Search This Blog

Sunday, January 30, 2011

டிஜிட்டல் கேமரா


இப்போதெல்லாம் கேமராவில் போட்டோ எடுப்பதென்றால் அவ்வளவு எளிதான விஷயமாகிவிட்டது. காரணம் டிஜிட்டல் கேமராக்களின் வருகைதான். எதைப் பற்றியும் கவலைப் படாமல் க்ளிக் செய்துவிடலாம்! அதேசமயம் பட மெடுப்பது எளிதாக ஆகிவிட்டாலும், கேமரா வாங்குவது என்பது அதற்கு நேர்மாறாக கடினமான விஷயமாகிவிட்டது! டெக்னிக்கல் விஷயங்களை நன்றாகத் தெரிந்துகொண்டால்தான் நமக்கு ஏற்ற நல்ல கேமராவை தேர்ந்தெடுக்க முடியும்!


கேமராவைப் பொறுத்தவரை பொழுதுபோக்குக்காக வாங்குகிறீர்களா அல்லது புரஃபஷனலுக்காக வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். மெகாபிக்சல், ஆப்டிக்கல் ஸ¨ம், லென்ஸ் பவர், ஸ¨ம் லென்ஸ் கெப்பாஸிட்டி, எல்.சி.டி. அளவு போன்றவற்றை உங்களின் தேவையைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளவும். பொழுதுபோக்குக்கான உபயோகத்துக்கு எனில் லென்ஸ் 18-55 எம்.எம், 8-14 மெகாபிக்சலும், புரஃபஷனல் எனில் 18-135 எம்.எம், 12-21 மெகாபிக்சலும்,  கொண்ட கேமராக்களை தேர்வு செய்யவும். முன்பு சி.சி.டி. டெக்னாலஜி கொண்ட டிஜிட்டல் கேமராக்கள் இருந்தது. தற்போது சீமாஸ் சென்ஸார் என்ற டெக்னாலஜி வந்துள்ளது. இது படம் எடுக்கும்போது குறைவான வெளிச்சம் இருந்தாலும் அதனை சரிசெய்து நல்ல படமாக தெளிவுடன் கொடுக்கும். எல்.சி.டி. அளவைப் பொறுத்து பேட்டரியின் செலவு இருக்கும். எல்.சி.டி. அளவு பெரிதாக இருந்தால் பேட்டரி செலவு அதிகமாகும். அளவு குறைய குறைய பேட்டரி குறைவாக செலவாகும். இதற்கு அடுத்து முக்கியமாக பார்க்க வேண்டியது பிராண்ட். 



நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட், லித்தியம் அயர்ன் பேட்டரி என கிடைக்கும் வகைகளில் உங்களின் தேவையைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளவும். இதில் நிக்கல் மெட்டல் பேட்டரி சாதாரண கெப்பாஸிட்டி கொண்டது. இது ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் பேட்டரி. லித்தியம் பேட்டரி அதிக கெப்பாஸிட்டி கொண்டது. இது பார்ப்பதற்கு செல்போன் பேட்டரி போன்று இருக்கும். சார்ஜர்களை பொறுத்தவரை சான்யோ, சோனி, யூனிராஸ் போன்ற பிராண்டட் சார்ஜர்கள் வாங்குவது நல்லது.


ஒரு மாதத்திற்கு ஒரு முறை சூரிய வெளிச்சத்தில் அரை மணி நேரம் வைக்கவேண்டும். அப்படி வைக்கும்போது லென்ஸ் ஃபங்கஸ் ஆகாமல் இருக்கும். மேலும் பேட்டரியை சார்ஜரில் போட்டால் சார்ஜ் ஏறியவுடன் அதிலிருந்து எடுத்து விடவும். கேமரா உபயோகத்தில் இல்லாத நேரத்தில் பேட்டரியை கேமராவிலிருந்து எடுத்துவிடவும். டிஜிட்டல் கேமராவின் எதிரி தூசி தான். கேமராவின் லென்ஸில் தூசி போய் படிந்து படம் எடுக்கும்போது கரும்புள்ளிகளாக வரும். உடனே தூசியை கையினால் துடைத்துவிடாமல் கம்பெனியில் கொடுக்கவும். அவர்கள் சர்வீஸ் செய்து தருவார்கள். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் துடைத்துவிடாதீர்கள்.

      

1 comment: