நான் கான்பூர் வந்து நான்கு வருடம் முடிகிறது . இந்த நான்கு வருடங்களில்
நான் மூன்றே மூன்று வட இந்தியா ஆன்மீக மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று
வந்து உள்ளேன். அவை, அயோத்யா,
நைமிசாரண்யம் மற்றும் ஆக்ரா.. சில இடங்களுக்கு நான் போகும் படி பிளான்
பண்ணினால் எதில் என் வாத்தி மண்ணை அள்ளி போட்டு விடுவார். சரி இந்த கோடை
விடுமுறைக்கு ஊருக்கு செல்லாமல் ( குறைந்த பட்சம் பத்து நாட்கள் ) இங்கே
இருந்து ஒழுக்கமா என் ஆராய்ச்சி வேலையே பார்க்கலாம் என்று முடிவு பண்ணி
முதலில் என் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டேன்.
இதற்க்கு
நடுவில் , சென்ற மூறை எங்கள் லேப்ல மூன்று ஜூனியர் மாணவர்கள்
சேர்ந்தார்கள். எங்கள் அலைவரிசை எல்லா விசயத்திலும் ஒற்று
போகும். மொத்தத்தில் விட்டு கொடுத்து வேலையே பார்போம். யாரையும் எந்த
இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம். சரி நாம் அனைவரும் சேர்ந்து பத்ரி
நாத், கேடர் நாத், லதாக், லெஹ் போலாம்னு முடிவு பண்ணினோம். அதற்க்கு
ஏற்றார் போல வாத்தி சுமார் 15 நாள் விடுமூறையில் லதாக் செல்வதாக சொன்னார். சரி அவர் போகும் இடத்திற்கு நாம் ஏன் போக வேண்டும், நாம் பத்ரி
நாத், கேடர் நாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போலாம்னு பக்கவ பிளான் போட்டு,
டிக்கெட் புக் பண்ணி , தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நான் முன்
நின்று பண்ணினால்,வழக்கம் போல தல தான் பயணத்தை மாற்றி விட்டார். அது போக பத்ரி நாத், கேடர் நாத், இரண்டும் வேவ் வேற ரூட் . கேடர் நாத் போக குறைந்தது ஐந்து நாட்கள் ஆகும். இது டெல்லி ல இருந்து இல்லை. நம்ம ஹரித்வார்ல இருந்து..அது போல பத்ரி நாத் குறைந்த பட்சம் மூன்று நாட்கள். இந்த ஸ்தலங்களை நான் பார்க்க வேண்டும் என்பதற்கு விஜய் டிவி யில் வந்த ரஜினியின்பாபாவை தேடி நடந்தது என்ன தொடரில் இருந்து.. இருக்கிற ஐந்து நாட்களில் இவை அனைத்தையும் பார்க்க முடியாது என முடிவு பண்ணி பத்ரி நாத் , ஹரித்வார், ரிஷிகேஷ் என முடிவு பண்ணினேன்.
என் சக நண்பர்கள் இரண்டு பேருக்கு கிளம்புற இரண்டு நாட்களுக்கு முன்பு செம காய்சல்.. அவர்கள் காய்சல்
குறைந்தால் வருவதாக சொன்னார்கள். ஆனால், அவர்களை பார்த்தால் பாவமாக
இருந்தது . எங்கயும் அழைத்து செல்வது பெரிய விஷயம் இல்லை.அங்கு போய்
உடம்புக்கு ரொம்ப முடியாட்டி என்ன பண்ணுவது என்ற காரணத்தில் அந்த ட்ரிப்
கிளம்புற இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் பண்ணினேன். சரியான பல்பு
மற்றும் ஆப்பு பணம் விசயத்தில்.. சரி, யாரையும் தொல்லை படுத்த வேண்டாம். அலஹாபாத்மற்றும்
காசி செல்வதாக முடிவு பண்ணினேன். ரயில் வண்டியில் இடம் இல்லை. எனக்கு
தெரிந்த அரை குறை ஹிந்தியில் சமாளிக்கலாம் என மிகுந்த தன்னம்பிகை. சரி
அங்கு போய் டிக்கெட் எடுத்து சமாளிக்கலாம் என முடிவு பண்ணினேன்.
