Search This Blog

Tuesday, July 12, 2011

என்ன ஊர்.. சிங்கப்பூர்.ஒவ்வரு மனிதனுக்கும் ஒவ்வரு ஆசை.. எனக்கு சிறு வயது முதலே சிங்கப்பூர் மேல் ஒரு காதல். எனக்கு தெரிந்த வரை என் அனைத்து  நண்பர்களுடைய கனவும் அமெரிக்கா தான். ஆனால் , விதி  யாரை  விட்டுச்சு. என்னையும் சென்ற வருடம் அமெரிக்க அழைத்து சென்றது. இதோ  இந்த வருடம் சிங்கப்பூர்..

ஏர்  இந்தியா பயணம் 

எனக்கும் என் வாத்திக்கும் ஒரு பொருத்தம்.. நான் எங்கே கிளம்பினாலும் கடைசி நிமிடம் வரை எதாவது ஒரு வேலை சொல்லி, அதை முடித்து விட்டு போகும் படி சொல்லுவார். அவர் செய்த ஒரு குட்டி விளையாட்டால், போர்டிங் க்ளோஸ் பண்ணதுக்கு அப்புறம் லக்னோ சென்று அடைந்தேன்.. என்னை அந்த மாங்கா உள்ளே அனுப்ப வில்லை.. கடைசி மேனேஜர் போய் பார்த்து கெஞ்சி , பிச்சை எடுத்து அந்த ஆள் சொல்லி உள்ளே விட்டான்..

உள்ளே போய் பார்த்தால் விமானம் ஒரு மணி நேர தாமதம். விதி :(. சரி அடுத்து டில்லி விஷயத்தை பேசுவோம். கடைசி நேரம் ஆனதால், என் பைகள் அனைத்தையும், செக் இன் போடவில்லை. டெல்லி போய் போட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அங்கே போய் பார்த்தால் அன்று இரவுக்கு பதிலாக அடுத்த நாளைக்கு டிக்கெட் கொடுத்து இருந்ததை கவனித்தேன்.. அங்கே போ, இங்கே போ என்று ஒரு இரண்டு மணி நேரம் என்னை அலைகழித்து கடைசியில் டிக்கெட் வாங்கி, immigration போனால் செம கூட்டம். அங்கே இரண்டு மணி நேரம் காலி.. செம பசி.. ஆனால், டெல்லி ஏர் போர்ட் மாத்ரி வேற எங்கயும் சாப்பாட்டுக்கு கொள்ளை கிடையாது.. இரண்டு இட்லி ரூபாய் 120 . மயக்கம் வராத குறை.. கை கொடுத்து உதவியது சப் வே.. எனக்கு தெரிந்து இங்கு மட்டும் தான் பணம் கம்மி மற்றும் வயிர் நிறைந்தது..

சரி சிங்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். 

அனைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.. ATM  கார்டு போல ஒரு கார்டு வங்கி வைத்து அதில் பணத்தை நிரப்பி  கொண்டால் பஸ் மற்றும் ரயில் டிக்கெட் எடுக்க தேவை இல்லை. இரண்டிலுமே குளிர் சாதன வசதி இருக்கிறது. பஸ்சில் ஏறிய வுடன் தங்கள் கார்டு மற்றும் அது இல்லை என்றால் சிலரையை போட்டு பயணத்தை தொடரலாம். அதை போல் இறங்கும் போதும் கார்டை swipe செய்து விடவும். இல்லை என்றால் பைசா வேஸ்ட் :( ரயில் எத்தனை நிமிடங்களில் வரும் என்பதை அங்கே உள்ள டிவீயில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலின் உள்ளே எதையும் சாப்பிடக்கூடாது மீறினால் அபராதம். அனைத்து நிறுத்தங்களிலும் நம்மை யாருடைய உதவி இல்லாமல் வழி நடத்தி செல்ல தகவல் பலகை உள்ளது. விமான நிலையத்தில் இருந்து நகரத்துக்கு ரயில் மூலமே வந்து விடலாம். நான் இதை தான்  பயன் படுத்தினேன். 


மழை பெய்யுது , மழை பெய்ததற்கான அடையாளமே இருக்காது. என்ன மழை பெய்தாலும் வடிந்து விடும். நான் அங்கே இருக்கும் போது இரு நாட்கள் நல்ல மழை பெய்தது.நான் தங்கிய இடத்தில் இரவு 12 மணிக்கு கூட சில நபர்கள் ஜாக்கிங் ஓடி கொண்டு இருந்தார்கள்.இரு சக்கர வாகனங்கள் மிகவும்  குறைவு நான்கு சக்கர வாகனங்களே அதிகம். ஆனால், நம்ம ஊர் போல அங்கேயும் எங்கு சென்றாலும் ஒரே மக்கள் தலை தான்.


சிங்கப்பூரிலேயே மிகவும் பழைமையான இடங்களில் லிட்டில் இந்தியா. நம்மவர்கள் வாழும் இடம். இது மாத்ரி ஒரு குப்பையான இடத்தை நான் சிங்கையில் பார்க்க வில்லை. எவனும் எந்த ஒழுக்கத்தையும் கடை பிடிப்பது இல்லை. இந்திய பெயரை கெடுக்கவே சில மனிதர்கள் இங்கே இருகிறார்கள் . ஓர் இந்திய  ஓட்டலில்  சாப்பிட்டேன் . மகா மட்டம் . சிங்கையில் இந்திய உணவகங்கள் தவிர வேறு எங்கேயும் குடிக்க தண்ணீர் தர மாட்டார்கள். சிங்கை பார்த்து நம் கற்று கொள்ள வேண்டியது :பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை உள்ளது.

பொது இடங்களில் குப்பை போடக்கூடாது.

வாகன ஓட்டிகள் ( இரு சக்கரம் ) தலைக்கவசம் அணிவது கட்டாயம் .

பேருந்து மற்றும் வண்டிகளில் ஹார்ன் அடிக்க மாட்டார்கள்.

இரவு நேரத்தில் கூட சாலையில் யாரும் இல்லை என்றாலும் சிக்னலை மதித்தே செல்கிறார்கள்.

அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். நானும் ரயில் நிலையத்தை தவிர மற்ற இடங்களில் எங்கு அதை பொருத்தி உள்ளனர் என பார்த்தேன் ஓய்ந்து போனேன்.

சென்டோசா என்ற இடம், நைட் சபாரி, கிளார்க் கீ  ஆகிய யாடங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியது. Mr. Cool என அடை மொழி வழங்கிய அக்கா சரண்யாவுக்கு நன்றிகள்..

 எந்த அளவுக்கு நான் விரும்பினேனோ அந்த அளவுக்கு இப்போ வெறுக்கிறேன். 


4 comments:

  1. // எனக்கும் என் வாத்திக்கும் ஒரு பொருத்தம்.. நான் எங்கே கிளம்பினாலும் கடைசி நிமிடம் வரை எதாவது ஒரு வேலை சொல்லி, அதை முடித்து விட்டு போகும் படி சொல்லுவார்.//

    எனக்கும் அப்படி தான் ...i think this is the case for all phd students...

    ReplyDelete
  2. Cool dude. one another blogger also participated in that conference..

    http://ponniyinselvan-mkp.blogspot.com/2011/07/3.html

    ReplyDelete