Search This Blog

Tuesday, January 31, 2012

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனம்


முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறார் மதுரை மாணவர் சண்முகப் பிரியன்.எலக்ட்ரிக் பைக்கோட ரீ மாடல்தான் இது. மொத்தம் 5 சோலார் பேனல் இதுல இணைக்கப்பட்டிருக்கு. இந்தப் பேனல்தான் டூவீலர் இயங்கத் தேவையான ஆற்றலைக் கிரகித்துக் கொடுக்கிறது. வண்டியில் ஃபிட் பண்ணியிருக்கிற பேட்டரி தேவையான ஆற்றலைச் சேமித்து வைத்துக் கொள்ளும். வண்டி ஓட... ஓட... சோலார் பேனல் மூலம் பேட்டரி சார்ஜாகிக் கொண்டே இருக்கும்.காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரைக்கும் முழுத்திறனோட பேனல்ஸ் சார்ஜ் பண்ணும். இதற்குப் பிறகு பேனல்ஸ் வொர்க் பண்ணாது. ஃபுல்லா சார்ஜ் ஆகியிருக்கிற பேட்டரியை வைத்துக்கொண்டு இரவில் 70 கி.மீ. வரைக்கும் சவாரி செய்யலாம்."

மல்ட்டி சோலார் டூவீலர்?


யெஸ்! இந்த டூவீலர்லயே இன்டக்ஷன் ஸ்டவ் ஒண்ணும் செட் பண்ணியிருக்கேன். வெளியில போனா, நாமே சமைச்சுச் சாப்பிடலாம். வழக்கமா, நம்ம வீட்டுல இருக்கிற இன்டக்ஷன் ஸ்டவ் 2000 வாட்ஸ் மின்சாரத்தை இழுக்கக் கூடியது. என்னதான் மட்டன் சமைக்க 600 வாட்ஸ்ன்னு அட்ஜஸ்ட் பண்ணாலும் அதுல 2000 வாட்ஸ் கரண்ட் போயிட்டே இருக்கும். இந்த இன்டக்ஷன் ஸ்டவ்ல சின்ன அளவுல ஆல்ட்டர் பண்ணியிருக்கேன். ஆனால், பெரிய லாபம். வெறும் 300 வாட்ஸில் நம்ம இன்டக்ஷன் ஸ்டவ் வொர்க் பண்ணும். தேவைப்பட்டா இந்த இன்டக்ஷன் ஸ்டவ்வைக் கழற்றி எடுத்துட்டு வந்து உங்க வீட்டு கிச்சன்ல மாட்டிக்கலாம். இப்பவும் 300 வாட்ஸ் கரண்ட்ல வொர்க் ஆகும். ஃபைனலா இதுல ஒரு ஸ்மார்ட் டச் ஒண்ணு இருக்குது. அதான் டி.வி.டி. பிளேயர். கூலா பாட்டுக் கேட்டுட்டே ரைடு பண்ணலாம்," என்கிறார் சண்முகப் பிரியன். 

விஸ்வரூப விஷ்ணுராம்


சிறிய கஷ்டம் வந்தால்கூட நம்மில் பல பேர் சோர்ந்து துவண்டு விடுவோம். ஆதரவாக சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்காதா என்று ஏங்குவோம். ஆனால், காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவன் இந்தக் குறைகளைச் சொல்லி அழுது கொண்டிருக்காமல், தேசிய அளவில் சாதனை புரிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணுராம் தான் அந்த சாதனை மாணவன்.அம்மா வாய் பேச முடியாதவர். மூளை நோயால் பாதிக்கப்பட்டவர். அப்பா கூலித் தொழிலாளி. சாதிப்பதற்கான முகாந்திரமே இல்லாமல் முடங்கிக் கிடந்த விஷ்ணுராம், அப்பாவின் தீவிர பயிற்சியினாலும் இடைவிடாத ஊக்கத்தினாலும் கூடைப்பந்து வீரராக உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்ட விஷ்ணுராம், இந்த விளையாட்டுத் துறையின் சிறந்த ஆட்டக்காரருக்கான (மேன் ஆப் தி சீரீஸ்) விருது பெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.தமது சாதனை குறித்து விஷ்ணுராம் சைகையிலேயே நம்மிடம் பேசினார்.அம்மா அப்பாவின் ஊக்கம் தான் என்னுடைய இந்த சாதனைக்குக் காரணம். நான் ஒருபோதும் மாற்றுத் திறனாளி மாணவன் என்று சிந்தித்தது இல்லை. இது என்னுடைய சாதனையின் தொடக்கம்தான். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்து, என் பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பேன்," பெற்றோரைக் கட்டிக் கொள்கிறார் விஷ்ணு ராம்.விஷ்ணுராமிடமிருந்து நாம் இன்னும் நிறைய விளங்கிக் கொள்ள வேண்டும்.

- ஆதலையூர் சூரியகுமார்  

No comments:

Post a Comment