சென்ற
சனி கிழமை அன்று கிளம்பினேன். என்ன நேரமோ, பேய் மழை விடியலில், சரி போக
வேண்டாம் என்று முதலில் தோன்றியது . தீடுர்னு ஒரு ஸ்பார்க், மழையாவது ,
வெங்காயம் என நினைத்து கிளம்பினேன். வண்டியில் சென்று கொண்டு இருக்கையில் அலஹாபாத்திலும் மழை பெய்தால் எப்படி திரிவேணி சங்கமத்தில் நீராடுவது என்று? நான் போகலாம் என்று நினைத்த வண்டி வழக்கம் போல் செல்லவேண்டியிருந்த ரயில் வண்டி இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
வண்டி மெதுவாக கான்பூரைக் கடந்து சென்றதும் மழை லேசாக நிற்கத் துவங்கியது.
மூன்று மணி நேரப் பிரயாணத்தின் பிறகு அலகாபாத் சென்று அடைந்தேன் . அங்கு மழை
பெய்யவே இல்லை. ஆனால் வானிலை படு ஜோராக இருந்தது. சம் திங் லைக் குற்றாலம் . ரயில் நிலையத்திலிருந்து
கிளம்பி திரிவேணி சங்கமத்தாய் சென்று அடைந்தேன். வழக்கம் போல என்கிட்டே கேமரா
இல்லை....அதனால் புகைப்படம் எதுவும் எடுக்கலை...
சங்கமத்திற்கு செல்வதற்காக படகுகள் தயார் நிலையில் இருந்தன. படகில் செல்லும்போது படகோட்டி திரிவேணி சங்கமத்தின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தார். நெறைய பக்த சிகாமணிகள் இங்கு வந்து செல்வதால் தான் யமுனையும், கங்கையும், சரஸ்வதியும் வற்றாமல் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார். இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர், பிராட்டி சீதை, இளையாழ்வாரும் இங்கு வந்துள்ளார்களாம் பிராட்டி சீதை, திரிவேணி சங்கமத்தில் பூஜை செய்துள்ளார் என்றும் சொன்னார். ரொம்பவே ஆழம் ன்னும் சொன்னார். அப்புறம் த்ரிவேணியில் எப்படி நீராடுறது? ரொம்பவும் குஷியா இருந்தது. இதற்கிடையே மற்றொரு படகு எங்களருகில் வந்து நின்றது. அதில்...கங்கை அன்னையின் அழகிய திருவுருவச் சிலை இருந்தது. அதில் ஒரு படகோட்டியும், ஒரு பண்டிதரும் அமர்திருந்தனர். அருகில் வந்து கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளுக்கு பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மூன்று தேங்காய், பழம் இத்யாதிகள் வைத்து...பண்டிதர் மந்திரங்களை சொல்லச் சொல்ல...பின்மொழிந்து . (அடியேனுக்கு புரிந்தவரை...அந்த மந்திரங்களில்....குடும்ப நலனும், முன்னோர்களின் ஆத்மா சுவர்க்கம் அடைவதற்கும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டுதலும்...போன்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன) இறுதியில் சில பண்டிதர்களுக்கு தானம் செய்வதாகவும் சங்கல்ப்பம் செய்யும் வாசகமும் வந்தது. (பணம் செலுத்தினால் அவர்களே அதை செய்துவிடுவதாகவும் கூறினார்கள்).
