Search This Blog

Tuesday, January 18, 2011

பொங்கல் நினைவுகள் - IIT கான்பூர்...

கடந்த சனிகிழமை நாங்களும் இங்கே ( கான்பூரில் ) பொங்கல் கொண்டாடினோம். என்ன ஊரில் இருந்தா வீட்ல அம்மா/ பாட்டி  பொங்கல் செய்வாங்க, ஒரு உதவி கூட பண்ணாம சும்மா டிவி பாத்துட்டு சினிமாக்கு போயிட்டு நல்லா சாப்பிட்டு படுத்து தூங்க வேண்டியது தான். இங்கே சீக்கிரமா நாலு மணிக்கு  எழுந்தாலும் வலைப்பூவில்  ஒரு போஸ்ட் போட்டு, பேப்பர் படிச்சிட்டு மணி பார்த்தால் ஐந்து.

சரின்னு குளிச்சிட்டு சாமி கும்பிட்டு பார்த்தால்  மணி ஆறு. நண்பர்கள் அனைவரும் காலை ஐந்து  மணிக்கே சமைக்க தயார் ஆகி விட்டார்கள் . நான் வழக்கம் போல் லேட் தான். போய் என்னால் முடிந்த  மிக சிறு உதவியை செய்தேன் .





எப்பவுமே நாங்கள் சீக்கிரமாக பொங்கல் வைத்து விடுவோம். ஆனால், இந்த வருடம் கொஞ்சம் லேட். எப்பொழுதும் தொல்லை கொடுக்கும் இயற்கை கூட இந்த வருடம் கொஞ்சம் அமைதியாத்தான் இருந்தது .


சாம்பார் , சட்டினி  மற்றும் வடை அண்ணன் வெங்கட் பொறுப்பில்.. அவருக்கு சமையல் கை வந்த கலை. அவருக்கு இது  தான் கடைசி பொங்கல் கான்பூரில் ..


 ஒரு வழியா எல்லாம் தயார் பண்ணி ஒன்பது மணிக்கு பூஜை செய்துஅப்புறம் பொங்கல் சாபிட்டோம். சுப்பு தான் இந்த வருடம் பூஜை செய்தார். அண்ணன் மனோ எங்கேநு தெரில. அடிக்குற குளிர்ல  மட்டை ..!!!!!!

இந்த விழாவை தலைமை  தாங்கி நடத்தியர் சிவா. அவருக்கு உதவி செய்தவர்கள்  அண்ணன் பாக்யா, பிரேம், சுப்பு.. தேவையான பொருட்களை வாங்கியவர்கள் கிரி அண்ணா, கண்ணன் சார் , பழனி மற்றும் ஜெய சந்திரன்.. சமையல் சேது சார்.. அவர் தான் சென்ற வருடமும் பொங்கல் பண்ணினார்.. 


எல்லாம் முடிச்சிட்டு இரவு கண்ணன் ஜி வீட்டில் சாப்பிட்டு ரூம்க்கு வந்தோம்.. என்ன நெருடல் என்றால் முருகேசன் மற்றும் ராஜன் ஜி இல்லை.. அவர்கள் என்னை நினைத்தார்களா என்று தெரிய வில்லை.. ஆனால் உங்கள் இருவரையும் நான் நினைத்தேன் ...


2 comments:

  1. Nice buddy.. Nee uthavi seyyama summa nikkurathey avangalukku periya uthaviya irunthirukum :p

    ReplyDelete
  2. கான்பூரா எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஊராச்சே. விஜயநகர்,கோவிந்த் நகர், கிதுவை நகர், கல்யாண்பூர்,ராவத்பூர் -னு நம்ம சுத்தாத இல்லை. போன மாதம் கூட ஒரு கல்யாணத்திற்க்கு வந்திருந்தேன் அதைப்பற்றி ஒரு பதிவும் போட்டிருந்தேன்.நன்றி.

    ReplyDelete