஜா இப்போ இருப்பது போல் இல்லாமல்  எங்கள் ஊருக்கே பிரபலமான எதாவது வியாபாரம் செய்து கொண்டு இருந்து இருப்பேன்.


கடைசி பெஞ்சு தான் நம் இருப்பிடம். பொழுது போகல என்றால் படுத்து தூங்குவது, விளையாடுவது என சந்தோசமா இருந்த வருடம். இப்போ இருப்பது போல் அப்போவும் எந்த குறிக்கோள்  எதுவும் இல்லாமல் தான் இருந்தோம். கண்ணன் , ராஜமாணிக்கம், தாத்தா, அப்புறம் சமுக அறிவியல் வாத்தி பெயர் தெரில ( கடந்த வருடம் மதுரையில் பார்த்தேன், இப்போ சாத்தூர்ல வேலை பாக்குறாரு ). எப்போ பார்த்தாலும் சிரிப்பு தான். அதுவும் நாங்கள் சித தவறுக்கு பாஸ்கர், அசன் மற்றும் புல் என்ற செந்தில் அடி வாங்கியதை இப்போ நினைத்தாலும் சிரிப்பா வருது. கடைசி வருசையில் ரொம்ப ஆடியதால் முன் பெஞ்சுக்கு மாற்றல் வாங்கினேன். அது ஆனந்த் மற்றும்  சிவாவுடன் நினைக்குறேன். கொடுமை, முன்பு போல் இல்லாமல் இப்போ டபுள் என்ஜாய்மென்ட். நாங்க அடிச்சா லூட்டி தங்க முடியாமல்,  மூணு பெரும் எப்போ 400 மார்க் மாத பரிட்சையில் எடுபீர்களோ அப்போ தான் மேஜையில் ஏறி உட்கார வேண்டும் என கண்டிப்புக்கு ஆட்படுத்த பட்டோம். அதும் தரையில் சேர்ந்து உட்கார விடாமல் தனி தனியாக உட்கார்ந்து முயற்சி செய்து 360 கூட தண்ட முடியவில்லை. தாத்தா வகுப்பில் மட்டுமே தரையில் உட்காருவோம். மற்ற வகுப்புகளில் பெஞ்சு தான். எங்கள் வகுப்பில் அனைவரும் நன்றாக படிக்கச் வேண்டும் என எவ்வளோவோ முயற்சி செய்தார். அதன் பலன் பரீட்சைக்கு பிறகு தான் தெரிந்தது. X B வாழ்ந்த சொர்க்கம்.  ஒரு சில நபர்களை தவிர அனைத்து நபர்களின் பெயர்களை நினைவில் வர வைக்க முடியவில்லை. கால ஓட்டம் தான் பதில் சொல்ல வேண்டும்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கிட்ட தட்ட ஏழு மாதம் சும்மா தான் இருந்தேன். ஸ்கூல் பிடிக்கவில்லை.  வேற எங்கயும் சேர்க்க முடியாது.இவர்கள் பண்ணுன தொல்லையில் பேசாம diploma படித்து வேலைக்கு போகலாம் என முடிவு செய்தேன். எண்ணை கடையில் மற்றும் வொர்க் ஷாப் என என் விடுமுறை கழிந்தது.  எதிர்பார்த்ததை விடவும் அதிகமா   மதிப்பெண் வந்தது. ஏனோ, வண்டியில் மேல் உள்ள காதலால் automobile துறை சேரலாம் என முடிவு செய்தேன். அது பொள்ளாச்சில மட்டும் இருந்ததால் விருதுநகரில் படிக்க முடிவு செய்தேன்.இந்த மதிப்பெண்ணுக்கு எங்கள் கல்லூரியில்  கணிப்பொறியியல் கிடைக்க வாய்ப்புள்ளது! என்றார்கள். ஆனால் மனம் அதுவில் செல்லவில்லை . மாமா சுந்தரின்  வழி காட்டுதலோடு எதோ புதுசா பிளாஸ்டிக் தொழில் நுட்பம் ஒன்னு எடுத்தேன். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளின் பட்டியலில் இருக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவரும் என்னுடன் சேர்த்தார்கள் . ஏன் என்றால்  பெரிதாக நகரங்கள் ஏதும் இல்லாததால் பெரிதாக வாழ்க்கை முறையில் மாற்றம் ஏதும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பகுதி. முதலாம் ஆண்டில் ஒரு வகுப்புக்கு குறைந்த பட்சம் நூறு நபர்கள். அங்கேயும் B section தான். முயற்சி பண்ணி எண்ணி பார்கிறேன் எதுவும் நியாபகம் வர வில்லை. ஆனால், மணி, ராஜா பாண்டி, முத்து, ராஜா செல்வம், பால் எல்லாம் ஒரே வகுப்பு என்று நினைக்குறேன். இந்த +2 படித்த மாணவர்கள் எல்லா பாடத்திலும் நல்லா மார்க் எடுத்து சீன் போடுவாங்க. திரவிய ராஜன், ராமகிருஷ்ணன், காமராஜ், சந்திர மோகன், இவர்கள் எல்லாம் வகுப்பு எடுத்த நியாபகம். இங்க வாங்குன ஒரு ஆப்பு நினைத்து பார்த்தால் செம சிரிப்பு. நான், சிவா , ஆனந்து, ராஜபாண்டி, கார்த்தி, கோபி, மணி எல்லாம் ஒன்றாக சாப்பிட்டு, மரத்தடியில் ஒரு தூக்கத்தை போட்டு தான் வகுப்புக்கு செல்வோம். அப்போ சிவா CIVIL துறை தலைவரை பார்த்து பஞ்சு மிட்டாய் என கேலி செய்து என்குயரி அட்டென்ட் பண்ணோம். இதில் பலி ஆடு சிவா மற்றும் ராஜா பாண்டி :(