இதோ...வந்துவிட்டதே..திரிவேணி சங்கமம்....!!!!! படகு போன்ற அமைப்பின் நடுவே.....பள்ளம் அமைத்து அதில் நீராடச் சொல்கிறார்கள். அந்த பள்ளமே..மார்பு அளவுக்கு தண்ணீர் இருந்தது.பள்ளத்தின் இரு பக்கங்களில் கட்டைகள் வைத்துள்ளனர்..அந்த கட்டைகளை பிடித்துக்கொண்டு மூழ்கி எழலாம். யமுனை, கங்கை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் இடமே திரிவேணி சங்கமம். யமுனை ஆற்றின் நிறம் கறுப்பு ன்னு சொன்னாங்க. (ஆனால்...கருப்பாகத் தெரியலை...பச்சை கலந்த பிரவுன் போலத் தெரிந்தது). கங்கை நதி வெள்ளை நிறம் ன்னு சொன்னாங்க. (தூரத்தில் இருந்து பார்த்தா தான் வெள்ளையா தெரியுது..!!!!) சரஸ்வதி நதி வெளியே தெரியாதாம்..அது அந்தர்வாகினி ன்னு சொன்னாங்க. ஸ்நானம் முடிந்ததும்...பால் சமர்பிக்கிறோம் ன்னு சொல்லச் சொல்லி எங்களது கைகளில் பால் என்ற பேரில் தண்ணியை ஊற்றினார்கள். கரைக்கு அருகே...சாம்ராட் அசோகரின் கோட்டை இருக்கிறது. (பூட்டி இருந்தது...உள்ளே போக முடியலை) அதனருகே...பாதாளபுரி கோயில் இருக்கிறது. பாதாளபுரியில் ஒரு பெரிய ஆலமரம் (வட வ்ருக்ஷம்) இருந்தது. அதனடியில் ஸ்ரீ ராமர், சீதா பிராட்டி மற்றும் இளையாழ்வார் மூவரும் மூன்று இரவுகள் தங்கி விஸ்ராந்தி செய்தனர் ன்னு சொன்னாங்க.
ராமர்,
கிருஷ்ணர், காளி மாதா, யமராஜர், யுதிஷ்டிரர், சனீஸ்வரர், ஹனுமான்,
பிள்ளையார் எல்லாரும் இருந்தாங்க. எல்லாருமே வட இந்தியா ஸ்டைல் ல
இருந்தாங்க. பாதாளபுரிக்கு அருகில் ஒரு பெரிய ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. அங்கு சென்று
வரலாம் ன்னு ஆஞ்சநேயர் கோயில் நோக்கி விரைந்தோம்...போகும் வழியில் ஒரு
குட்டி யானை, பிள்ளையார் போலவே அந்த யானைக்கும் வலது தந்தம் பாதி தான்
இருந்தது. திரிவேணி சங்கமத்தின் பக்கத்தில் இருந்தாலும் யானையை
குளிப்பாட்டவே இல்லை, பாவம் யானை.ஆஞ்சநேயர்
கோயிலினுள் நுழைந்தோம். ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில்...அனால் தரையோடு
தரையாக.....இருந்தார் (horizontal position). அவரது திருமேனி முழுதும்
சிந்தூரம் பூசி இருந்தனர். அங்கிருந்து சற்று மேலே சென்றால் ஸ்ரீ ராமர்
சந்நிதி. இந்தக் கோயிலின் வாசலில் நின்று பார்த்தால்...நம்ம ஊர் கோயில்
மாதிரி ஒரு பெரிய கோயில் தெரிஞ்சுது.எந்த ஊருக்கு போனாலும் அங்கு எந்த
ஓட்டலில் சாப்பாடு நல்லா இருக்கும் என கேட்பேன். இந்த ஊரில் கிட்ட தட்ட
சுமார் ஒரு மணி நேரம் அலைந்து மதிய உணவை "பாபா" உணவகத்தில் முடித்துக்கொண்டு, மறுபடி அலஹாபாத்தில் உள்ள வேறொரு ரயில் நிலையத்திற்கு வந்தேன்.
வரும் வழியில் கொட்டு மழை, ரிக்ஷாவில் நனைந்து கொண்டே ... திரிவேணி சங்கம ஸ்நானம் போதாது ன்னு...சொக்கநாதர் கருணையால் ஆகாச கங்கை ஸ்நானம்.
நாளை காசி யாத்திரை பற்றி பார்போம்
Nalla irruku mapilai
ReplyDeletekalaku mama... highlight nee thaniya ponathu than.. :)
ReplyDeletegoogd neengal ippodhu endha ooril ulleerkal
ReplyDelete