அமெரிக்க கோடீஸ்வரராக இருந்த ஹென்றி ஃபோர்டைப் பார்ப்பதற்கு ஓர் இளைஞர் வந்தார்.
“சார், உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதே எப்படி?” என்று கேட்டார் இளைஞர்.
“முயற்சி செய்தால் நீ கூட சம்பாதித்து விடலாம்!” என்றார் ஹென்றி ஃபோர்ட்.
“என்னிடம் தொழில் தொடங்க அவ்வளவு பணம் இல்லை. ஒன்றும் இல்லாமல் எப்படிச் சம்பாதிக்க முடியும் என்று கவலையாக இருக்கிறேன்.”
“என்னிடம் இல்லாத மதிப்புமிக்க ஒரு விஷயம் உன்னிடம் இருக்கிறது. அதன் மூலம் எதையும் சாதிக்கலாம்!”
“அப்படி எதுவும் என்னிடம் இல்லையே?”
“இளமை என்ற ஒப்பற்ற விஷயம் இருக்கிறதே! நான்
சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை விட உன்னால் பல மடங்கு இளமையை வைத்து சம்பாதிக்க இயலும். அந்த இளமையை எனக்குக் கொடுக்கிறாயா? என்
சொத்தை எழுதித் தருகிறேன்” என்று கேட்டார் ஹென்றி ஃபோர்ட்.
இளைஞர் நம்பிக்கையுடன் கிளம்பினார்.
தன்னம்பிக்கையை விதைக்கும்
ReplyDeleteதன்னம்பிக்கை மிதக்கும் வரிகள்.வாழ்த்துகள்
ReplyDeleteஇளமையை மறந்து, தனது சக்தியை தவறாக செலவழிக்கும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்
ReplyDelete