எதோ கடனுக்குனு படித்து இரண்டாம் வகுப்பில் எங்கள் துறைக்கு போனோம். மொத்தம் 28 நபர்கள். சரி பதியா  விடுதி மாணவர்கள். பகுதிவாரியாக எல்லோரும் கூட்டணி சேர்ந்தார்கள். நிறையப் பேருக்கு அவர்கள் ஊர்க்காரர்களே - ஏற்கனவே தெரிந்தவர்களே நிறைய இருந்தார்கள். விருதுநகரில்  நான் படித்த அதே பள்ளியில்  படித்த சில நபர்கள் இருந்தர்கள் . விருதுநகர் நண்பர்களிடம்  நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததால் மொத்தக் குழுவோடும் சேர்ந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்ல கூடாது அந்த துறையில் இருக்கும் வாத்தியார் & கோ.. நெறைய அறிவு, பேச்சு, கொஞ்சம் திமிர் என எல்லாம் சேர்ந்த கலவை. நாங்கள் வாய்த்த பெயர் ஜுராசிக் பார்க் department . உள்ளே போனால் சும்மா பிடிச்சு ஓட்டுவதே அவர்களின் வேலை. இதுல மகேந்திரன் பற்றி குறிப்பிட வேண்டும். தேவை இல்லாமல் டென்ஷன் பார்ட்டி. அப்புறம் ஷங்கர் கிளாஸ் சுவர் ஏறி குதிச்சி வகுப்பை கட் அடித்து நான் சென்றதை , அதை அந்த ஆள் எங்க department நபர்களிடம் சொல்லி, சின்ன புள்ள தனமா நடந்தது எல்லாம் இன்றும் நினைவில் உள்ளது.  ஜெயவேல், முருகன் , சரவணன், சரவணா குமார், லிங்கராஜ், அரங்கதுரை இவர்கள் தான் வாத்தி. யாரும் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை அறிவில். அதுவும் ஜெயவேல் சார் திருக்குறளை சொல்லி திட்டுவது ரொம்ப பிடிக்கும். முருகன் சார் அந்த காலத்திலே IIT யில் முதுநிலை பட்டம் பெற்றவர்.  பொறுமைசாலி. சரவணன் சார் மாத்ரி பேச முடியாது. மனுஷன் எதை பத்தி பேச சொன்னாலும் பேசுவார். எந்த ஒரு செயலையும் பிளான் பண்ணி பண்ணுவார். அரங்கதுரை ரொம்ப கஷ்ட பட்டு பாடம் சொல்லி கொடுப்பார். சார் ஸ்ட்ரிக்ட் கூட :) ஜாலி man லிங்கு சார்.  யாரும் போட்டி போட்டு படிக்க மாட்டோம். என்ன தோணுதோ அதை செய்வோம். யோசித்ததை சொல்லி, அதற்கு வடிவம் கொடுத்தோம். இதில் என் முன் கோபத்தினால் நான் தொலைத்த நட்பு பால் துரை . கிட்ட தட்ட எட்டு வருசமா பேச கூட இல்லை. ஒன்னா சேர்ந்து தான் வருவோம், போவோம், படம் பார்போம். ஆனால், இன்னைக்கு நான் என்ன பண்ணுறேன்னு அவனுக்கு தெரியாது அவன் என்ன செய்றான் என்று எனக்கு  தெரியாது..
 
இன்று அனைத்து நண்பர்களிடத்தில் தொடர்பில் இல்லாமல் இருந்தாலும் சில நபர்களை நினைவில் நினைத்து பார்க்க வைத்து கொள்ள உதவியது இந்த கட்டுரை. 

அன்புடன் 

ராஜா 


1 comment: