Search This Blog

Friday, July 08, 2011

தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி?

வீரர்கள் மலையேற்றத்தின் போது முன்பக்கம் வளைந்தவாறு ஏறுவதும் இறங்குகையில் பின் பக்கம் சாய்ந்தவாறு இறங்குவதும் ஏன்?




நாம் நேராக நிற்கையில் (நிமிர்ந்து) புவி ஈர்ப்பு மையம் நமது இரு கால்களுக்கிடையே அமைந்து சரியான சமநிலையில் நிற்க முடிகிறது. சமதளத் தரையின் மீது நடக்கத் தொடங்கும்போது, புவி ஈர்ப்பு மையமும் நடக்கும் திசை நோக்கி நகர்கிறது. இருப்பினும் அதன் சமநிலையில் மாற்றம் ஏதும் உண்டாவதில்லை. ஆனால், மலையேறும்போது புவி ஈர்ப்பு மையம் முன்னோக்கி இடம்பெயர்வதுடன் அதன் சமநிலையிலும் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இதனைச் சமன்செய்யும் பொருட்டு உடலை முன்னே சாய்த்து மலையின் மீது ஏறுகின்றனர். இதேபோன்று மலை மேலிருந்து கீழே இறங்கும்போது புவி ஈர்ப்பு மையமும் பின்பக்கம் இடம்பெயர்கிறது. சமநிலையிலும் வேறுபாடு நிகழ்கிறது. சரியான சமநிலைக்குக் கொணரும் பொருட்டு, பின்னோக்கிச் சாய்ந்தவாறு கீழிறங்கி வரவேண்டியுள்ளது.


தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி?


தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டுதான் தீயணைப்பு வீரர்களின் உடை தயாரிக்கப்படுகிறது.இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சுக் கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம், ‘தீ’ எதிரொளிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவிதத் தடுப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது.தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து இணி2 அதிகரிப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் தயாரிக்கப்படுகிறது.

மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?


ஆங்கிலத்தில் ‘ஹெயில் ஸ்டோன்ஸ்’ என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது. பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம்.

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஓசை பாலத்தைக் கடக்கும்போது மாறுபடுவது ஏன்?


ஒரு ரயில் அதன் பாதையில் செல்லும்போது மூன்று காரணங்களால் ஓசை உண்டாகிறது. முதலாவது தண்டவாளத்துக்கும் ரயிலின் சக்கரத்துக்கும் உள்ள உராய்வு. இரண்டாவது இரண்டு தண்டவாளத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் சக்கரத்தினால் ஏற்படும் விளைவு.தண்டவாளத்தில் உள்ள ஸ்வீப்பர் கட்டைகள் ஜல்லிக் கற்களின் மீது நன்கு பதிக்கப்பட்டிருப்பதால் அதன் அதிர்வுகள் குறைகின்றன. அதன் ஓசையும் பூமியினுள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன.ஆனால் பாலத்தின் மீது ரயில் செல்லும்போது இந்த ஸ்வீப்பர் கட்டைகளும் அதைத் தாங்குகிற தூண்களும் பூமியின் மீது பதிக்கப்படாததால் அதன் அதிர்வுகள் அதிகமாகி ஓசையும் அதிகரிக்கிறது. உள்ளீடற்ற தன்மையாலும் அதிர்வு ஓசை தரையிலும் நீரிலும் எதிரொலிக் கப்படுவதாலும் ஓசை இன்னும் அதிகரிக்கிறது.   

No comments:

Post a Comment