திரு பிச்சாண்டி I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி
காஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள் நடப்பதுண்டு திரு எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது அவருடைய நேர்முக உதவியாளராக திரு பிச்சாண்டி இருந்தார் .
முதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை . திரு எம் ஜி ஆருக்கு ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் "இதயம் பேசுகிறது " திரு மணியன் அவர்கள் . முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் , திரு மணியன் அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .
ஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிட்டபட்டது மகானுக்கு சற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதி அளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .
மகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்.
செயலாளர் பிசாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால் நின்றிருந்தார் , இதை கவனித முதல்வர் அவரை சைகை கட்டி அருகே வருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர் அழைத்ததால்தான் செல்கின்றேன் என்று கூறி முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .
மகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள் பி ஏ வா என்று கேட்க , முதல்வர் ஆமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன் வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார்
பிறகு முதல்வர் மகானை பார்த்து "உங்கள் தேகம் எப்படி இருக்கிறது?"
என்று கேட்டார் .
"தேகம்" என்று அவர் கேட்டது , "தேசம்" என்று மகான் செவிகளில் ஒலிக்க
தேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்
முதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்
"தங்களது தேகம் எப்படி இருக்கின்றது" என்று முதல்வர் கேட்கிறார் .
அதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாக புன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல மருந்தே சாபிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான் சொல்லணும் என்றார்.
உடனே முதல்வர்......... சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்? மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம் பேசவில்லை .
"எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்" என்றார் "சொல்லுங்கள் செய்கிறேன் " முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார் .
"முதல் விஷயம் - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறது இல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பாடு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார் .
இரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கு அதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்".
"செய்துவிடுகிறேன் "
மூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்
முதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்தவண்ணம் இருக்கிறார்
"நாகசாமியை மன்னிச்சுருங்கோ " என்கிறார் ,
(நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாகவேண்டும்) .
பழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை , நேரடியாக பத்திரிக்கைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார் . பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொல்வார் .
முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்ணம் . அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் , இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் , அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும் இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித மகான் பேசினார் .
" நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்ளவோ விஷயங்களை நாட்டுக்காக தெயர்யப்படுதி இருக்கார் , அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய் இருக்கும்........ "மன்னித்து விடுகின்றேன் " என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார் .
No comments:
Post a Comment